தஞ்சை பெரிய கோவில் (எ) இராஜ ராஜேசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜாராஜன். இவர் அரியணை அமர்ந்தது கி.பி.985. இவருடைய 29 ஆண்டுக்கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். கி.பி1014 ல் இவர் ஆட்சி முடிந்தது.
இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட, பொன்வேலை, இரும்பு உருக்கு அணுகு முறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு ஆட்சியில்தான் என்பது குறிப்பிடவேண்டும். அங்கு ஒரு இடத்தில் பொன் வேலை நடந்ததாலோ / பொன், தானியங்கள் கிடைக்கும் களஞ்சியம் என்பதாலோ அது 'கஞ்சம்' / 'கஞ்சமலை' Ganjam என்றும் அழைக்கப்பட்டது. மொத்தம் 52 கோவில்கள் கட்டப்பட்டன். 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23. தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டிகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணி கலன்கள் பூண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அக்க்லாலத்தில் நடைமுறையில் இருந்தவை.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட சிலநகைகளின் பெயர்கள் :-- ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]காறை [கழுத்து அணி ], கச்சோலம் [ இடை அணி], கலாவம் [இடை அணி], காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி], மோதிரம் [இரத்தினம் முத்து ], முத்து மாத்திரை [காது அணி], பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ] பதக்கம். என்கிறது. அதுபோக என்னென்ன நககைகள் எவ்வளவு எடையும், என்னவகை ரத்தினங்களும் இருக்கவேண்டும் என்றும் ஆணை பிரப்பிர்த்தாக கல்வெட்டுகள் சொல்கிறது.
தண்டவாணி (காலணி-சிலம்பு போல), காந்திகை ( கழுத்து அணி), மிஞ்சு (மெட்டி), கொப்பு ( காதணி),மகுடம், குதம்பை ( காதணி), பட்டம் (மகுடம்), பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்), சப்தசரி ( ஏழு சங்கிலிகள்), சிடுக்கு, சூடகம் (வளையல்), பாத சாயலம் ( கால் அணி), சூரி சுட்டி (நெற்றியில் அணிவது), வீரப்பட்டம் (தலையில் அணிவது), வாளி (காதணி), காறை கம்பி (காதணி), திருகு, மகரம் (காதணி), உருட்டு திரிசரம் ( கழுத்து அணி), தூக்கம் (காதணி), நயனம் கண்மூடி பொற்பூ, பொட்டு. பாசமாலை தோள் வளைதாலி, தாலி மணிவடம், தாழ்வடம், கடுதிரள் மணி, வடம்வளையல், வடுகவாளி, வடம்தோடு, திருவடிக்காறைகால், வடம்கால் மோதிரம், சன்ன வடம், திருகுகால், காறை மாலை என்று என்னென்னமோ இருந்துள்ளது.
இதில் நாம் பெரும்வாரியான பெயர்களை கேள்விபட்டதுகூட இல்லை. (Antique jewellery) புராதான நகைகள் செய்யும் ஆச்சாரிகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மூச்சுகாற்றில் சுழலும் மூக்குத்திகள் அன்றே செய்தனர் என்றும் தெரிகிறது. இதில் பல நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது. ஆனால் சோழர் கால சிற்பங்களில் இவை எல்லாம் வடிக்கபட்டிருக்கும். அவற்றை நாம் பார்த்தால்தான் விளங்கும்.
அணிகலன்களை அணிவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும், மருத்துவ ரீதியிலும், மனக் கட்டுப்பாடு ஏற்படுவதற்கும், உணர்சிகளை மட்டுபடுத்தவும் தக்கபடி வடிவமைக்கப்பட்டது என்று அறிகிறோம். பிரம்மிப்புதான் போங்க!
பின் குறிப்பு :- தஞ்சை பெரியகோயில் கட்டிய 'குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன்' ஸ்தபதியின் வழிவந்த குலத்தோன்றல்தான் காலஞ்சென்ற 'சில்பகுரு' டாக்டர் வி.கணபதி ஸ்தபதி என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக