About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

நவபாஷாணம் தொடர்கிறது...

சில மாதங்களாக போகர்/ நவபாஷாணம் விஷயங்கள் முகநூலில் நிறைய வலம் வந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. நாமெல்லோருமே அந்த உரையாடலில் பங்கு பெற்றோம், நினைவிருக்கா?
திருப்பூர் பகுதியிலிருந்து அண்மையில் ஒருவர் என்னிடம் பேசவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். நாம் என்ன முக்கியஸ்தரா, நம்மிடம் பகிர என்ன இருக்கும்? என்று நினைத்தேன். டிவி நிகழ்ச்சியையும் என் நூல்களையும் படித்துள்ளார் போலும்.
அவர் பெயர் திரு.சேகர், வயது 55, ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். இணைய தளம், மின்னஞ்சல் பற்றி எதுவும் தெரியாது. வரும் SMS தகவல்களை எங்குபோய் திறந்து படிக்கணும்னு தெரியாது. சில கம்பனிகளில் மெகானிக் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20 வருடங்களாக ஏதோ ஈர்ப்பின் காரணமாக சித்த வைத்தியம் பயின்று வந்துள்ளார்.
சில வருடங்களுக்குமுன் இவர் நாகபட்டிணம் -பேரூர் சென்றபோது, அங்கு இவர் கனவில் ஒரு முதியவர் வந்தாராம், அவர் இவருடைய இரு தோள்களுக்கு இடையே முதுகுக்கு பின்னே இருந்து (ஸ்டிக்கர் பிய்த்து எடுப்பதுபொல்) ஒரு பனையோலையை எடுத்துள்ளார். அதிலிருந்து சில பாடல்களை இவருக்குச் சொல்லி கொடுத்துள்ளார்.
அதன் பிற்பாடு அவர் ஒன்பது வகையான பாஷாணங்களை தன்போக்கில் வாங்கி அவற்றை மூலிகை சாற்றில் சுத்தி செய்துள்ளதாக சொன்னார். முன்பின் செய்த அனுபவம் இல்லாமலே இவற்றை செய்துள்ளார். சுமார் 4 கிலோ பாஷண சாமான்கள் வாங்கினர் போலும். 'நீங்க வாங்கி போட்ட பாஷாணங்கள் என்னென்னனு சொல்லுங்க' என்று நான் கேட்டேன்'. அவர் நவபாஷானங்களை பட்டியலிட்டு சொன்னார். கடைசியாக அதை எத்தனை ஜாமம் வைத்தீர் என்று நான் கேட்க 'மூணு' என்றார்.
என்னென்ன பாஷாணம் என்று பட்டியலிட்டு அதை மளிகை சாமான் லிஸ்ட் போல நாட்டுமருந்து கடையில் கொடுத்துள்ளார். 'ஏங்க, இதெல்லாம் கொடிய விஷமாச்சே, அதெப்படி மறுபேச்சின்றி கடைகாரர் பொட்டலம் கட்டி கொடுத்தார்? என்றேன். [எந்த வினாவும் எழுப்பாமல் இவற்றை கொடுக்க சித்தர் அந்த ஏற்பாடு செய்தாரோ என்னவோ..!]. 'தெரிலிங்க' என்றார். பதினஞ்சாயிரத்துகு கூட ஆச்சு என்றார். சரியா கணக்கு வெக்கலைங்க என்றர்.
மூலிகைகள் பத்தி எப்படி கத்துகிடீங்க, சுத்தி செய்யும் அளவுல அத்தனை பரிச்சயம் வந்தது எப்படிங்க என்றேன்.
'நான் தாராபுரம் பக்கம் போன போது, சாலையோரம் பழைய புத்தக கடையில் 'மூலிகை தாவரங்கள்' அப்படின்னு புத்தகம் கண்ணில் படவே, வாங்கியாந்தேன் அய்யா' என்றார். அத பாத்துட்டு சதுரகிரில இருந்து இலைகள பறிச்சுக்கிட்டு வந்தேன் என்றார். [இவருக்காக ஒரு புத்தகம் அங்கே கன்ணில்படுமாறு வைத்தாரோ என்னவோ..!]
எந்த தாவரம் எந்த இடத்துல இருக்குனு உங்களுக்கு எப்படி தெரியும்? தேடாம எப்படி முதல்தடவை நீங்களே சுயமா போயிடுவந்தீங்க?
'தெரிலீங்க. மடமடனு எல்லாம் பரிச்சி பயில போட்டுகிட்டேன். நான் பாஷாணம் பிரிச்சு வேலை செய்ய தொடங்கியதும் அடுத்து இன்னது சேக்கணும், இந்த முறையில சுத்தி செய்யணும்னு ஏற்கனவே நான் பழக்கப்பட்ட மாதிரி செய்துகிட்டு போனேன்' என்றார். நான் மட்டும் தான் இந்த பணி செய்தேன் என்றார். எத்தனை ஸ்புடம் போட்டேங்க ?
ஒரு புடம் போட்டு எடுத்தேன், 45 நிமிஷத்துல வந்துடுச்சுங்க என்றார்.
சிலை வார்ப்படம் எந்த வகையினை சேர்ந்தது என்று கேட்டேன். தானே மண்ணில் ஒரு முருகன் சிலை செய்து, அந்த அச்சில்தான் இந்த கரைசலை ஊற்றி சிலை வடித்ததாக சொன்னார். ஆனால் சிலைக்கு அவர் இன்னும் கண்ணை திறக்கவில்லையாம். அதாவது அதற்கு உயிர் தரவில்லை. சிலை சுமார் 13.5 அங்குலம் உள்ளது (1அடி 2 செமீ ). சிலை செய்த அதே நவபாஷான கலவையிலிருந்து எடுத்து கொஞ்சம் உருண்டைகள் (கோலி) செய்துள்ளார். (இங்கே உள்ள முருகன் சிலை மாதிரிக்காக போட்டுள்ளேன்.)
அவரே இந்த கலவையின் தீர்த்தத்தை தனக்கு பரிசோதனை செய்து கொண்டுள்ளார் என்றும், அது இதுவரை இவருக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை, நல்லபடி உடல் ஆரோக்யமாக உள்ளது என்றார். இதுபோக ரசமணிகளும் செய்துள்ளார். இவருடைய பெரியப்பா மகனுக்கு பக்கவாதம் தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த நீரை தொடர்ந்து ஒன்றரை மாதங்கள் கொடுத்துவர, இப்போது கை விரல்கள் நன்கு அசைகிறது என்றார்.
'பெரிச்சியூர்' பைரவர் எபிசோடில் என்னுடைய சிறிய உரையாடலை பார்த்துவிட்டு, இந்த விஷயங்களை எல்லாமே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவர் மனசுக்கு பட்டதாம். பல வருடமாக இவற்றை செய்து பழகிகொள்வதாகவும், அவருக்கு கைதேர்ந்த சித்த முறைகள் விளக்க முடியுமா என்பது சந்தேகமே என்றார். எல்லாம் தெரிந்துள்ளது ஆனால் விளக்கத் தெரியவில்லை.
அவருக்கு வேறு ரசாயன முறைகள் தெரியவில்லை என்று தெரிகிறது. அதை விளக்க போதிய கல்வி ஞானம் அவரிடம் இல்லை ஆனால் இவற்றை செய்துள்ளார் என்று சொல்கிறார். சிலசமயம் அனுபவஸ்தர் போல் பதில் அளிக்கிறார். 'சந்திரசேகர் அய்யா, உங்களுக்கு நேர்ந்த போகர் அமானுஷ்யம் போலதான் எனக்கும் ஆச்சுங்க' என்றார் அவர்.
நான் அவரிடம் 'உங்களுக்கு கோரக்கர்தான் வந்து வழிகாட்டி இருக்கணும். அந்த ஊர்லதான் அவர் சமாதி உண்டு.அவரும் போகருடன் நவபாஷான சிலை செய்த குழுவில் இடம்பெற்றவர். உங்களுக்கு அவருடைய ஆசிகள கிடைத்து இருக்கு' என்றேன். உங்களுடைய பூர்வ ஜென்மத்தில் நீங்கள் அந்த சித்தர் குழுவில் இடம்பெற்று இருந்ததால் சுத்தி செய்து காய்ச்சும் முறைகள் செய்யும்போது எல்லாமே நினைவில் வந்துள்ளது என்றேன். இவை சித்தர்களின் விளையாட்டுதான்.
எதற்காக அந்த உருண்டைகள் செய்தார் என்றால்... நாளை இதை யாரேனும் வந்து Lab test டெஸ்ட் க்கு கொடுத்து அனுப்பவேண்டும் என்று கட்டாயபடுத்தினால், முருகனின் சிலையை பின்னப் படுத்த கூடாது என்ற நோக்கத்தில் அந்த கரைசலில் கொஞ்சம் வைத்துகொண்டு 4 கிராம் எடையில் சில உருண்டைகள் செய்தார். இவற்றை அவர் செய்து பல காலங்கள் ஆகிவிட்டது, இப்போதுதான் என்னிடம் இந்த உண்மைகளை பகிர்ந்தார். சித்தர்கள் முன்ஜாகிரதாயக இவருள் செயல் படுத்தி்யுள்ளனர்..*!?
நீங்கள் செய்திருகும் பட்சத்தில் அதை இந்த கலியுக சூது-வாது உலகம் எப்படி பார்க்கும் என்று எண்ணுங்கள் என்றேன். உங்களை பலர் வந்து வியாபரமாக செய்து கொடுங்கள் என்றால் என்ன செய்வீர் என்று நான் கேட்டேன், 'அப்படி கட்டாய படுதுவாங்கள அய்யா?' என்றார் வெள்ளந்தியாய். உங்களை கடத்தவும் வாய்ப்புண்டு என்றேன். அப்படிப்பட்ட உலகில் அல்லவா நாம் வாழ்கிறோம் என்றேன்.
   Chandru SC's photo.  Image result for ரசமணி
'உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ என்னைபத்தி வெளியுலகத்துக்கு சொல்லுங்க' என்றார். அதனால்தான் தற்சமயம் இந்த பதிவில் இவருடைய விலாசம் கைபேசி தகவல் விவரங்கள் ஏதும் வெளியிடவில்லை.

சனி, 15 ஏப்ரல், 2017

திராவிட சிசு

'மனோன்மணியம்' என்ற நாடகநூல் எழுதிய பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை அளித்த 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் 'தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்' என்ற வரியில், திராவிடம் என்றால் தமிழ்நாடுதான் தமிழர்தான் என்று இன்றும் பலபேர் சொல்லிக் கொள்வது சகஜமாகிவிட்டது. அதில் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு வகையறாக்கள் வராது என்றும் சொல்கின்றனர். தெக்கணம் என்றால் தென்னகமாம், திராவிடம் என்றால் தமிழ்நாடு தானாம்.

நியாயமாகப் பார்த்தால் தெக்கணமும்-திராவிடமும் எல்லை விஸ்தீரணம் குறைவுதான்.. தென்னாடு என்று வந்திருக்கணும்.

ஆதிசங்கரர் தன் சௌந்தரியலஹரியில்  (பாடல்-75) ஞானப்பால் உண்ட  'திராவிட சிசு' என்று சொன்னார். "தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு  ராஸ்வாத்ய தவ யத்".. அதாவது தனக்கு தேவியே பாலூட்டியதை விவரிக்கும் வரிகளாகும். அப்படிப்பார்த்தால் மலையாள நம்பூதிரி தன்னை 'தமிழ் பாலகன்' என்று சொல்வதாக பொருள் படுமா? அல்லது ஒருவேளை நம் 7ம் நூற்றாண்டு சீர்காழி திருஞானசம்பந்தரைப் பற்றி முற்காலத்து சங்கரர் புகழ்ந்தார் என்று வைத்துக்கொண்டால், 'தமிழ் பாலகன்' என்ற பொருள் சரியாக வரும். இன்றுவரை இதில் தெளிவு இல்லை.

Image result for சம்பந்தர்    Image result for ஆதிசங்கரர்   Image result for மாணிக்கவாசகர்
திருவாசகத்தில் மணிவாசகர் சொன்னபடி 'தென்னாடுடைய..' சொல்லே சாலப் பொருந்தும்.. சீனத்தின் தெற்கே மேருவின் தெற்கே பாரதத்தின் தெற்கே தெக்கணத்தின் தெற்கே தென்னாடு வரை சொல்ல வேண்டும். அந்த குமரிக்கண்டத்தைதான் அவர் குறிப்பிட்டார். சங்கம் கூட்டிய பாண்டிய திராவிட நாடு அதுவரை பரந்துபட்டது என்று பெருமை கொள்ளலாமே தவிர அதைத்தாண்டி இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு இதன் உயர்வு எந்த மாற்றத்தையோ தாக்கத்தையோ உண்டாக்காது என்பதே யதார்த்தம். ஆகவே, ஆதிசங்கரர் சொல்வதைப்போல் 'திராவிடம்' என்றால் தென்னகம் என்ற பொதுப்பொருள் விளங்குகிறது.  

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சென்னை மயிலை கபாலீஸ்வரர் அறுபத்துமூவர் உலா.

பங்குனி மாதம் நடக்கும் முக்கிய விழா. விநாயகர் உள்ளே வர, அடுத்து ஸ்ரீகபாலீஸ்வரரைத் தொடர்ந்து கற்பகாம்பிகை, முருகப்பெருமான் மண்டபத்துக்கு எழுந்தருளுகின்றனர். சம்பந்தர் பாடல் பாட, சிவநேச செட்டியார் தன் மகள் பூம்பாவையோடு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். அதைத் தொடர்ந்து சமயக் குரவர்கள் நால்வரும் தனித்தனி பல்லக்குகளிலும், நாயன்மார்கள் ஒவ்வொரு பல்லகிலும் அவரவர் திருப்பெயர்களுடன் எழுந்தருளி, அருள்மிகு கபாலீஸ்வரை வலம் வந்து தீபாராதனையை ஏற்று, முன்னே செல்வர்.
திருஞான சம்பந்தப் பெருமான் மயிலாபுரியில் இயற்றியது 'பூம்பாவை திருப்பதிகம'. பாம்பு கடித்து இறந்து தகனம் செய்யப்பட்ட பூம்பாவையை பாடல் பாடி அந்த சாம்பலிலிருந்து உயிரத்தெழுப்பிய பதிகம் இது.
"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!"
'அட்டிட்டல் விழா' என்று சம்பந்தப் பெருமான் பாடியதை நிரூபிப்பதுபோல் பத்தடிக்கு ஒரு அன்னதான, பானகம், நீர்மோர், குளிர்பான பந்தல்கள் இருக்கும்.
மயிலையின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தபின்தான் வீதி உலா தொடங்கும். (அதோடு ஜேப்பிடி திருடர்களும் உலா வருவார்கள்... சங்கிலி/ பணம்/ செல்போன், உஷார்!)
Image may contain: one or more people and crowd

சனி, 8 ஏப்ரல், 2017

இன்று சனிப் பிரதோஷம்

அருள் புரிவாய் சிற்சபேசா! இப்பிரதோஷ வேளையில் ஈசனடியை நினைத்திருப்போம்.

பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்தால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும். உலகை ரட்சிக்க ஆலகால விடத்தை அமுதென குடித்தபின் நந்தியின் கொம்புகளுகிடையே நடனம் ஆடினார்.



சனி மஹாபிரதோஷம் என்று கூறுவார்கள்.  நாம் ஒரு சனி பிரதோஷத்தில் வணங்கச் சென்றால் 120 வருடம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழரை சனி, அஷ்டமத்து சனியின் பாதிப்பு குறையும்.

வியாழன், 6 ஏப்ரல், 2017

சித்த தரிசனம் என்பது மாயையா?

இன்று முகநூலில் சித்தர் தரிசனம் பற்றிய ஒரு பதிவை நான் காண நேர்ந்தது. "மறைந்த சித்தர்கள் தோன்றுவது மாயையே..." என்ற ரீதியில் ஆன்மிக பெரியவர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அஃதாவது :
'ஸ்தூலத்தை விட்டு பிரிந்து, இறைவனோடு இரண்டறக் கலந்து மறைந்த சித்தர்கள் மீண்டும் உடலோடு தோன்றுவதில்லை. அப்படி தோன்றுவது தன் மன மாயையே, நான் சித்தபுருஷரை கண்டேன் என்பது எப்படியெனின், அது தன் ஆழ்ந்த எண்ணத்தின் வாயிலாக உற்று நோக்கின் அது தன்னிடத்தே இருந்து வெளிப்படும் ஆவியின் மாயையே அத்தோற்றத்தை உருவாக்கி மீண்டும் அது தன்னிடத்தே மறைகிறது. நம் அறிவைக் கொண்டு ஸ்தூலத்தோடு வாழும் ஏனைய சித்தர்களை தவிர்த்து, கண்ணிற்கு புலப்படாத சித்தர்களை மனதின் மாயையால் தேடி அலைவது வினோதமான செயலாகும். கறந்த பால் முலை புகா,உதிர்ந்த காய் மரம் புகா, என்பது சித்தர் வாக்கு. -இறையருள்-" இதுதான் அந்தப் பதிவு.
சித்தர்கள் பலர் தேகம் அழியாமலிருக்க காயகற்பம் உண்டு இன்றளவும் சமாதியில் இருக்கின்றனர். எல்லா சித்தர்களும் உடலை துறந்துவிட்டனர் என்று கொள்வதற்கில்லை என்று போகரே உரைக்கிறார். ஏனையோர் தங்கள் பணி முடிந்ததும் மண்ணாகிப் போனாரே என்று விவரித்துள்ளார். ஈசனின் மலரடியைத் தழுவிய அவர்கள் அஷ்டசித்தியுடனே என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு மறுபிறப்பில்லை. இதைத்தான் சிவவாக்கியர் 'கரந்த பால் முலை புகா, மறுபிறப்பில்லை, இல்லையே ' என்று சொல்கிறார். அவர்கள் சம ஆதிநிலையில் சிவவுணர்வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஸ்தூல உடலோடு தோன்றி நமக்கு தரிசனம் தர அவர்கள் மறுபிறப்பு எடுக்க வேண்டியதே இல்லை. அவர்கள் முற்று பெற்ற சித்தர்கள்.
நமக்குள் இருந்து வெளிப்படும் நம் ஆவிதான் சித்தராக அங்கே வெளிப்படுகிறது என்றால் எந்த பிரயத்தனமும் இல்லாமல் அஷ்டசித்தி நமக்கு கைகூடிவிடுமே ! சுயம் அறிந்து நாமே பரபிரம்மமாகி பிரபஞ்சத்தில் ஐந்தொழில் நடத்திட முடியுமே! இது சித்தநெறிக்கு தகுமா? நாமே ஈசனாகி விட்டால் நாம் செய்யும் பாவங்கள் நம்மை அண்டாது. ஞாயம்தானே? ஆனால் அப்படியா நடக்கிறது? ஒரு பணி நிமித்தமாக ஒரு அலுவலகத்திற்கு செல்கிறோம். அங்கே Lift பொத்தானை அழுத்திவிட்டு காத்திருக்கிறோம். கதவு திறக்கிறது உள்ளே அகத்தியரும் ராகவேந்திரரும் நம்மை உள்ளே அழைக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். அது நாம்தானே என்று அலட்சியப்படுத்த முடியுமா? சற்றும் அவர்களிபற்றி சிந்திக்காத வேளையில் அவர்கள் நம்மோடு ஏன் வரவேண்டும்? அது நம்முடைய சாயா புருஷ தரிசனம் அல்லவே?  நாம் அவர்களாக இருக்க நாம் ஏன் பொருள்தேடும் வாழ்க்கை வாழ்கிறோம்?

சந்திரரேகை நூலில் (பா-65) கோரக்கர் குண்டா பாறையில் படத்திலுள்ள மந்திரத்தை யாரொருவர் சந்திரகலையில் மூச்சை இருத்தி ஓதி, யந்திரத்தை தகட்டில் கீறி கையில் வைத்துகொண்டு ஜெபித்தாலும் தான் காட்சி தருவதாக கோரக்க சித்தர் சொல்லியுள்ளார். மூத்த சித்தர்களான அகத்தியர் திருமூலர் புஜண்டர் காலாங்கி போகர் கோரக்கர் போன்ற பலரும் தரிசனம் தருவதைப் பற்றி உரைத்துள்ளனர். மேலே ஐயா அவர்கள் கூற்றுப்படி பார்த்தல் "அத்தனை சித்தர்களும் என்னுள் இருக்கிறார்கள் என்பதால், நான் அவனாகி விட்டதால், நான் ஏன் சித்த தரிசனம் தேடிப்போக வேண்டும்? நானும் அவன் அந்தஸ்த்தில் இருக்கிறேன் தானே?" என்ற எண்ணம் நம்முள் எழும். நம் எல்லோருக்குள்ளும் சிவனே சீவனாய் இருப்பதால் நாமே சிவம் ஆகிவிட முடியுமா? எல்லோரும் 'அஹம் பிரம்மாஸ்மி' என்று சொல்லிட முடியுமா? அதை உணரவும் வெளிக்காட்டவும் ஒரு நிலை வேண்டும் அல்லவா?
கிருஷ்ணர் யசோதைக்கு தன்னுள் இருக்கும் அனைத்தையும் காட்டியது போல சகலமும் என்னுளே இருப்பதும் மெய், பலவிதமாய் வெளிப்புறத்தில் காண்பதும் மாயை. அகத்தில் உள்ள இந்த பரமவொளியை கண்ணுற்றால் புலப்படும். இது எல்லோருக்கும் தெரியுமா? நம் சிரசே கைலாசம், சுழுமுனையே மேருமலை. வாசியை உணரவைத்து அந்த நிலைக்கு இட்டுச் செல்வது பரபிரம்மத்தின் செயல். நம் ஆவிதான் வெளியே சித்தராக வெளிப்படுகிறது என்றால் நாம் அற்ப மனிதர்கள் அல்ல! நாம் எல்லோரும் அஷ்டசித்தி பெற்ற சித்தர்களே! சதுரகிரியை நாடிப்போகத் தேவையில்லை அல்லவா? இது உண்மை என்றால் நாம் வாழ்வது பாபங்கள் மண்டிக்கிடக்கும் கலியுகம் அல்ல. உயர்தர்மம் பேணும் கிருத யுகத்தில்.
- எஸ். சந்திரசேகர்

வெள்ளி, 31 மார்ச், 2017

ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் - நூல் அறிமுகம்

கல்கியின் வருகைக்கு முன்னோட்டம்
----------------------------------------------------------------------

சில மாதங்களுக்கு முன் முகநூலில் கல்கியின் வருகைப் பற்றி பதிவு போட்டிருந்தேன். அதில் ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் இயற்றிய 'காலக்ஞானம்' நூலைப் பற்றியும், அவரே சுமார் 1000 வருடங்கள் கழித்து ஸ்ரீ வீரபோக வசந்தராய என்ற பெயரோடு பிறந்து விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான 'கல்கி'யாக வருவதைப்பற்றி சொல்லியிருந்தேன். உங்களில் சிலருக்கு அது நினைவிருக்கலாம். அதுபற்றிய முழு நூல் விரைவில் வெளியாகவுள்ளது. முன்பு தெலுங்கில் வந்த மூலநூலை ஆதாரமாகக்கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பானதை தமிழில் என் பாணியில் எழுதினேன். கல்கி எப்போது வருவார், எப்போது அதர்மத்தை எதிர்த்துப்போரிட்டு உலகைக்காப்பார்? எதிர்கால நிகழ்வுகள் என்ன, அதை எதற்கு முன்னமே சொன்னார்? மற்ற மதங்களின் பார்வையில் இது எப்படி ஒத்துப்போகிறது? பிரபஞ்சம் தோன்றியது எப்படி? பிரபஞ்சம், பரசிவன்-பரசக்தி, பஞ்சபூதங்கள், மற்ற தெய்வங்கள் தோன்றியதும், அவர்களுக்குள் உறவுகள் வந்தது எப்படி? இதுபோன்ற இன்னும் பல தத்துவ, உபநிடத, வேதாந்த, சமயம், யோகம், சுயமறிதல் சார்ந்த ஆய்வுபூர்வமான எண்ணற்ற கேள்விகளுக்கு அதில் விடையுள்ளது. மொத்தத்தில், சித்தர்களின் பார்வையில் என்ன கருத்துகள் வெளிப்படுமோ அவையெல்லாம் இவர்மூலம் வெளிப்பட்டுள்ளது. திருமாலின் அவதாரம் என்றாலும் முருகனும் அதில் பங்கு கொள்கிறார். இதுபற்றி போகர் தன் ஜெனனசாகரம் நூலில் ஒரு பாடலில் விளக்கியதை மேற்கோள் காட்டியுள்ளேன்.

சித்தர்கள் சமாதியில் இருந்துகொண்டு விரும்பிய பல பிறவிகளை எடுப்பார்கள் என்பதை அறிவோம். மகாசித்தர் போகர்தான் வருகின்ற கல்கி அவதாரம். சித்தர் போகரே, ஸ்ரீ வீரபிரம்மமாக இருந்தபிறகு வீரபோக வசந்தராயராக பிறந்துவிட்டார். இவர்கள் எல்லோருமே விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்தவர்கள் (பொற்கொல்லர்). அவருக்கு தற்போது வயது 50. அவர் 'தேவதத்தா' வெள்ளைக் குதிரைமேல் அமர்ந்து கையில் 'ரத்னசாரு' வாளோடு, கோடிசூரிய ஒளியோடு வந்து, இடர்களை உண்டாக்கி, கலிபுருஷனை (அதர்மங்களை) கலியுகத்தில் அழித்து, எஞ்சிய 426000 சொச்ச வருடங்கள் நன்மக்கள் வாழத்தகுதியான பூமியாக மாற்றுவார். மேற்சொன்ன சிறப்புசக்திகளை அவர் பெற்றுக்கொண்டபின், முதன் முதலாக சுனாமி எத்தனை பயங்கரமானது என்பதைப் பார்த்தோம், அதன்பிறகு தொடர்ந்து பேரிடர்களையும் கண்டுவருகிறோம். அடுத்த 195 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்வார். கல்கியின் குதிரைப்படைகளையும், சிறகுகள் கொண்ட கங்காரூக்களையும் என் சொப்பனத்தில் கண்டு வியந்தேன். இதைப்பற்றி சில முகநூல் நண்பர்களுடன் உரையாடலிலும் பகிர்ந்தேன். இனி இவர் கைவண்ணத்தில் உலகெங்கும் பிரளயங்கள் தொடர்ந்து நிகழும், ஆனால் உலகம் அழியாது. அவ்வப்போது பூமிக்கு பாரமாகவுள்ள பாவமூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருவார். அவருடைய இறுதித்தீர்ப்பில் அகப்படாமல் இதயசுத்தியோடு இறைவனை அகத்தில் வைத்து தர்ம நெறிகளை கடைபிடிக்கவேண்டும்! தரணியில் தர்மத்தைக்காக்க மகான்களையும் மக்களையும் களமிறக்குகிறார். ஸ்ரீவீரபோகர் இன்னும் வெளியுலகிற்குப் புலப்படாமல் தேவ ரகசியமாகவே இருந்து பணிசெய்கிறார்.

இப்படியொரு நூல் எழுத எண்ணமும், நுட்பமான சங்கதிகளை விளங்க வைத்தும், எழுதும்போது அவ்வப்போது அடியெடுத்துக் கொடுத்தும், பல தருணங்களில் அவர் வழிநடத்தினார். இந்நூல் எல்லாம்வல்ல சித்தர் போகருக்கும், 'கல்கி' வீரபோகருக்கும் சமர்ப்பணம். வரும் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டிற்கு வெளிவருகிறது.

நூல் வெளியீடு: விஜயா பதிப்பகம்
20 ராஜ வீதி, கோயம்புத்தூர் 641001. 
பேசி: 0422-2382614.  
பக்கங்கள்: 328,   விலை: ரூ.225 
மின்னஞ்சல்: vijayapathippagam2007@gmail.com

(பதிப்பாளரிடம் பதிவு செய்தால், நூலை தபாலில் அனுப்புவார்கள். நூலை வெளிநாடு -உள்நாடு வாசகர்கள் Marinabooks.com தளத்தில் ஆன்லைனிலும் வாங்கிக்கொள்ளலாம்.)



புதன், 29 மார்ச், 2017

தமிழிலக்கியம் போற்றும் முருகன்

தமிழை நினைத்தால் முருகன் வருவான், முருகனை நினைத்தால் பாடல்கள் பொழியும், பாடல் என்றால் திருப்புகழ் நினைவிற்கு வரும், திருப்புகழ் என்றால் அருணகிரியார் வருவார். 

தொல்காப்பியத்தில் முருகனைப் பற்றிய குறிப்புள்ளது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலத்து கடவுள்களான முருகன், திருமால், இந்திரன்,வருணன் பற்றிய பாடல்: 

“மாயோன் (திருமால்) மேயக் காடுறை (முல்லை) உலகமும்   
சேயோன் (முருகன்) மேய (குறிஞ்சி) மைவரை உலகமும்
வேந்தன் (இந்திரன்) மேயத் (மருதம்) தீம்புனல் உலகமும்
வருணன் மேயப் பெருமணல் (நெய்தல்) உலகமும்“.  
(தொல்காப்பியம்: பொருளதிகாரம்-5)


Image may contain: 1 person, text

சனி, 25 மார்ச், 2017

படமாக்கப்படுகிறார் சாவித்திரி

சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை “நடிகையர் திலகம்” என்ற பெயரில் படமாக்கவுள்ளனர். 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்துள்ளார். படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் என்பவர் நடிக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. அப்படத்தின் விளம்பர போஸ்டர் முன்பே வெளியானது. This is a biopic on actress Savithri.
Image may contain: 3 people, people smiling, text

'மஹாநடி சாவித்திரி' Mahanati Savithri என்று தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' என்று தமிழிலும் கொண்டாடப்பட்டவர். அவர் 1979ம் ஆண்டு விஜயவாடா வானொலியில் பேசிய ஒலிநாடாவை நான் அண்மையில் கேட்க நேர்ந்தது. அதில் தெளிவாகப் பல விஷயங்களை அருமையாகப் பேசிய அவரா குடி பழக்கத்தில் போய் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்தார் என்று நினைத்தால் வேதனைதான். அவருடைய குடும்ப வாழ்க்கையில் வந்து போனவர்கள், சினிமா எடுக்கிறேன் என்று விரல் சுட்டுக்கொண்ட அனுபவம், இருப்பதையெல்லாம் தேசத்திற்கும் சமூக தொண்டிற்கும் வழங்கினார் என்று இவையெல்லாம் ஒருபக்கம் பேசப்பட்டாலும், விதி அவர் மதியை அலைக்கழித்து முடித்து விட்டது என்பதுதான் கொடுமை. அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார் என்றும், அங்கு ரிக்ஷாகாரருக்கே ஐம்பது/ நூறு என்று கடன் பாக்கி வைத்திருந்தார் என்றால் என்னத்தைச் சொல்வது? அவர் 1981 ல் தன் 46 வது வயதில் காலமானார்.
கீழே அவருடைய இறுதிக்கால படத்தைப் பார்த்தால் அவர்தான் என்பதை உங்களால் நம்பமுடியாது. இவரைப்போல் பல முன்னாள் நடிகர்கள் குடி-போதை பழக்கத்திலிருந்து மீள முடியாமல், சொத்துகள் இழந்து போய் சேர்ந்தனர். இவருடைய வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு படிப்பினை!
Image may contain: 4 people, people sitting and closeup

புதன், 22 மார்ச், 2017

திருவொற்றியூர் தியாகேசா போற்றி

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
"ஸ்ரீ தியாகராஜர் - வடிவுடை அம்மன், திருவொற்றியூர், சென்னை."
திருவொற்றியூர் ஒரு சிவ க்ஷேத்திரம். சமயக் குரவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம், ஆதிசங்கரர், பட்டினத்தார், வள்ளலார், தோபா சுவாமிகள், பாம்பன் ஸ்வாமிகள், ஆகியோர் வழிபட்ட இறைவன்-இறைவி... கவிச்சக்ரவர்த்தி கம்பன் தன்னுடைய இராமாயணத்தை இங்கு வட்டப்பாறை அம்மனின் சன்னதியில் அமர்ந்து காவியத்தின் இறுதிப் பகுதியை எழுதி முடித்ததாக தலவரலாறு சொல்கிறது. உக்ர காளியை சாந்த சுவரூபியாக்கியது ஆதிசங்கரர். அந்த பாறையில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தார்.


No automatic alt text available.

பட்டினத்தார் சமாதி கோயில் 
 




இன்று ஈசனின் பேரருளால் அவன் தாள் பணியும் பேறு கிட்டியது. ஊழிக் காலத்தில் கடல் புகாமல் ஒற்றிப்போகச் சொன்ன ஆதிபுரியின் தியாகேசர் மண்ணை மனமாரத் தொழுதேன்.. வேதங்களைக் மீட்டெடுத்த நாயகனின் இடபாகத்தாள் அன்னை வடிவாம்பிகையை, ஞான சக்தியை வணங்கி, ஏவிளம்பியின் பிரளயகாலத்தில் ரட்சிக்க வேண்டி இன்று புனைந்த என் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.
ஆரூரில் நான் பிறக்கவில்லைக் காண்
அஃதொன்றை குறையென நோக்கா - என்
அகமும் புறமும் நீரே நின்று ஆட்கொண்டு
அருமருந்திட்ட சித்த னானீர்.

அசையா நினைவாக ஆட்கொள்ள நினைத்தீர்
இசையால் உம்மை போற்றினேன் - மன
வாசையால் ஒற்றியூர் பேகரும்பு நாதனே
ஓசையின்றி பாடினேன் காணீர்.

ஆதிபுரியில் இந்நாளில் மகிழம்பூ நாதனை
ஆனந்தமாய் கிடந்து சேவித்து - நல்
லாழிசூழ் நெய்தலில் ஞான சக்தி
வெளிப்பட தொழுதே னடியை.

அகிலாண்டம் அதிர நிலமும் ஆட பேராழி
எழுந்து தண்டிக்கும் கணநேரம் - உம்
மடிதொழ இவனை நீர் காத்திடுவீரே
குடிகாக்க நமச்சிவாயமே வாரீர்.

பாபங்கள் துடைப்பீர் மறுபிறவி வேண்டா  
புண்ணியங்கள் ஈட்ட முயல்கிறேன்– யான்
கடந்திட்ட பிறவிகள் அறியேனே நின்டி
கிடந்து போற்றுகிறேன் உனையே.

அந்தோ இதுவரை சோதித்தது போதும்   
இந்தப் பிறவியோடு அறுப்பீர் – அருள்
கனிந்து வீடுபேற்றை நல்கு பிறையோனே
இனிமேலும் பிறவிகள் வேண்டா.

- எஸ்.சந்திரசேகர்  

சனி, 18 மார்ச், 2017

முருகனை நினைத்தாலே கவி பொழியும்

        வீடுபேறு தரும் வீட்டினன்                            
                          Image result for முருகா

படைவீடு கொண்ட எம்பெருமான்
 பதமலர் பணிவோம் தினம்தினமும்;
கடைவீடு கொண்ட முதிர் பழமாய்
 கருத்துள்ள கந்தர் அநுபூதி வழங்கி;
மடைவீடு திறந்த வெள்ளமென மனம்
 மகிழத் திருப்புகழ் தந்த அருணகிரியார்;
இடைவீடு மருந்தென எழுந்தருளி
 ஈய்ந்த போகரின் உள்ளக்களிப்பென;
நடைவீடு அமர்ந்த வேலாயுதம் தலம்
 நன்குடி போற்றும் சித்தன் வாழ்வென;
தடைவீடு ஒன்று வருமோ பக்தனுக்கு
 தயை கூர்ந்து அருள்புரி பெருமானே!