"பிரபஞ்சத்தில் 'ஆஹத நாதம்' நம் செவிகளுக்கு கேளாமல் அண்டம் முழுதும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் வான்வெளியில் நம் காதுகளுக்கு எட்டாத ஓசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. பர வெளியில் ஞானிகளால் மட்டுமே கேட்ககூடிய இதை 'அனாஹத நாதம்' என்றும், பூமிக்கு அருகில் ஒலிக்கும் கேட்கக்கூடிய ஓசைகளை 'ஆஹத நாதம்' என்றும் பிரித்துச் சொல்கின்றனர். பஞ்சமுக விஸ்வகர்மர் இந்த அனாஹத பிரம்ம நாதத்தை உண்டாக்கி அதை தன் அகோர (தெற்கு) முகத்தில் ஞானசக்தி என உதிக்கவைத்தார், இந்த சக்தியை பிரம்மனின் நாவினில் சரஸ்வதியாக உருவம் தந்து வெளிப்படவைத்து, அவள் மூலம் ஆஹாத நாதமாய் மாற்றிவிட்டார்."
ஆக, மொழியை இகழ்ந்தால் ஈசனையே நிந்தித்த பாவம் வரும். தமிழ் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம் எல்லாம் எனக்கு ஒரே நிலைதான். தமிழில் எழுதினால் எனக்குப் பெருமையோ, ஆங்கிலத்தில் எழுதினால் சிறுமையோ, என ஒருபோதும் எனக்குத் தோன்றவில்லை. எல்லாமே கலைவாணியின் அம்சம்... சிவ ஸ்வரூபம் ஆகும். போன பதிவில் சமஸ்க்ருதம் தெரியாமலே என்னை பாடல் எழுத வைத்த ஈசனின் செயல் இதற்கு ஒரு சான்று.
பஞ்சமுகம், பஞ்சபிரம்மம், பஞ்ச நதி, பஞ்சாட்சரம், பஞ்ச பூதம், பஞ்சலோகம், பஞ்சாம்ருதம், பஞ்சாங்கம், பஞ்ச லிங்கம், பஞ்சகோசம், பஞ்சபட்சி, பஞ்சகவ்யம், பஞ்ச நந்தி, பஞ்சகுமாரர், பஞ்சகிருத்தியம், பஞ்ச பிரதிஷ்டை, பஞ்சபாஷாணம், பஞ்சேந்த்ரியம், பஞ்ச நாதம், பஞ்சதீபம், பஞ்சரிஷி,பஞ்சவேதம்,... இப்படி எத்தனையோ பஞ்ச தத்துவங்கள் நம்மை பரவசப்படுத்தும்.
நேற்று முகநூலில் இந்த பஞ்ச தத்துவங்களைப் பற்றி சொல்லியிருந்தேன். "அதை தமிழ் மொழியில் விளக்கினால் சிறப்பாக இருக்கும்" என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். அவருக்காக ஒரு பாடல் புனைந்தேன். அதிலுள்ள ஈசனின் 'பஞ்ச' தத்துவங்களை கண்டுபிடித்து புரிந்து கொள்வார் என நினைக்கிறன்.
ஒவ்வொரு வரியிலும் இடம்பெறுபவை : பஞ்சமுகம், பஞ்சவேதம்; பஞ்சபிரம்மம், பஞ்சகிருத்தியம்; பஞ்சரிஷி, பஞ்சநதி; பஞ்சபாஷாணம், பஞ்சகவியம்; பஞ்சநாதம், பஞ்சாட்சரம்; பஞ்சலோகம், பஞ்சபூதம்; பஞ்சேந்திரியம், பஞ்சதீபம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக