About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 23 ஜூன், 2019

பூமியால் நாம், நம்மால் பூமி

பூமியில் உள்ள நாடுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார் கவனகர் திரு.கனகசுப்புரத்தினம். அவை:

1.சோக பூமி
2.போக பூமி
3.யோக பூமி
4.ஞான பூமி

பசி, பஞ்சம்,பட்டினி என மக்கள் அலையும் நாடுகள் அனைத்தும் சோக பூமி.

ஒட்டகம், ஆடு மாடு பன்றி, வாத்து கோழி, பாம்பு, பல்லி, தவளை எனக் கிடைத்தது எல்லாம் தின்று கொழுக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் போக பூமி.

பக்தி,பூஜை,குரு உபதேசம், யோக முயற்சி போன்றவற்றில் ஆர்வம் கொண்டு உள்ள இந்தியா தான் உலகின் ஒரே யோக பூமி.

அதையும் தாண்டி கர்மவினைகளை வென்று கடவுளையே தரிசிக்கும் ஆற்றல் மிக்க ஞானியர்களைக் கொண்டுள்ள தென்னாடு தான் உலகின் ஒரே ஞான பூமி ஆகும்.  பூமியில் பிறந்த நாம் அப்பூமி எத்தகைய பண்புடையது என்பதை நம் வெளிப்பாடு காட்டிக் கொடுத்துவிடும்.

அப்படிப்பட்ட இப்பூமியில் எல்லாருமே ஞான சீலர்கள். அப்படி இருந்தும் மற்ற பூமியின் மக்களைப்போல் நடந்து கொண்டால் அது அவரவர் ஊழ்வினைப் பயனே.

கவனகர் ஐயாவின் தந்தையார் காலஞ்சென்ற 'தசாவதானி' இராமையா பிள்ளை அவர்களின் கவனகத்தை நான் பள்ளி மாணவனாக இருந்தபோது கண்டு வியந்துள்ளேன். கண் பார்வை இல்லாவிட்டாலும் அவதானக் கலையில் அவருடைய நினைவாற்றல் திறன் அசாத்தியம். வேங்கடம் முதல் குமரி வரையுள்ள இந்த ஞான பூமியில் மட்டும்தான் இவை நடக்கிறது. திருப்பதியிலும் காஞ்சியிலும் இதைவிட அதிகமான சதாவதானம் சகஸ்ராவதானம் காட்டியவர்கள்  கடந்த நூற்றாண்டுகளில் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக