About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 26 டிசம்பர், 2016

வேதம் உயிர்நாதம்


எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது. ஆனால் கவிப்பாடல் புனைய எப்போதாவது வரும். எப்படின்னு யோசிக்கிறீங்க இல்ல? எனக்கும் தெரியலை. முகநூல் நண்பர் ஒருவர் திருவண்ணாமலை வேதபாடசாலா பற்றிய படத்தை நேற்று பதிவிட்டார். 

அதை பார்த்துக்கொண்டிருக்க திடீரென்று மனதில் தோன்றியதை புனைந்தேன். இதில் இலக்கண சுத்தம், சந்தம், மரபு, எல்லாம் உள்ளதா என்று எனக்கு சற்றும் தெரியாது. ஆங்கிலத்தில் டைப் செய்த ஸ்லோகத்தை அப்படியே online converter மூலம் தமிழ் மற்றும் சமஸ்க்ருத எழுத்துருவுக்கு (fonts) மாற்றினேன்.



புனைந்த பாடலின் பொருள், "வேதத்தை காப்பதுவே தலையாய கடமை. அதை அழியாமல் காத்தலே மனிதன் ஞானம்பெறும் வழி. தெய்வத்தின் அருள் வேண்டுமானால் கூட்டாக தர்மத்தை போற்றி பாதுகாக்கணும். தர்மநெறி தான் தெய்வம், தர்மத்தை காத்தால் அது நம்மை காக்கும்."
ஐந்து வேதங்களுள் பிரணவ வேதமே ஆதாரம். பஞ்ச பிரம்மத்தை சிருஷ்டித்தது விஸ்வகர்மரின் பேரருள் லீலை. சத்யோஜாதா வாமதேவம் தத்புருஷம் அகோரம் என முகங்கள்கொண்டும், ஈசான திக்கில் நிலைகொண்ட ஒரு முகமே தியானத்தில் இருக்கிறது.
இப் பிரபஞ்சத்தை சதாசிவரின் பிராணன் நாதமாக இருந்து காத்தருள்கிறது. அந்த பரபிரம்மத்தின் மனதோடு தன் வெளிப்பாடான அனைத்து ஜீவராசிகள் லயித்து ஒன்றி இருக்கிறது. திரிசூலம் ஏந்தி, நெற்றியில் திரிபுண்டர சாம்பல் தரித்து, மூவுலகையும் தன் மூன்று கண்கள் கொண்டு ஆளும் பரமனே அ, , ம சேர்ந்த ஓங்காரம்.... ஓம் நமசிவாய!

ஐதராபாத்தில் உள்ள என் அன்பு நண்பர் திரு.சந்தோஷ், இந்த சமஸ்க்ருத கவிதையை வாசித்து தன் கருத்தைத் தெரிவித்தார். இவர் என்னைவிட மெத்த கல்வி-கேள்வி ஞானம் படைத்தவர். ஆன்மிகம், சமயம், வேதம் சார்ந்த விஷயங்களை ஆழமாக அறிந்தவர். ஸ்ரீ வீரப்ரம்மம் பற்றிய ஒர் ஆங்கில நூல் எழுதியவர்.















- எஸ். சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக