About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 12 ஜூன், 2019

வனத்தினுள் நடக்கும் அமானுஷ்யங்கள்

‘குரங்குகள் தாம் இறக்கும் காலத்தை முன்னமே அறிந்துகொண்டு அதற்கேற்ப ஆள் நடமாட்டமில்லாத வனத்திற்குச் சென்று உணவு நீர் உட்கொள்ளாமல் மரப்பொந்துக்குள் தியானத்திலிருந்து உடல் மெலிந்து போகுமாம். தக்கநேரம் வரும்போது பூமியில் தன் கண்ணுக்குப் புலப்படும் பிளவில் இறங்கி உடலை நுழைத்துக்கொள்ள, பூமியில் அப்பிளவு மெள்ள மூடிக்கொண்டுவிடும்’ என்று வன சரகர்கள் சொன்னதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இதை நாம் ஒருபோதும் பார்த்ததில்லை என்றாலும் அது ஏன் அப்படி நடக்கிறது?

யமனின் யோசனைப்படி இராமபிரானின் கடைசி நேரத்தில் அனுமனை திசைத்திருப்ப பூமிப் பிளவுக்குள் விழுந்த இராமனின் மோதிரத்தைத் தேடி எடுத்துவர பாதாள உலகிற்கு இராமன் அனுப்புகிறார். பாதாள லோகத்தில் வாசுகி அனுமனைப் பார்த்து “இந்த மோதிரக் குவியலில் எது இப்போது விழுந்த உன் ஸ்ரீஇராமரின் மோதிரம் என்பதைக் கண்டுபிடித்து எடுத்துக்கொள்” என்று சொல்லும்போது விபரீதத்தை உணர்கிறார். “ஒவ்வொரு மகாயுகத்திலும் ஒரு குரங்கு இங்கே இராமனின் மோதிரத்தைத் தேடிக்கொண்டு வரும் நேரத்தில் அங்கே இராமன் வைகுண்டம் போயிருப்பார்” என்று வாசுகி விளக்குகிறாள்.


கண்களில் நீர் வழிய இராமனின் தரிசனத்தை அனுமன் வேண்டுகிறார். அப்போது “நீ நித்திய சிரஞ்சீவியாய் சூரியசந்திரர் உள்ளவரை அழிவின்றி ஜீவித்திருப்பாய், கலியுகத்தில் ஸ்ரீராம பகதர்களைக் காத்தருள்வாய்” என்று அசரீரி ஒலிக்கிறது.

இராமனின் கடைசி காலத்தில் அனுமன் பாதாள லோகத்தினுள் சென்றதை நினைவூட்டும் விதமாக குரங்கின் கடைசி நிமிடமும் அமைகிறது என்பது என்னுடைய கருத்து. நாம் நினைப்பதுபோல் அனுமன் குரங்கல்ல, வித்யாதரா. அதாவது அமானுஷ்ய தெய்வ சக்திகள் பெற்ற வானர மனிதர். மேற்கத்தியர்கள் இந்த வகையைச் சேர்ந்த primateகளைப் பொதுவாக Neanderthal என்பார்கள். அதைத்தாண்டி அவர்களுக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியாது.

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக