பிரமபத்திரம் (எ) புகையிலை, கோரக்கர் மூலி (எ) கஞ்சா மூலிகையும் சித்த வைத்தியத்தில் நல்ல வலி நிவாரணி. நவீன காலத்தில் ஒரு நூற்றாண்டாக அதன் நச்சுத் தன்மை நீக்காமல் போகர் தாளில் சுருட்டப்பட்ட நான்கு விரற்கடை நீளமான சிகரெட்டை இக்காலத்தில் போதையூட்ட மூளை இளைப்பாற 'உழைப்பாளி' மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
சித்தர்கள் சமாதிக்குச் செல்லும்முன் தங்கள் உடல் வலுப்பெற செந்தூர கற்பம் உண்டு சிலகாலம் கழித்து அதன் வீரியத்தைப் புதுப்பிக்க சுத்தி செய்த புகையிலை கஞ்சா வனமஞ்சள் ஊமத்தை ஓமம் முதலான இன்னும் பல மூலிகைகளை அரைத்து வில்லைகளாக காயவைத்து, கபாலத்தில் புகை தாக்கும்வரை இழுப்புக் கணக்கிட்டு அதைப் புகைத்தனர்.
ஆனால் இக்காலத்தில் சுத்தி செய்யப்படாத புகையிலையைப் புகைக்கும்போது ஒருங்கே கிடைக்கும் தீய பலன்களைப் பட்டியலிடலாம். நுரையீரலில் படிமானமும், நெஞ்சுக்கூட்டில் கபமும், நரம்புப் புடைப்பும், நகம் சருமம் கருத்தலும், நோய்விதிப் பரீட்சையில் வெளிப்படும் அம்சங்கள். அதைவிட நவீன vape நல்லதோ என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக