About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

தெளிவற்ற நிலை!

ஒவ்வொருவருக்கும் தன் கடவுள் நம்பிக்கையை /மறுப்பை வெளிக்காட்டிக் கொள்ள உரிமையுண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மறுப்பை வெளிக்காட்ட கோயிலில் சிலையை உடைப்பது, வழிபாட்டு இடத்தில் பெட்ரோல் குண்டு வீசுவது, பக்தர்களையும் அர்ச்சகர்களையும் தாக்குவது, கடவுள்களின் ஓவியங்கள் மீது பெயிண்ட் அடிப்பது, ஆன்மிக கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவது, பக்தர்களின் மனம் புண்படுமாறு நாகரிகமற்ற வாசகங்களைச் சுவற்றில் எழுதுவது, போன்ற செயல்களையே பொதுமக்கள் எதிர்க்கிறார்கள்.

IPC சட்டப்பிரிவு 295A ன்படி 'மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்யவேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது செய்கையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.'

இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு-19 'தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை உண்டு' என்கிறது. ஆனால் நாத்திகர்கள் செய்யும் அராஜகச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 295A ன்படி இதுநாள்வரை ஏன் தண்டித்ததில்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக