இன்று முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். அதில் ஒருவர் 'ஆரிய கடவுள்கள் தமிழ் கடவுள்களை அடித்து விரட்டிவிட்டன. இன்று யாரும் அதை வணங்குவதில்லை' என்று போட்டிருந்தார். இப்படி விஷயம் புரியாமல் பேசுவதற்குப்பதில் இவர் கிறிஸ்துவ மதத்தில் போய் நலமாகச் சேரலாம்.
நம்மூர் பக்கம் சுடலைசாமி, பாவாடைக்காரி, கார்த்தவராயன் வணங்குவார்கள். எதை வணங்கினும் அது ஆரிய சிவன்-சக்தி, கார்த்திகேயனையே போய்ச்சேரும் என்பதை இவரைப் போன்றோர் அறியமாட்டார்கள். ஒரு ஊரில் வணங்கப்படும் கிராம தேவதை மற்றும் எல்லை தெய்வங்களை பக்கத்து ஊர்க்காரர் வணங்குவாரா என்றால் இல்லை. ஆனால் வணங்கினாலும்/வணங்காவிட்டாலும் தவறில்லை.
எங்கள் குலதெய்வ கோயில்களில் நுழைவிலேயே ஊஞ்சல் போட்டு கருப்புசாமி, பேச்சியம்மன், மலையம்மன், போன்ற சன்னதிகளும் உண்டு. நாம் அதையும் வணங்குகிறோம். இதில் என்ன தவறு? மையமாக மகாமாரியம்மனும் சுற்றுச் சன்னதிகளில் பிள்ளையார், சிவன், முருகன் உண்டு. எல்லாமே ஈசனின் ஆக்கினையில் உருவானவை. இந்த விஸ்வத்தை இறைவன் என்ற பரம் பொருள்தான் இயக்குகிறான். கடவுளை, சிறு தெய்வங்களை சக்தியூட்டி அவை வெளிப்படுவதும் ஒடுங்குவதும் ஈசனுக்குள்தான். இதை அறியாமல் 'உங்க சாமி எங்க சாமி' என்று இவரைப்போல் பேசுவோர் இன்னும் உண்டு. திருத்த முடியாது! தமிழ் நேசமும் பிரிவினையும் வந்தாலும் வந்தது, ஊரே இரண்டு பட்டுப்போகும் போலிருக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக