About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 7 பிப்ரவரி, 2018

சாதிகள் நிலைத்திருக்கும்!

"சமூகத்தைக் கொல்லும் கொடிய விடம்தான் சாதி மதம்! எல்லோரும் ஓரினமாக வெறுப்பின்றி கலந்திட வேண்டும்" என்ற வாசகத்தைப் படித்தேன்.
சாதிகள் கொடிய நோய் என்றால் அதை குணமாக்க முடியுமா? சாதிகள் இல்லாமல் எல்லோராலும் இருக்க முடியுமா? அல்லது எல்லோரும் ஒரே சாதியில் இருக்க முடிமா? சாதிகள் வேண்டாம் என்றாலும் எல்லோராலும் ஒரே மாதிரி பழக்கவழக்க வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள முடியுமா? எல்லோராலும் சைவமாகவோ அசைவமாகவோ மாறிட முடியுமா? எல்லா சாதிகளும் சமம் என்றால் இட ஒதுக்கீடு தொடருமா? எல்லோருமே சமம் என்றால் எல்லோருமே எல்லா தொழில்களையும் முன்வந்து செய்வார்களா? சமம் என்றாலும் செய்யும் தொழிலை வைத்து வாழ்க்கைத் தரம் காண்பார்களா?
இக்கேள்விகளுக்குத் துல்லியமாக நடுநிலையோடு விடையளிப்பது மிகவும் கடினம். ஏன்? சமுதாயத்தில் சிறிய விழுக்காடு அளவில் உள்ளோரை விடுத்து ஏனையோரின் நிலைப்பாடும் மனவோட்டமும் எப்படி உள்ளது?
*சாதிகள் வேண்டும், இட ஒதுக்கீடு வேண்டும்
*சாதிகள் வேண்டும், கலப்பு மணம் கூடாது
*கலப்பு மணம் செய்தாலும் ஒதுங்கியே இருப்பது நலம்
*சாதிகள் கூடாது என்றாலும் எல்லோருடனும் பழக முடியாது
*எல்லா சாதியினருடன் பழகலாம், ஆனால் பழக்கவழக்கத்திற்கு நம்மை மாற்றிக்கொள்ள முடியாது
*ஒரே சாதிதான் என்றாலும் எல்லோரையுமே ஏற்க முடியாது
*ஒரே சாதியானாலும் அடித்துக்கொள்வோம் அணைத்துக்கொள்வோம்
*சாதிகள் இருக்கட்டும் ஆனால் யாரும் யாரையும் ஒடுக்கக் கூடாது, அவரவர் வழியில் இடையூறின்றி இருந்தாலே போதும்
*முற்போக்கு என்பது பட்டிமன்றத்திற்கு சரி, நடைமுறைக்கு சரிபடாது
*எல்லாமே தனிநபர் விருப்பம், ஏதும் சொல்வதற்கில்லை
இப்படித்தான் உள்ளது இன்றைய சமுதாயம். நம் முற்போக்கு எண்ணப்படி எல்லோரும் மாறவேண்டும் என்றால், நாத்திகர்களின் கொள்கையை நம்மால் ஏன் ஏற்க முடிவதில்லை? நம் நெறியை அவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவரவர் குடும்பம், அவரவர் விருப்பம் என்று விட்டுவிட வேண்டும். ஊரோடு ஒத்துவாழ எல்லோரும் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டும். அது முடியுமா?

பல சித்தர்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களே, ஆனால் சித்தநிலை எய்த அது ஒரு தடையாக இருக்கவில்லை. ஏன்? எல்லோருமே ஒரே சிவ உயர்நெறியில் சித்த மரபில் இருந்ததால்தான் சங்கமித்தனர். சித்தர்களுக்கென கோட்பாடு ஆகமவிதி என்று எல்லாமே இருந்தது என்றால் அதுவும் ஒரு சாதிதானே? எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒன்றின்கீழ் அனைவரும் வந்தாக வேண்டும், பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். அல்லவா? ஆகவே, மனித சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் என்றுமே நிலைத்திருக்கும்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

The art of learning to give

The passing away of my cousin Ms.Nirmala in Bangalore yesterday taught everyone a lesson about philanthropy. She worked in Amanath Bank for 30 years as a Senior Manager. A spinster, she was more attached to her brothers and nieces. She was impartial and showed her love towards us also. A commerce graduate, she spoke English, Tamil, Telugu, Kannada and Urdu. Unassumingly she was down to earth.

A benevolent hearted Nimmi was very religious, a good cook and a hard worker who never exposed her pain and struggle. She was always fond of power costumes, jewellery and cosmetics. She lived in her independent house in Hebbal with her younger brother's family. She loved charity and donated as much money as possible. She gifted us on every occasion. At the height of her kindness, she donated her eyes too. This profile photo was shot by me a few years ago.

Rest In Peace, Nimmi. We miss you!

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

மன நிறைவேது?

Image may contain: 3 people, people standing
என்னை ஏன் இப்படி வைத்துள்ளாய் இறைவா என்று கோபத்தில் ஒருநாளேனும் நாம் கேட்காமல் இருந்ததுண்டா? ஆனால் இவர்களைப் பாருங்கள்... அத்தனைக்கும் ஆசைப்படு என்றாலும் முகத்தில் எந்த சஞ்சலமுமின்றி ஒய்யாரமாக உள்ளனர். இதைப் பார்த்தால், நாம் உதட்டளவில் ஆன்மிகம் பேசி, நடைமுறையில் பேராசியோடுதான் மன நிறைவின்றி வாழ்கிறோம் என்பது தெரிகிறது.

கிடைத்த மாவை வைத்துக் கிண்டிய உணவுதான் இவர்களுக்கு விருந்து.அப்பாத்திரத்தை துலக்கவே வேண்டாம், அதில் ஒட்டவிடாமல் கீழே சிந்தாமல் கண்ணுங்கருத்துமாய் உண்பார்கள்.
இன்னொருபுறம், ஒருவரால் முழுதும் உண்ண முடியாத அளவுக்கு நம்மூரில் தலைவாழை விருந்து... தினம் இதுபோல் வீணாகும் உணவுக்கு அளவே இல்லை. அவர்கள் மேம்படவேண்டுமென்றால் நாம் உணவை சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். "அது அவர்கள் நாட்டின் நிலை.. அது என்னை பாதிக்காது. நான் இப்படித்தான் இருப்பேன்" என்றால் நமக்குப் பாடம் புகட்ட பேரிடர்தான் ஒரே வழி.. பணம் இருந்தாலும் வாங்கிட உணவுப் பண்டமும் குடிநீரும் இருக்காது.

  Image may contain: 1 person, sitting and food

The Infinite Cycle

நீண்ட நாட்களுக்குப்பின் என் எண்ணங்களை ஆங்கிலத்தில் ஏற்றினேன்.


புதன், 31 ஜனவரி, 2018

கல்வெட்டு படிக்கலாம் வாங்க..

சங்ககாலம் கிமு 4-3ம் நூற்றாண்டு தமிழ் பிராமி வடிக்கப்பட்ட கல்வெட்டு படத்தைக் காண நேர்ந்தது. மிகத்தெளிவாகப் படிக்கவும் முடிந்தது.
கணிய் நந்த அஸிரிய் இ
குவ்அன் கே தம்மம் இ
த்தாஅ நெடுஞ்சழியன் ப
ணஅள் கடல்அன் வழுத்தி
ய்கொ
...
அதுவரைதான் என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொரு வரியாக சுயமாகப் படித்து எழுதியது எனக்கு ஒரே சந்தோஷம்!
நாம் இக்காலத்தில் வரியின் இறுதியில் இடத்தைப் பொறுத்து முற்றுபெறும் சொல்லை எழுதுவதுபோல் அக்காலத்தில் எழுதவில்லை எனத் தெரிகிறது. பாறையில் இடமுள்ளவரை செதுக்கிக்கொண்டு போயுள்ளதால் அச்சொல் பிளவுபட்டு அந்தரத்தில் தொங்குகிறது.
இந்த கல்வெட்டு இருந்த இடம் மதுரை மாவட்டத்தின் மாங்குளம் மலைக்குகையில் கற்படுக்கை இடம் என குறிப்பு உள்ளது. செய்தி விவரப்படி, 'கணிநந்த ஸிரிய் குவ்அன் என்ற சமணத் துறவிக்கு பாண்டியன் நெடுஞ்செழியனின் பணியாள் கடலன் என்பவன் இந்த கல் படுக்கையை உருவாக்கித் தந்தான்' என்றுள்ளது.


திங்கள், 29 ஜனவரி, 2018

நடுநிலை வகித்த சொக்கன்!

திருவிளையாடற் புராணத்தில் ஐம்பத்திரண்டாவது படலமாக ஏழை ஆதி சைவரான தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் உள்ளது. மன்னன் செண்பக பாண்டியனின் மனதிலுள்ள ஐயத்தைப் போக்கும் ஒரு பாடலை தருமிக்கு சிவபெருமானே தந்து உதவி செய்கிறான். 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி...' என்ற பாடலை நாம் எல்லோருமே அறிவோம். மன்னன் அவனுக்கு ஆயிரம் பொன் பரிசு கொடுக்கும்போது அப்பாடலில் பிழையுள்ளது அதனால் பிழையுள்ள பாடலுக்கு பரிசு தர அனுமதிக்க மாட்டேன் என்று தலைமைப் புலவர் நக்கீரர் தடுத்துவிடுகிறார். இறுதியில் அப்பரிசு தருமிக்கே தரப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகுத்தறிவு மேடைப்பேச்சு ஒரு சமயம் ஒளிபரப்பானது. அதில் 'தகுதி இல்லாவிட்டாலும் பார்ப்பனன் தருமிக்கே பரிசு கிடைக்கிறது, இது என்ன நீதி?' என்று யாரோ ஒருவன் கிண்டல் பேசினான். எல்லோரும் அதற்கு கரகோஷம் எழுப்பினர்.
ஒரு பெரிய விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே பலரும் பேசினார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அது என்ன? தருமியும் பார்ப்பனன், நக்கீரரும் பார்ப்பனன். மன்னா பரிசு கொடு என்றவனும், பரிசைக் கொடுக்காதே என்றவனும் பார்ப்பனனே! பார்ப்பனர்களில் ஆறு விதம் என்று சங்கநூல்களும் திருக்குறளும் செப்புகிறது. வேள்வி செய்வோர், வேதம் ஓதுவோர், வேள்விகள் நடத்துவோர், சொல்லிக் கொடுப்போர், தானம் தருவோர், யாசிப்போர் என்பவரே அவர்கள்.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.” (குறள்-560)
மன்னர் அந்தணர் இடையர் வணிகர் பொற்கொல்லர் வேளாளர் என்று பல குலத்தினர் சங்கத்தில் பாடல் இயற்றியவர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் யாரும் சாதி/குலம் ஏதும் பார்க்கவில்லை, அதனால் பிழையுள்ள பாடல் அரங்கேற அனுமதிக்கவில்லை.
"நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்க வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து..."
என்ற பாடல் எப்படிப்பட்ட பெருமக்கள் சபையில் இருந்தனர் என்று உரைக்கிறது.
சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் தூது போவோரில் பிராமணர்களும் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் மேலே சொன்ன ஆறு தொழில் பிரிவு பிராமணர்கள் போக, வேள்விகள் செய்யாமல் வேறு தொழில் செய்தோர் ‘விராத்தியர்’ 'வேளா பார்ப்பனர்' என்ற பிரிவில் வருகிறார்கள்.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு பாடல்-24 முதல் நான்கு வரிகளில் இது பற்றிய ஒரு செய்தியைச் சொல்கிறது. முல்லைத் திணையில் ஆவூர் மூலங்கிழார் பாடல்தான் அது.
“வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன...”
வேள்வி செய்யாத சங்கு அறுக்கும் பிராமணர்களை நாம் இன்று பார்த்ததில்லை. சொல்லப்போனால் இன்று பெரும்வாரியான பிராமணர்கள் வேள்வி செய்யாமல் வேறு தொழில் செய்யும் வேளா பார்ப்பனர் பிரிவில்தான் வருகிறார்கள். நக்கீரர் இந்த பிரிவைச் சேர்ந்தவர். சங்கறுப்பதென் குலமே தம்பிராற்கேது குலம் பங்கமறச் சொன்னால் பழுதாமே சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல இரந்துண்டு வாழ்வதில்லை என்பது நக்கீரரின் தனிப்பாடல் திரட்டில் உள்ளது. நக்கீரர் தங்கவளை ஆபரணம் செய்யும் பொற்கொல்லர் ஆச்சாரி அல்ல.

அக்காலத்தில் விஸ்வகர்மா 'பஞ்சரிஷி கோத்ர' ஆச்சாரிகள் (ஐந்தொழில் கம்மாளர்கள்) வேதம் ஓதி, வேள்விகள் வளர்த்து, கற்பித்த ஆச்சாரியர்களாகவும்  இருந்தவர்கள்.  பௌர்ஷேய (எ) தேவ பிராமணர்கள் என்றழைக்கப்படும் இவர்கள் 'வேளா பார்ப்பனர்' பிரிவில் வருவதில்லை. ஆனால் ஒரு சில கட்டுரைகளில் நக்கீரர் பொற்கொல்லர்தான் என்றும் படித்துள்ளேன். வளை அறுக்கும்போது 'கீர் கீர்' என்ற ஒலி வந்ததாலும், அவர் நெற்றியில் 'த்ரிபுண்டர கந்தாக்ஷதை' குறி இருந்ததால் 'கீர் சந்தனம்' ஆனது என்றும், இதனால்தான் அவர் கீரர் என்று பெயர் பெற்றதாகக் காரணம் சொல்வோர் உண்டு. அப்படியென்றால் அக்காலத்தில் சங்கறுத்தவரை 'கம்மாளர்' என்று சங்கப்பாடலில் நேரடியாகவே குறிப்பிட்டிருப்பார்களே? அவரை அவ்வாறு எங்கும் இயம்பவில்லை. சங்கப்புலவரின் இயற்பெயர் யாமறியோம். அது ஈசனுக்கே தெரிந்த ரகசியம்.
ஆக, சங்கத்தில் சிவபெருமான் நடுநிலையோடுதான் அருள்பெறத் தகுதியானவனுக்கே பரிசு கிடைக்கச் செய்தான்.


சர்வதேச வணிகச் சந்தை

மதுரைக்காஞ்சி நூலில் நகரத்தின் அல்லங்காடி நாளங்காடி சந்தைகளில் என்னவெல்லாம் விற்றது என்று மதுரையின் வளத்தினைக் கூறுகிறது. ஏலம், கிராம்பு மிளகு வகைகள், சங்கு வளையல்கள், கற்பூரம், தங்கம், செப்புப் பாத்திரங்கள்,  உப்பு, புலி, எண்ணெய், பட்டாடைகள், சந்தனக் கட்டைகள், வாசனாதி திரவியங்கள் என்று கணக்கில் அடங்கா. அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மாட்டு வண்டியில் சந்தைக்கு வரும் வணிகர்களுக்கு பாதுகாப்பும் தந்தார்களாம். கொற்கை துறைமுகம் ஓய்வின்றி இயங்கியது.

பட்டினப்பாலை நூலில் இன்னும் சுவையான கட்சிகள் உள்ளது. சோழர் காலத்தில் கடல்வழி வணிகமும் உச்சத்தில் போனது. பண்டங்கள் எல்லாமே அளவின்றி சரக்கு மூட்டை குவியல்களாக பூம்புகார் துறைமுகத்தில்  சுங்கச்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுக் கிடந்ததாம். சுங்க அதிகாரிகள் ஒவ்வொன்றின் மீதும் புலிச் சின்னம் பொருத்தி, கப்பலில் ஏற்றிப்போட்டுக்கொண்டே இருந்தார்களாம். முத்து, பவளம், வளமுறி சங்குகள், புளி, பிசின், உயர்ஜாதி குதிரைகள், மீன், மிளகு இலவங்கம் வைரக்கற்கள், என பலதும் ரொக்கமாகவும், பண்டமாற்றுக்கும் வாங்கிக்கொண்டார்களாம். சர்வதேச வணிகர்கள் அங்கே துறை முகத்தில் குழுமியபடியால் பல மொழிகள் பேசப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிருந்து வியாபார சரக்குக் கப்பல்கள் நேரடியாக முகத்துவாரம் அருகே வந்து நிற்கும் வசதியும் இருந்துள்ளது.

மதுரையில் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் அவ்வூர் மக்களின் தொழில்கள் பற்றி விரிவாக உள்ளது. ரதக்காரர், பொற்கொல்லர், நெசவாளர், கொப்பரை காரர், கருமார், உப்புவணிகர், கள் இறக்குபவர், தையல்காரர், குயவர், தச்சர், என்று இன்னும் பட்டியல் நீண்டுகொண்டு போகிறது. இதுபோக பிராமணர்களில் சில பிரிவுகளும் சொல்லப்பட்டுள்ளது. வேதம் ஓதி வேள்விகள் செய்வோர், அரசகுல ஆலோசனைப் பணிகள் மட்டும் செய்வோர், வேள்விகள் செய்யாமல் சங்கு அறுத்து வளையல் செய்வோர் என்ற குறிப்புள்ளது. சங்கப் புலவர் நக்கீரர் இப்பிரிவைச் சேர்ந்தவர். 'சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்?' என்பது பிரசித்தமான வாக்கியம். ஒவ்வொரு குலத்தினர்க்கும் தனிததனி சேரி இருந்துள்ளதும் தெரிகிறது. ஆனால் எல்லோரும் சமூக கட்டமைப்பில் சார்ந்து வாழ்ந்தனர். பரங்குன்றம் முதல் யானைமலை வரை சமணர்கள் குடவரைக் கோயில்களை பயன்படுத்தினர். வணிகம் மிக அதிகமாகப் போனதால் ரோமாபுரி நாணயங்களை மதுரையிலேயே அச்சிட்டு வெளியிட்டனர் என்பது பொருளாதார உயர்வையும், அரசியல் நட்பையும் காட்டுகிறது.  இது ரொம்ப நல்லா இருக்கே!

ஒரு நாட்டைவிட்டு வேறொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்தால் சோதனை சாவடியில் உள்ளூர் நாணயத்தில் துளை (punch mark) அடித்தனர். மூன்றாம் நூற்றாண்டுவரை தமிழ் பிராமி இலக்கிய நூல்கள் முன்னேறிய கட்டமைப்போடு இருந்ததாம். இவற்றை எல்லாம் ஆழமாக திரு.நாகசாமியும், திரு. ஐராவதம் மகாதேவனும் படித்து பட்டியலிட்டு ஆவணபடுத்தியுள்ளனர். தமிழ் மற்றும் இலங்கை பிராமி எழுத்துகளில் ஒற்றுமை இருப்பதும் தெரிகிறது. பாநிட்யன் மதுரையில் உள்ள பிராமி எழுத்தும், குஜராத்தில் கிடைத்த பிராமி வெட்டுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதை கண்டுபிடித்தனர். பிந்தைய நூற்றாண்டுகளில் எழுத்துகள் மாறியது. பின்னாளில் இந்த கல்வெட்டுகள் எகிப்து, ரோம் போன்ற நாடுகளின் சில குகைப் பகுதிகளில் இருந்தது பதிவாகியுள்ளது.

Image may contain: text

பல்லவனின் காஞ்சி

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தில் வரும் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல், மணிமேகலை மூலம் அரிய முடிகின்றது. அவர்களது தலைநகரான காஞ்சி ஒரு கல்வி நகரமாகும். காஞ்சிக் கடிகை மிகவும் சிறப்பு வாய்ந்த கல்விக் கூடமாகும். இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் மாணவர்கள் காஞ்சி கடிகைக்கு வந்து கல்வி பயின்றனர். 'நகரேஷு காஞ்சி' என்பார்கள்.
விஷ்ணுகோபன், சிம்மவிஷ்ணு இவர்களுக்குப்பின் மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் காலத்தில் பல போர்களும், அரசியல் வியூகங்களும், கல்விச் சாலைகள் விரிவு படுத்துவதும், கலைகளை வளர்ப்பதும் நடந்தது. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு இவர்கள் ஆட்சி செய்தார்கள். விஷ்ணுகோபன்வரை ஆட்சிமொழி சமஸ்கிருதம், அதன்பின் சிம்மவிஷ்ணு காலம்முதல் தமிழ்தான் ஆட்மொழியாக இருந்ததாம். இருந்தாலும் சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன்-1 இரண்டு மொழிகளிலுமே நூல்கள் இயற்றினான் என்பது வரலாறு. இவனுடைய மகன் நரசிம்மவர்மன்-1 க்கு மாமல்லன், ஸ்ரீபரன், வாதாபி கொண்டான் என்று பல பட்டப்பெர்யர்கள். எட்டாம் நூற்றாண்டில் இவன் மகன் நரசிம்மன்-2 கைலாசநாதர் கோயில் மற்றும் வைகுந்த பெருமாள் ஆலயத்தையும் எழுப்பினான். அதன்பின் மகன் நந்திவர்மநும் கட்டினான்.
முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வந்து தங்கி குறிப்பெடுத்த் சீன பயணி யுவான் சுவாங் காஞ்சியை உயர்வாகச் சொல்லியுள்ளார். 6 மெயில் சுற்றளவு இருந்ததாம். பல்லவர்களின் சின்னம் நந்தி. இந்த மகேந்திரவர்மன்-1 திடீரென சமணம் தழுவினான். அதன்பின் அப்பர் (எ) திருநாவுக்கரசர்தான் சைவ சமயத்திற்கு மாற்றினார். அக்காலத்தில் சைவம் வைணவம் பௌத்த விகாரமும் இருந்ததாம். புத்தர் வந்து தங்கிய இடமாதலால் ஆயிரக் கணக்கில் புத்த பிக்குகள் குழுமி இருந்தனர் என்று பயணக் குறிப்பில் உள்ளது.
இதன்பிற்பாடு சீனர்களின் வருகளை பெரியதாகியதால், சீன மன்னனும் இரண்டாம் நரசிம்ம வர்மா பல்லவனும் (700-728) வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். சீன மன்னன் வேண்டியதற்கு இணங்க இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் நாகபட்டினத்தில் முதல் கோபுரத்தை கட்டினான். எனவே இக்கோபுரம் புதுவெளி கோபுரம், சீன பகோடா, மல்லன் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. அதன்பிற்பாடு சோழர் காலத்தில் சீனர்கள் வந்துபோவதும், ராஜேந்திரன் காலத்தில் இன்னொரு கோபுரம் கட்டியதையும் ஆனைமங்கலம் செப்பேடு சொல்கிறது. செப்பேட்டில் தமிழும்-சமஸ்கிருதமும் கலந்துள்ளது. இந்த விஹாரம் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம்.
ஆனால் மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் இலங்கைக்கு போகும்முன் அங்கே ஏழு விஹாரங்கள் கட்டச் சொன்னதாகவும் உள்ளது. (பொன்னியின் செல்வன் கதையிலும் இதுபற்றி நாம் படித்துள்ளோம்.)
பல்லவர்கள் ECR அருகே குகைக்கோயில்களையும், அங்கு துறைமுகம் அமைத்து, இலங்கை மற்றும் தூர கிழக்கு நாட்டுடன் வணிகம் செய்ய போக்குவரத்து வைத்துகொள்ள எப்படி முடிந்தது? அதற்கு பாலாறு தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று நிபுணர்கள். படத்தில் பார்த்தால், பாலாறு காஞ்சியைத் தொட்டுக்கொண்டு போய் அப்படியே செங்கல்பட்தைத் தாண்டி கடலில் சென்று கலக்கிறது. இந்த மார்க்கம்தான் பல்லவர்களுக்கு மிக அனுகூலமாக இருந்துள்ளது.


ஞாயிறு, 28 ஜனவரி, 2018

சங்ககால முருகன் கோயில்

மகாபலிபுரம் அடுத்துள்ள ஒரு ஊர்தான் சாளுவான் குப்பம். சங்ககாலத்தில் புகழ் பெற்றிருந்த நீர்ப்பெய்யாறு எனும் துறைமுகம் பற்றி பெரும்பாணாற்றுப்படையில் குறிப்புகள் உள்ளன. அத்துறைமுகம் இப்பகுதியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இலக்கியத்தில் இந்த இடம் 'திருவீழ்ச்சில்' எனும் பெயரால் சோழர் காலத்தில் வழங்கப்பட்டிருப்பதும், இங்கு பிரசித்திப் பெற்ற சுப்ரமணியர் கோவில் ஒன்று வழிபாட்டில் இருந்துள்ளதும் பல பகுதிகளில் கிடைத்துள்ள கல்வெட்டு விபரங்களின்படி அறியப்படுகிறது. சென்றமுறை வந்த சுனாமியில் இந்த சங்ககாலக் கோயில் வெளியே தெரிந்தது. சோழர்கள் /பல்லவர்கள் கால கல்வெட்டுகளும் கிடைத்தது.

இராஜராஜ சோழனின் கல்வெட்டு ஒரு தூணில் கிடைத்துள்ளது. இராஜராஜர் ஆட்சிக்காலத்திலேயே இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக இருந்திருக்க வேண்டும். மேலும் மூன்றாம் இராஜேந்திரன் கல்வெட்டும் கிடைத்துள்ளது. அப்படிஎன்றால் சோழர் காலம் முடியும் தருவாயில் இப்பகுதியை கடல்கொண்டதால், கோயில் புதைந்து போனது. பிற்பாடு 2004 சுனாமியில் இப்பகுதியை சுனாமி வெளிக்காட்டிவிட்டது.
அதில் பயன்படுத்திய செங்கற்கள் சங்ககால்த்தவை என்றும் தொல்லியல் கூறியுள்ளது. மூன்றாம் சங்கத்தில் சுனாமி வந்து மூடியிருக்கும். பிற்பாடு பல்லவர் காலத்தில் அதன்மீது கருங்கல் கட்டுமானம் எற்றியிருந்து அதுவும் பிற்பாடு வந்த கடல்கோளில் போயிருக்கும். இப்போது வந்த சுனாமி இதை திறந்து காட்டிவிட்டது.

இந்த படத்திலுள்ள தூணைப் போன்று இன்னும் ஏழு கல்வெட்டுகள் உள்ளது. சோழ, பல்லவ, ராஷ்ட்ரகூட்டம் மன்னர்கள் போக அந்த ஊரைச்சேர்ந்த கிழார்பிறையன் என்பவனும், வசந்தா என்ற பிராமணப் பெண்ணும் சுப்பிரமணியர் கோயிலுக்கு காணிக்கையாக 16 கழஞ்சு பொன் கொடுத்துள்ளனராம். மூலஸ்தானம் வடக்கு நோக்கி இருப்பதால் இது சிற்ப சாஸ்திர முறைப்படிதான் கட்டப்பட்டது. ஆகமங்கள் விதிப்படி இல்லை என்பதும், பெரிய அளவு செங்கற்கள் காவிரிபூம்பட்டினம் அரிக்கமேடு பகுதியில் கிடைத்த அதே அளவுக்கு உள்ளதும். இதன் வயது 1700- 2200 ஆண்டுகள் என்பதையும் கண்டுபிடித்தது. இது அக்காலத்து சுனாமியின் தாக்கமே என்கிறார் திரு.நாகசாமி. ஏனென்றால் கோயிலின் கிழக்குப் பகுதி அதிக சேதாரமாகியும், மேற்கு பகுதி அப்படியே உள்ளது என்றும் சொல்லியுள்ளார். மாமல்லபுரம் கல்பாக்கம் முன்பாக சதுரங்கபட்டினம் அன்றைக்கு ஒரு துறைமுகமாக விளங்கியிருக்கும். கோயிலின் நுழைவாயிலில் தூணில் குரவைக்கூத்து செதுக்கி இருந்தது. அப்படிஎன்றால் இது கிபி 1-3 நூற்றாண்டு என்பதில் ஐயமில்லை.

இருந்தபோதும், இதைப்பற்றி அதிகமாக சங்க இலக்கியத்தில் தெளிவான குறிப்புகள் இல்லாததால் இது பெரும்பாணாற்றுப்படையில் வரும் ஊர்தானா என்று சந்தேகம் இன்னும் உள்ளது என்கிறார் திரு.நாகசாமி. மூழ்கிப்போன ஏழு கோயில்களில் இதுவும் ஒன்றோ?

2006ல் நன் சென்றிருந்த சமயம் கடலோர குகைக்கோயில் முன்பாக இன்னும் பல கட்டுமானங்கள் கண்டுபிடித்திருந்தனர். இறங்கிப் பார்த்தேன். ஓரடி குழிக்குள்ளே நீர் பக்கவாட்டில் கிணற்று நீர்போல் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. அதெப்படி? ஏதோ கடலலை அதை தள்ளுவதுபோல் இருந்தது.

என்னுடைய கருத்து:-
15ம் நூற்றாண்டு அருணகிரியார் காலத்தில் இந்தக் கோயில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதே ECR வழித் தடத்தில் உள்ள செய்யூர் ஸ்ரீகந்தசாமியை வழிபட்டவர், இந்த திருவீழ்ச்சில் சுப்ரமணியரைப் பற்றி பாடியிருக்க வேண்டுமே? ஆனால் அதைப்பற்றி எங்கேனும் பாடினாரா? அறிந்தவர் கூறவும்.
Image result for sangam era Murugan temple, mahabalipuram

சூடாமணி விஹாரம்

நாகபட்டினத்தில் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன் எழுப்பட்ட புத்த விஹாரங்கள் இருந்துள்ளது. சூடாமணி விஹாரம் புதுவெளிப்பளையம் பகுதியில் இருந்ததற்கான தடயமும் இருந்துள்ளது. நீங்கள் படத்தில் பார்க்கும் அடுக்கு மாடி விஹாரம் ‘சீனா கோபுரம்’ Chinese Pagoda 1867ல் இடிக்கப்பட்டது என்ற குறிப்புகள் உள்ளன. இராஜேந்திர சோழன் காலத்தில் புத்தமதம் கடலோர தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது.
ஜப்பானிலுள்ள ராக்ஃபெல்லர் அருங்காட்சியகத்தில் புத்த வெண்கல சிலை இருந்தது. அதன் கமல பீடத்தில் தமிழ் எழுத்துக்கள் வடிக்கபட்டிருந்தது. "இராஜேந்திர பெரும்பள்ளி ஆக்கசைப் பெரும்பள்ளி ஆழ்வார் கோயிலுக்குத திருவாவுட்சவம் எழுந்தருள ஆழ்வார் இவ்வாள்வரை எழுந்தரளவிட்டார் சிறுதாவூர் நலன் குணக்கர உடையார்... ஸ்வஸ்திஸ்ரீ பதினெண் விஷயத்துக்கும் ஆக்கசாலைகள் நாயகர்" என்று இருந்துள்ளது. 'பதினெண் விஷயம்' என்பது ஆக்கசாலை என்னும் தங்கம்/வெள்ளி காசுகள் அச்சடிக்கும் நாணயச்சாலை உள்ளது. இங்கே நாயகர் என்பது புத்தரைக் குறிக்கும். ராஜராஜன் காலத்திலேயே இதற்கு இசைவு பெறப்பட்டது என்றும் ராஜேந்திரன் காலத்தில் முடிந்தது என்றும் தெரிகிறது.
200 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ மிஷனரிகள் வந்தபோது இது இடிக்கப்பட்டது. அப்போது முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் 1865 முதல் 1930 வரை அங்கு கண்டெடுத்தனர். நாகபட்டினத்தில் இரண்டு விஹாரங்கள் இருந்துள்ளது தெரிகிறது. ஸ்ரீவிஜயம் சுமத்ராவின் மன்னன் மகரத்வஜ சூடாமணி வர்மன் இங்கு ராஜேந்திர சோழனிடம் விஹாரம் கட்ட அனுமதி பெற்று இதை நாகபட்டின கடலோர துறைமுக பகுதியில் எழுப்பினான் என்பதை ஆனைமங்கலம் செப்பேடுகள் உறுதி செய்கிறது. ஆனைமங்கலம் கிராமத்தை அந்த விஹாரத்திற்கே தானம் தந்தற்கு சாசனம் எழுதிவைத்தான். இதுபறிய குறிப்புகள் பர்மாவிலுள்ள அருங்காட்சியக செப்பேடிலும்  உள்ளதாம்.