About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

சூரியனை ஆய்வுசெய்த சித்தர்கள்

ஆதித்யா ஆதவன் பாஸ்கரன் பரிதி பானு என சூரியனுக்குப் பெயர்கள் பலவுண்டு. பூமி சூரிய மண்டலத்தில் பால் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பதை அன்றே அகத்தியர் கூறினார்.

‘‘புவி தானும் ஜோதி வெளியின் ஒளியில் மிதக்க மிதந்தே கண்டோம்
போகனும் புலிப்பாணியுஞ் சாட்சியே
பருதி குலத்து செம்மையான உயிர்
கோளிது புவியாமே’’ என்றார்.
ஜோதி வெளி ஒளி என்பது MILKY WAY என்று பொருள்பட, பருதி குலம் என்பது SOLAR FAMILY என்று பொருள் ஆகிறது.

பல யுகங்களுக்கு முன்பே அகத்தியர் காலாங்கி திருமூலர் போகர் என பல சித்தர்கள் பால்வெளியில் கிரகங்களுக்கு ககன மார்க்கமாக பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். பூமியில் மொத்த நிலம்/ நீர் பரப்பு எத்தனை சதவிகிதம் என்பதை காலாங்கி அன்றே கால் / முக்கால் பாகம் என்றார்.

சூரியனின் தன்மைகளைச் சித்தர்கள் விவரிப்பது என்ன?

"அக்கினியே அடுதி அளவு இருக்க கண்டோமே" என்று பன்னீராயிரத்தில் போகர் உரைத்தார். அதாவது ஐயாயிரத்து ஐந்நூறு சென்டிகிரேடுக்கு இணையானது என்று வெப்ப நாடி அகராதி பொருள் தருகிறது.

கோரக்கர் தன்னுடைய கோவையில்,

‘‘பருதி தனில் பிரணமிலா நீரின்வாயு நிறைய மீதக் காலே சோம்பல் பிராண காரிரும்பென கண்டோமே’’ என்றார்.

இதில் பிராணமிலா நீர்வாயு என்பது ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும். இது சூரியனின் எடையில் முக்கால் பகுதி எனவும், INERT எனப்படும் ஹீலியம், ஆக்சிஜன், கார்பன், இரும்பு என்றும் பொருள்படுகிறது.

‘‘ பருதி நிறை சூடுமலராம் - புவியெப்ப அஸ்டோத்திர நிறையாம் - மங்களவர்ணமாய் புவி காட்ட, மண்டல நீலமே கரு’’ என்பது புலிப்பாணி கூற்று.

சூடுமலர் என்பதே HOT PLASMA என்று சித்தர் வர்ணிக்கிறார். பூமியைப் போன்று நூற்றியெட்டு பங்கு எடை மிகுந்தது என்கின்றார்.

இத்தனை வெப்பம் கொளுத்த அவ்வொளி சூரியனிலிருந்து பூமிக்கு வர எத்தனை நேரமாகும்?

‘‘பருதி கிரணம் பாய்ந்து வந்திம் மண்ணையண்ட யண்டத்தில் சஞ்சாரமாகுமே பஞ்சரத மாத்திரை காலமே’’ என்றார் போகர். அதாவது ஐந்நூறு வினாடிகள் என்கிறார்.

போகர் தன் பெருநூலில் சூரியனில் உயர் தாதுக்கள் உள்ளன என்று முன்னமே உரைத்தார். அதையே பாம்பாட்டி சித்தரும் உறுதி செய்கிறார்.

‘‘மதிப்பிலடங்கா உலோக முடைத்தான் கதிரோன் - தங்கமுமுண்டு - ஒளியுலோகமுமுண்டு சாற்றுவோம் - இவையே அணுச்சக்தி தமை யெழுப்பக் கரு’’

யுரேனியம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் சூரியனில் நிறைய இருப்பதினால், NUCLEAR REACTION அங்கு எளிதில் நடைபெறுகின்றது என்கிறார். குறிப்பாக அங்கு NUCLEAR FUSION அல்ல FISSION தான் நடக்கிறது என்றும் புரியும். சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைவிட 108 மடங்கு என்று அறிந்து சொன்னார்கள்.

(சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர். ரூ.70)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக