About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

மாணிக்கவாசகருடன் ஈசன் நடத்திய திருவிளையாடல்

அரிமர்த்தனப் பாண்டியன், நல்ல ஜாதிக்குதிரைகளை வாங்கவேண்டி தனது முதல் அமைச்சரான வாதவூரரை (மாணிக்கவாசகரை) திருப்பெருந்துறைக்கு பொன்பொருள் கொடுத்து அனுப்பினான். அவ்வூரில் குருவாய், சிவனடியாராய் வந்தமர்ந்திருந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் மாணிக்கவாசகர். குதிரை வாங்கும் பணத்தை அங்கு ஆத்மனாதருக்குக் கோயில் எழுப்பச் செலவிட்டார். ஆடி மாதம் முடிந்து ஆவணியும் வந்தது. குதிரை வராததால் ஒற்றனை திருப்பெருந்துறைக்கு அனுப்பினான் மன்னன். அதன் பிறகு மாணிக்கவாசகர் சந்தித்த இன்னல்களை நாம் எல்லோரும் அறிவோம். மதுரை சுற்றுவட்டார காடுகளில் உள்ள நரிகளை ஈசன் குதிரைகளாக மாற்றி அரண்மனைக்கு அனுப்பினான். திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது.
கீர்த்தித் திருவகவல் 36வது வரியில் – “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.”
திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.”
ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்"
(இங்கு படத்திலுள்ள ஓலையில் இப்பாடல்தான் உள்ளது. இவ்வரியை கோடிட்டுக் காட்டியுள்ளேன். படிக்க முடியும்வரை முயற்சி செய்யுங்கள். இது திருபெருந்துறை படலத்தில் வருகிறது. ஆனால் ஓலையில் தெளிவு இல்லாததால் மேற்கொண்டு படிப்பது சிரமமாக இருந்தது. எஞ்சிய வரிகளை திருவாசகம் தளத்திலிருந்து தேடி எடுத்தேன். அது 'பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவினாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே’.)
மதுரையில் இத்திருவிளையாடல் நடந்த தினம்தான் இன்று. மாணிக்கவாசகர் அனைத்துத் தலங்களிலும் பதிகம் பாடியதை தில்லையில் சொற்பொழிவாகத் தந்தார். அதைக் கேட்க வந்த கூட்டத்தினரில் முதிய அந்தணராக வந்த ஈசன் எல்லாவற்றையும் தன் கைப்பட படி எடுத்து மொத்த சுவடிக்கட்டையும் பஞ்சாட்சரப் படியில் வைத்துவிட்டு மறைந்தான். அந்த மூலச்சுவடியை நாமும் கண்ணுற்று ஈசனின் அருட்பேறு பெறுவோம். ஓம் நமசிவாய!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக