This blog carries interesting articles on travel, spiritual, personal, poetical, social experience of the author.
About Author
- S.Chandrasekar
- A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.
வெள்ளி, 27 ஜூலை, 2018
வியாழன், 26 ஜூலை, 2018
நீரின்றி அமையாது...
மேட்டூர் திறந்தபின் பாய்ந்து வந்த நீர் இதுவரை எந்த அளவுக்கு உபயோகமாக இருந்தது? எத்தனை TMC பாசனத்திற்கு விடப்பட்டது, அணைக்கட்டில் மீதம் என்ன, எத்தனை TMC வீணாகக் கடலுக்குப் போனது? தெரியவில்லை! காவேரி கொள்ளிடம் மற்றும் கிளை நதிகள் எல்லாமே பெருக்கெடுத்து ஓடியதா? திருப்பிவிடப்பட்ட உபரி நீரால் பிற பகுதிகளின் ஏரிகள் கண்மாய்கள் தாங்கல் எல்லாமே நிரம்பி வருகிறதா? ஒரு வாரமாகியும் செய்தி ஏதும் இல்லையே! நதி எங்கே போகிறது?... கடலைத்தேடி.
"காவேரி உயிர்க்குதம்மா கரைப்புரண்டு ஓடுதம்மா
கொள்ளிடம் பாயுதம்மா கல்லணையும் நிரம்புதம்மா
வெள்ளப் பெருக்கெடுத்தும் ஏரிகம்மாய் நிறையலையே
திறந்துவிட்ட நீரும்தான் கரனை தாங்கல் போகலையே
சுழன்றுவந்தும் பயனில்லை ஏந்தல் குளமும் வீடாச்சே
தூரெடுத்து வெக்கலையே கடலைநோக்கி போயிடுச்சே"
கொள்ளிடம் பாயுதம்மா கல்லணையும் நிரம்புதம்மா
வெள்ளப் பெருக்கெடுத்தும் ஏரிகம்மாய் நிறையலையே
திறந்துவிட்ட நீரும்தான் கரனை தாங்கல் போகலையே
சுழன்றுவந்தும் பயனில்லை ஏந்தல் குளமும் வீடாச்சே
தூரெடுத்து வெக்கலையே கடலைநோக்கி போயிடுச்சே"

சனி, 21 ஜூலை, 2018
உங்க சாமி, எங்க சாமி
இன்று முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். அதில் ஒருவர் 'ஆரிய கடவுள்கள் தமிழ் கடவுள்களை அடித்து விரட்டிவிட்டன. இன்று யாரும் அதை வணங்குவதில்லை' என்று போட்டிருந்தார். இப்படி விஷயம் புரியாமல் பேசுவதற்குப்பதில் இவர் கிறிஸ்துவ மதத்தில் போய் நலமாகச் சேரலாம்.
நம்மூர் பக்கம் சுடலைசாமி, பாவாடைக்காரி, கார்த்தவராயன் வணங்குவார்கள். எதை வணங்கினும் அது ஆரிய சிவன்-சக்தி, கார்த்திகேயனையே போய்ச்சேரும் என்பதை இவரைப் போன்றோர் அறியமாட்டார்கள். ஒரு ஊரில் வணங்கப்படும் கிராம தேவதை மற்றும் எல்லை தெய்வங்களை பக்கத்து ஊர்க்காரர் வணங்குவாரா என்றால் இல்லை. ஆனால் வணங்கினாலும்/வணங்காவிட்டாலும் தவறில்லை.
எங்கள் குலதெய்வ கோயில்களில் நுழைவிலேயே ஊஞ்சல் போட்டு கருப்புசாமி, பேச்சியம்மன், மலையம்மன், போன்ற சன்னதிகளும் உண்டு. நாம் அதையும் வணங்குகிறோம். இதில் என்ன தவறு? மையமாக மகாமாரியம்மனும் சுற்றுச் சன்னதிகளில் பிள்ளையார், சிவன், முருகன் உண்டு. எல்லாமே ஈசனின் ஆக்கினையில் உருவானவை. இந்த விஸ்வத்தை இறைவன் என்ற பரம் பொருள்தான் இயக்குகிறான். கடவுளை, சிறு தெய்வங்களை சக்தியூட்டி அவை வெளிப்படுவதும் ஒடுங்குவதும் ஈசனுக்குள்தான். இதை அறியாமல் 'உங்க சாமி எங்க சாமி' என்று இவரைப்போல் பேசுவோர் இன்னும் உண்டு. திருத்த முடியாது! தமிழ் நேசமும் பிரிவினையும் வந்தாலும் வந்தது, ஊரே இரண்டு பட்டுப்போகும் போலிருக்கு!

நித்திரை
'வீட்டிற்குள் இடம் மாற்றி படுத்தால் தூக்கமே வராது' என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு எங்கு எப்படித் தூங்கினாலும் 1 நிமிடத்தில் குறட்டை விடுவேன். தூங்குவது கிழக்கு-மேற்காக இருக்கட்டும்.
பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் நபர் ஏன் தன் வீட்டிற்குள்ளே இடம் மாறி படுத்தால் தூக்கம் வருவதில்லை? இதற்கு எதிர்மறை Geopathy கதிர்கள்தான் காரணம். பூமித்தட்டு அடியிலிருந்து மேற்புறம் நோக்கி அடிக்கும் தோஷ அலைகள்தான் இவை. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாதாளத்தில் ஓடும் நீர் நிலைகள், வெற்றிடம், பள்ளம், மூடிய கிணறு, துளைக்கிணறு, புதையுண்ட கெடுவஸ்துகள், உருகிய கனிமங்களின் கதிர்கள், என்று எவ்வளவோ சொல்லலாம். இந்த தீயவீச்சை ஸ்ப்டிகம், செம்பு ஆகியவை கட்டுப்படுத்தும். சிலர் வீட்டில் எப்போதுமே ஒரு நிலப் பகுதியில் செடிகள் வளராது, மரம் பட்டுபோகும், நாய் படுத்துத்தூங்காது, அடிக்கடி மின்சார பலபு பியுஸ் போகும், உட்கார்ந்து படித்தாலும் புத்தியில் பதியாது, நோய்வாய்ப்படுவது, இப்படி பல எதிர்மறைகள் உண்டு. இதைஅங்கு தேகமே காட்டிக் கொடுக்கும். அதற்கேற்ப அவ்விடத்தை சுத்தி செய்யவேண்டும்.
நமக்கு பழக்கமில்லாத இடத்திற்கு போனால் தூக்கமே வராது என்றால் உடல்நலம் பாதிக்கும். வெளியூருக்குப் போகும்போது அங்கே லாட்ஜில் ரூம் எடுத்து தங்குகிறோம். பலதரப்பட்ட நபர்கள் தங்கிவிட்டுப் போன அறை, தூய அலைகளால் நிரப்பப் பட்டிருக்குமா என்ன? எதிர்மறை வீச்சுதான் இருக்கும். இதையெல்லாம் முறியடித்து நாம் தூங்க வேண்டும். உடல் அசிதியாக இருந்தால் எப்படியும் தூக்கம் வந்திடும். ஆனால் மற்ற நேரத்தில் இந்த பொருந்த கதிர்கள் பாதிக்குமே!
வீட்டில் நீங்கள் தூங்கப்போகும் முன் தியானம் செய்துவிட்டுப் படுங்கள். பிரணாயாமம் செய்யுங்கள். நுரையீரலின் கொள்ளளவை முறைப்படுத்துங்கள். மாலையில் முகம் கைகால் சுத்தம்செய்து நெற்றிக்கு விபூதி தரித்ததும், கழுத்தில் ஸ்படிகம்/ ருத்திராட்சம் மாலையை அணிந்து வழிபாடு செய்யுங்கள். தீட்சை பெற்ற சிலர் தலையில் ருத்திராட்சம் மாலை அணிந்து கொண்டு ஜெபம் செய்வார்கள். இது தலையின் உள்ளே ரத்த ஓட்டத்தை சீராக்கி, மன அழுத்தத்தை குறைக்கும். இயற்கையாகவே ருத்திராட்சம் மின்காந்த சக்தி பெற்றது. இது மூளைக்கு தேவைகேற்ப சக்தியைப் பாய்ச்சி அதை புதுப்பிக்கிறது. உங்களுடைய தேக ஒளிவட்டத்தில் எதிர்மறையாக எதுவும் குறுக்கிடாமல், சகஸ்ரார சக்கரம் சக்தியூட்டப் படுவதால் அதிவேகத்தில் சொப்பன நிலைக்குபோக கண்களைப் பணிக்கும்.
இதை எங்கே உட்கார்ந்து செய்யவேண்டும்? தூங்கும் இடத்தில்தான். ஒரு கட்டத்தில் மூளை அசதிபோல் காட்டும், கண்களுக்கு நித்திரையை தூண்டும். அப்படியே கால்நீட்டி படுத்துத் தூங்குங்கள். மூன்று முறையாவது நித்திரை சுழற்சி சுற்றில் புரண்டு படுப்பீர்கள். சூரிய சந்திரனை மையமாக வைத்து இயங்கும் நம் மனோ கடிகாரம் விடியும்போது எழுப்பி விடும்.

வெள்ளி, 20 ஜூலை, 2018
மீன்பிடி சூத்திரம்
பேன்கொட்டை Coculus indicus தாவரத்தின் விதைகளை சேகரித்து தீயில் வறுத்த பின் அதை அம்மியில் அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிவிட்டபின் அந்த டிகாஷன் கரைசலை வடிகட்ட வேண்டும். இந்த மருந்தை நதி, குளம், ஏரி நீரில் சிறிதளவு கரைத்து விட்டால் அது வேகமாக வேலை செய்து மீன்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி விடும். மீன்கள் நீரை விட்டு எகிறிப் பாய்ந்து கரையோரம் வந்து தாமே விழுந்து விடும். மத்தியான வேளையில் மீன்கள் எங்கு அதிகம் உள்ளது என்று பார்த்து விட்டு இந்த மருந்தை கரைத்தால் நல்ல பலன் கிட்டும். இக்கரைசலால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எந்த ஆபத்துமில்லை என்கிறார் போகர்.

காகித பாத்திரம்
கிமு4 ல் போகர் சீனாவில் பெரிய ஆலையை நிறுவி காகிதம் தயாரித்தார். அந்த சூத்திரத்தை சீனர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். பிற்காலத்தில் அதை கண்டுபிடித்ததாக யார் யார் பெயரோ வெளிவந்தது.
காகித பாத்திரத்தில் நன்றாக சமைக்கலாம் என்று போகர் கூறுகிறார். Paper கோப்பை/ கிண்ணம்/சட்டி எல்லாமே இப்போது கிடைக்கிறது. காய்கறி கடையில் கிடைக்கும் பிரண்டையை வாங்கி இலையை நீக்கி தண்டை மட்டும் துண்டுகளாக நறுக்கி மிக்சியில் நீர் விட்டு அரைத்து துவையலாக செய்து கொள்ளுங்கள். இதை கொஞ்சம் கொஞ்சமாக பேப்பர் கிண்ணத்தின் உள்ளேயும் வெளியேயும் பூசி காய விடுங்கள். இதுபோல் மூன்று முறை செய்தால் மூலிகை பூச்சு சற்று தடிமனாக சொரசொரப்பாக இருக்கும். இப்போது இதில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, பலகாரங்கள்கூட பொறித்து எடுக்கலாம். பிரண்டை அரைத்து உளுந்து அப்பள மாவில் கலந்து இடுவார்கள். ஆனால் இது எதற்கு? காகித பாத்திரம் தீ பற்றாமல் இருக்கவும், உண்ணும் பலகாரங்களால் வாய்வுத் தொல்லை வராமல் இருக்கவும் போகர் வகுத்த 2-in-1 யுக்தி.
டெய்ல் பீஸ்:- ஒரு அங்குலத்திற்கு நறுக்கிய இந்த பிரண்டை துண்டுகளை நன்றாக நீரில் அலசி விட்டு, அதை வாணலியில் வெறுமனே கருப்பாக வறுத்து எடுத்தால் வருவதே 'பிரண்டை உப்பு'.. நாட்டு மருந்து கடையில் விற்கும்

வியாழன், 19 ஜூலை, 2018
நெளியும் நண்பன்!
இக்காலத்தில் அதிக செயற்கை உரம் போடுவதால் மண்ணில் இயற்கை சத்து இருப்பதில்லை. பஞ்சகவ்ய முறையை சிலர்தான் பின்பற்றி வருகிறார்கள். அதில் ஊக்கிகளாக பூவன் பழத்தையும் இளநீரையும் சேர்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு. வஸ்துகளை நொதிக்க வைக்கவும், அக்கரைசல் மண்ணின் அடியில் Nitrogen fixation ஏற்படுத்தக் கூடிய மண்புழுக்களை பெருக்கவும் உதவும்.
போகர் தன் பாடலில் நாக்குபூச்சியை உற்பத்தி செய்யும் எளியவழியைச் சொல்கிறார். செம்மண் பூமியில் ஒரு குழி தோண்டி அதில் ஈச்சம் பழத்தை வெல்லத்தோடு பிசைந்து வைக்கோலோடு கலந்து மண்போட்டு மூடிட வேண்டும். ஒரு இரவு முழுதும் விட்ட பின் சுமார் ஐந்து சாமம் கழித்துப்பார்த்தால் பூநாகங்கள் (மண் புழுக்கள்) அதை சூழ்ந்திருக்கும். இக்காலத்தில் செம்மண் பூமியை எங்கே தேடிச்செல்வது? வேறு வழியின்றி மக்கும் குப்பைகளை கம்போஸ்ட் உரமாக மாற்றி மண்புழு உற்பத்தி செய்கிறார்கள். மேலே சொன்ன முறையில் மறந்துபோயும் சாணம்/கோணி குழியின் அருகில் வைக்கவேண்டாம். மண்புழு போய் தேள் வந்துடும்... டும்டும்டும்.!

ஆரை கீரை
இதன் பச்சை இலைகள் நித்தியகல்யாணி பூவின் வடிவில் இருக்கும். நீளமான ஒடிசலான தண்டில் நாலு-இலைகள் கூட்டம்தான் இருக்கும். வாய்க்கால் குளம் ஓரங்களில் இது வளரும். முன்பு எங்கள் வீட்டு கிணற்றடியில் நிறைய வளர்ந்திருந்தது. இதன் அடிப்பகுதியில் தலைமுடி நார் குப்பைகள் சுற்றி இருக்கும், பறிக்க பொறுமை தேவை. இந்த கீரையைப் பற்றி தெரியாததால் அதிகமாக யாரும் சமைத்து சாப்பிடுவதில்லை.
நம் உடலுக்கு வலுவூட்டும் எல்லா தாது சத்துகளும் இதில் உள்ளது. சும்மாவே பறித்து வாயில் போட்டு உண்ணலாம், வாய்புண் போகும். அதைவிட பருப்பு போட்ட கீரை கூட்டு பலன் தரும். தரையில் பக்கவாட்டில் கொடிபோல் வளர்ந்துகொண்டு போகும், இதன் வேர் அரை அங்குலம் ஆழம்கூட போகாது. அதனால் அடிபாகத்தில் கிள்ளி எடுத்தால் சீக்கிரமே வளரும் இயல்புடையது. மூன்று இலைகள் கொண்ட புளியாரை, ஒரே ஒரு இலை மட்டுமுள்ள வல்லாரை, இவை எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கீரைகள்தான்.
ஜெல்லி செய்வோம் வாங்க!
ஓட்டலில் ஐஸ்கிரீம் / தயிர் மட்கா மண்பானையில் கொடுப்பார்களே, அதுபோல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மாம்பழம் சீசன் என்பதால். ஒரு சிறிய மாம்பழம் எடுத்து அதன் சாற்றை இந்த மட்காவில் ஊற்றுங்கள். இதில் கட்டுக்கொடி (Coculus hirsutus) என்ற மூலிகை இலைகளை பறித்து கசக்கி இதனுள் சாற்றை விடுங்கள். பத்து நிமிடங்களில் இந்த மாம்பழ கூழ் ஜெல்லி தயார். கவிழ்த்தால் பொத்தென விழும். எந்த பழத்தின் சாற்றை வைத்தும் இவ்வாறு ஜாம்/ஜெல்லி செய்யலாம்.
சீசன் முடிந்தபின்னும் ஜெல்லி வேண்டுமென்றால் என்ன செய்வது? இதுபோன்ற மட்கா மண் பாண்டத்தினுள்ளே இந்த மாம்பழ சாற்றை கொஞ்சம் ஊற்றி உட்புறம் முழுதும் பரவுமாறு சுற்றிவிட்டு காய விடுங்கள். இதுபோல் இரண்டு முறை juice அப்பிடச் செய்யுங்கள். இப்போது உள்ளே சுவரில் பழக்கூழ் பூச்சுதான் உள்ளது. தேவையானபோது, இதில் சுத்தமான நீர் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையும் போட்டு இந்த இலையின் சாற்றையும் பிழிந்து வைத்து விடுங்கள். பத்து நிமிடங்களில் மாம்பழ ஜெல்லி தயார். பெயரில் உள்ளதுபோல் இலையின் சாற்றுக்கு நீரை கட்டிவைக்கக்கூடிய குணமுண்டு. சித்த வைத்தியத்தில் இலைகளைக் கொண்டு திடப் பொருளை பேதிக்கவும், நீர்த்ததை கட்டவும் முடியும்.

சீந்தில் சர்க்கரை
சித்தர் பாடல்களில் நிறைய காயகற்பங்கள் குடிநீர் சூரணம் முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் எளிதான ஒன்றான 'சீந்தில் சர்க்கரை' சொல்கிறேன். உங்கள் வீட்டு அருகாமையில் புதர்களிலும் மரங்களிலும் படர்ந்திருக்கும் கொடிதான் சீந்தில் கொடி. இதன் இலைகள் இதயம் போன்ற வடிவத்தில் இருக்கும். மஞ்சள் நிற சிறு பூக்களும், கொத்து கொத்தாக சிவப்பு நிற பழங்களை உடையது. பழங்கலை அழுத்தினால் கொழகொழவென இருக்கும்.
நீளமான இக்கொடியை இழுத்து உருவி, இதனுடைய முதிர்ந்த தண்டுகளை சுமார் 1 கிலோ அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 4 டம்பளர் நல்ல நீரை ஊற்றி கையால் பிசைந்து கிளறவும். பிறகு இன்னொரு பாத்திரத்தின் வாயில் வடிகட்டும் துணியால் மூடி அதில் இந்த கலக்கிய திரவ நீரை ஊற்றவும். இந்த பாத்திரத்தை சுமார் முக்கால் மணிநேரம் அசைக்காமல் வைத்திருந்தால், அதன் அடியில் வெண்மை மாவு போன்று தங்கியிருக்கும். (இஞ்சியை நீர்விட்டு அரைத்து வைத்தால் அடியில் சுண்ணாம்பு தங்குமே அதுபோல்தான்.)
இந்த வடிகட்டிய நீரை மேலோட்டமாக வடித்து மீண்டும் பழைய சக்கையுள்ள பாத்திரத்தில் ஊற்றி அதோடு சுத்தமான நீரை இரண்டு டம்பளர் ஊற்றி பிசைந்து கிளறவும். முன்பு அடியில் படிந்த மாவை தனியே ஓடு பீங்கான் கோப்பையில் ஊற்றி ஆற விடவும். மீண்டும் கலக்கிய திரவ நீரை வடிகட்டி ஊற்றி செய்யவும். இறுதியில் இந்த மாவையும் சேகரித்து அதோடு காய விடுங்கள். வெள்ளை மாவு போன்று வரும். இதுவே சீந்தில் சர்க்கரை.
இதை சுமார் அரை கிராம் எடுத்து தேனில் குழைத்து ஒருவேளை உண்டால், அசதி உடல்வலி வயிற்றுப்புண் அல்சர் பலகீனம் சுரம் போகும். இதன் தண்டு-இலை-பூ ஆகியவற்றை காயவைத்து இடித்து மெல்லிய துணியில் சலித்தால் சூரணம் தயார். இதை வெறும் வயிற்றில் தினம் அந்தி/சந்தி அரை கிராம் அளவு எடுத்து பனங்கற்கண்டு போட்ட பாலோடு குடித்தால் சகல நோய்களும் போகும். வெறும் சூரணத்தை குடிநீராக அருந்த நீரிழிவு நோய் கட்டுப்படும். உடலும் வலுப்பெறும். ஆர்வம் உள்ளோர் முயற்சி செய்யலாம்!

நீளமான இக்கொடியை இழுத்து உருவி, இதனுடைய முதிர்ந்த தண்டுகளை சுமார் 1 கிலோ அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 4 டம்பளர் நல்ல நீரை ஊற்றி கையால் பிசைந்து கிளறவும். பிறகு இன்னொரு பாத்திரத்தின் வாயில் வடிகட்டும் துணியால் மூடி அதில் இந்த கலக்கிய திரவ நீரை ஊற்றவும். இந்த பாத்திரத்தை சுமார் முக்கால் மணிநேரம் அசைக்காமல் வைத்திருந்தால், அதன் அடியில் வெண்மை மாவு போன்று தங்கியிருக்கும். (இஞ்சியை நீர்விட்டு அரைத்து வைத்தால் அடியில் சுண்ணாம்பு தங்குமே அதுபோல்தான்.)
இந்த வடிகட்டிய நீரை மேலோட்டமாக வடித்து மீண்டும் பழைய சக்கையுள்ள பாத்திரத்தில் ஊற்றி அதோடு சுத்தமான நீரை இரண்டு டம்பளர் ஊற்றி பிசைந்து கிளறவும். முன்பு அடியில் படிந்த மாவை தனியே ஓடு பீங்கான் கோப்பையில் ஊற்றி ஆற விடவும். மீண்டும் கலக்கிய திரவ நீரை வடிகட்டி ஊற்றி செய்யவும். இறுதியில் இந்த மாவையும் சேகரித்து அதோடு காய விடுங்கள். வெள்ளை மாவு போன்று வரும். இதுவே சீந்தில் சர்க்கரை.
இதை சுமார் அரை கிராம் எடுத்து தேனில் குழைத்து ஒருவேளை உண்டால், அசதி உடல்வலி வயிற்றுப்புண் அல்சர் பலகீனம் சுரம் போகும். இதன் தண்டு-இலை-பூ ஆகியவற்றை காயவைத்து இடித்து மெல்லிய துணியில் சலித்தால் சூரணம் தயார். இதை வெறும் வயிற்றில் தினம் அந்தி/சந்தி அரை கிராம் அளவு எடுத்து பனங்கற்கண்டு போட்ட பாலோடு குடித்தால் சகல நோய்களும் போகும். வெறும் சூரணத்தை குடிநீராக அருந்த நீரிழிவு நோய் கட்டுப்படும். உடலும் வலுப்பெறும். ஆர்வம் உள்ளோர் முயற்சி செய்யலாம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

