About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 7 டிசம்பர், 2016

ஐயே! அந்தப் பதவி நமக்கு வேண்டாம்.


ஒரு மர்மத் தொடர் படிப்பது போல், ஜெயலலிதாவின் இறுதி நேரங்களை விளக்கும் கட்டுரைகள் தினமும் முகநூலில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த துப்பறியும் நபர்கள் உள்ளூர்/உள்நாடு/வெளிநாடு என்று இருந்தபடி செய்தி சேகரித்து பத்வேற்றுகிறார்கள் போலிருக்கு.
செப்டம்பர் 22 இரவில் நடந்தது என்ன, வீட்டில் எதற்காக சண்டை நடந்தது, மருத்துவமனையில் அனுமதி, அங்கு அவசர கூட்டத்தில் அரங்கேறியது என்ன, அவசர உயில், தினம் ஒரு மருத்துவ அறிக்கை பற்றி அலசல், பிறகு மருத்துவ அறிக்கையும் நின்று போனது, மரணச்செய்தி அறிவிப்பில் முரண்பாடு, நல்லடக்கம், பற்றி பல கோணங்களில் பல கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன.

இப்படியெல்லாம் தன்னை ஆட்டிப்படைத்துக் கொள்ளவும், தன்னையே நிர்வாகிக்கும் அளவிற்கு தன் எதிர்கால வாழ்க்கையையே தோழியிடம் ஒப்படைத்துவிட்ட இந்த ஜெ. அம்மையாரை நினைத்தால் அனுதாபத்தைவிட எல்லோருக்கும் கோபம்தான் வரும். இப்படியும்கூட ஒரு முதல்வர் இருப்பாரா என்ன? முதன்முறை அவர் டிசம்பர் 1996ல் கைதானபோது, துக்ளக் இதழின் அட்டைப்படத்தில், "வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" என்று பாட்டு பாடிக்கொண்டே சசிகலா தன் உடன்பிறவா சகோதரி ஜெயலலிதாவை மலை உச்சிக்கு அழைத்துபோவதுபோல ஒரு கார்ட்டூன் வந்தது. அது இப்போது நினைவுக்கு வருகிறது. 'சோ' சார் மெய்யாலுமே ஒரு தீர்க்கதரிசி!
கடந்த ஒரு மாதமாக நாட்டில் ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் அமக்களத்தில் எல்லோரும் இருந்தனர். ஒரு கட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை எல்லோரும் மறந்து விட்டதுதான் உண்மை. ஆனால் சலசலப்புகள் என்னமோ இருந்து கொண்டுதான் இருந்தன.  தினம் ஒரு திகில் தொடர் அச்சமூட்டும் வகையில் வந்து கொண்டிருப்பதை படிக்கும் போது, அரசியல் தலைவர் ஆக வேண்டும் என்ற ஆசை இளம் தலைமுறைக்கு வரவே வராது. 
ஐயே! அந்தப் பதவி நமக்கு வேண்டாம். வேறு நல்ல வேலைக்குப் போகலாம். 
Image may contain: 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக