About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மயக்கத்தில் விக்ரம்!

'நிலவு ஒரு பெண்ணாக நீந்துகின்ற அழகோ...' என்று திரைப்படப் பாடல் வரிகள் வரும். அழகு என்றால் அங்கு ஆபத்தும் இருக்கும். அல்லவா? நிலவு/நிலவன் இன்றுவரை தன்னுள் பல ரகசியங்களை உள்ளடக்கியது.

சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேன்டர் வெற்றிகரமாகப் பிரிந்து நிலவின் ஈர்ப்பினால் பயணித்தது. நிலவின் தென் துருவத்தில் 2கிமீ உயரத்தில் விக்ரம் தரையிறங்கும் சமயம் வேகம் கூடியதால் தரையைத் தொடும்முன் பூமியுடனான தொடர்பு நின்றுபோனது என்கிறது இஸ்ரோ.

கடைசி சில வினாடிகளில் அது தரையில் இறங்கி இருக்கும் அல்லது மோதி விழுந்திருக்கும். அதுவரை நன்கு இயங்கிய இயந்திரத்தின் செயல்பாட்டில் திடீரென என்ன கோளாறு வந்தது? கோள்களின் தென் துருவம் எப்போதுமே மர்மம் நிறைந்த பகுதி. அமானுஷ்யமாக ஏதேனும் நடந்திருக்குமா? இச்செயல்பாடு விஞ்ஞானிகளின் கணிப்பிற்கும் திறனாய்வுக்கும் அப்பாற்பட்டது. இனி அடுத்து என்னவாகும்?

வேகமாகத் தரையிறங்கி மோதிய தாக்கத்தின் அதிர்விலிருந்து விக்ரம் சுதாரித்துக்கொண்டு பூமியின் தரைக்கட்டுப்பாடு மையத்துடன் தொடர்பை நிதானமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது திக்குத் தெரியாத நிலவின் தென் துருவ பள்ளத்தாக்கில் எங்கேனும் தொலைந்து போயிருக்கலாம். அது எங்கே விழுந்தது என்பதைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திராயன் விண்கலம்தான் கண்டுபிடித்துச் சொல்லும். ஆக மொத்தம் தரை இறங்கிய வரை இந்தியாவுக்குப் பெருமையே! பிற நாடுகள் இதுவரை முயற்சிக்காத சந்திரனின் தென்துருவ பிரவேசத்தில் முன்னோடியாக இந்தியா செய்த சாதனையிலும் சோதனை உண்டு.

கடந்த யுகத்தில் குரு காலாங்கியும் சீடர் போகரும் கோள்களில் ககன மார்க்கமாக சஞ்சரித்து அங்கிருந்து நோக்கி பூமியின் அளவையும் வளத்தையும் பால்வெளியின் பிரம்மாண்டத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்துச் சொன்னதை நாம் எல்லோரும் அறிவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக