பூமியின் இயற்கை கோளானா சந்திரனில் மின்காந்த புலம் மிகவும் குறைவு என்பது நாம் பள்ளிக்கூட பாடங்களில் படித்துள்ளோம். ஆனால் என் இளங்கலை கல்லூரி நாட்களில் அணு இயற்பியல் பேராசிரியரிடம் இது எப்படி சாத்தியம்? என்று நான் கேள்வி கேட்டதுண்டு. பூமியைப்போல் நிலவும் ஒரு உருண்டை. தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை வலம் வருகிறது. அப்படியென்றால் அதன் நிலத்தடி கட்டமைப்பினுள் கனிமங்களும் சுழலும், அதிக வெப்பத்தில் குழம்பாகவும் உருகும் சாத்தியம் இருக்க சமயத்தில் எரிமலைகளும் வெடிக்குமே என்றேன். துருவங்களும் சக்திவாய்ந்தது ஆற்றலை வெளிப்படுத்தும். ஆனால் பலவீனமானது என்று இந்த புத்தகத்தில் போட்டுள்ளது என்று நூலகத்தில் எடுத்த அமெரிக்க ஆசிரியரின் புத்தகத்தை மேற்கோள் காட்டினேன். அங்கு எரிமலைகள் தற்காலத்தில் வெடிக்கவே இல்லை, அது உறங்கும் நிலையில் உள்ளவை என்று எப்படி தீர்மானித்தனர்? Outer plasma has its own effect என்றேன்.
அது சுழலும்போது அந்த ஒவ்வொரு கனிம அணுவும் ஒரு காந்தமாகத்தான் செயல்படும். நம் பூமிக்குண்டான அதே இயல்புதானே அதற்கும் இருக்கும்? அப்படி இருக்கும்போது அதற்கு மின்காந்த புலம் பலவீனமானது என்று எப்படி கணக்கிட முடியும்? புழுதிப்புயல் முதல் நீரோடை தடங்கள் வரை அங்கு ஏற்படும்போது நாம் செலுத்தும் விண்கலத்தையோ சந்திரனை ஆராய்ச்சி செய்யும் செயற்கை கோளையோ அது பெரிய அளவில் பாதிக்காது என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? திடீரென வீசும் காந்தப் புயலோ, பரவெளி ஒளிக்கற்றை சக்தியோ ஐநூறு கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை அதை உருட்டித் தள்ளாது என்று எப்படிச் சொல்ல முடியும்? பூமியே ஒரு காந்தமாக இருக்க அதைச் சுற்றிவரும் கோளின்மீது அதன் புலம் நிச்சயமாக தாக்கத்தை உண்டாக்கும். ஆக இரு Dynamo க்கள் மத்தியில் நாம் உள்ளோம் என்றேன். அதற்கு என்னுடைய பேராசிரியர், 'Your theory is fascinating. Why don't you write an article and submit? I shall see to that it is published in our college magazine' என்றார்.
மாணவனாக அன்று நான் கேட்ட கேள்வி இன்றைக்கு கற்பனையாகவோ குப்பையாகவோ ஆதாரமற்றதாகவோ தெரியலாம். அக்கல்வி ஆண்டில் நான் எழுதிய Exploring the hidden kinetics of the moon என்ற அறிவியல் கட்டுரை முதல் முறையாக என் கல்லூரி இதழில் வெளிவந்தது. இன்று சந்திராயனின் விக்ரம் லேன்டர் கலத்திற்கு நேர்ந்த காரணத்தை யோசிக்கும்போது பழைய நினைவுகள் வந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக