ஓட்டலில் ஐஸ்கிரீம் / தயிர் மட்கா மண்பானையில் கொடுப்பார்களே, அதுபோல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மாம்பழம் சீசன் என்பதால். ஒரு சிறிய மாம்பழம் எடுத்து அதன் சாற்றை இந்த மட்காவில் ஊற்றுங்கள். இதில் கட்டுக்கொடி (Coculus hirsutus) என்ற மூலிகை இலைகளை பறித்து கசக்கி இதனுள் சாற்றை விடுங்கள். பத்து நிமிடங்களில் இந்த மாம்பழ கூழ் ஜெல்லி தயார். கவிழ்த்தால் பொத்தென விழும். எந்த பழத்தின் சாற்றை வைத்தும் இவ்வாறு ஜாம்/ஜெல்லி செய்யலாம்.
சீசன் முடிந்தபின்னும் ஜெல்லி வேண்டுமென்றால் என்ன செய்வது? இதுபோன்ற மட்கா மண் பாண்டத்தினுள்ளே இந்த மாம்பழ சாற்றை கொஞ்சம் ஊற்றி உட்புறம் முழுதும் பரவுமாறு சுற்றிவிட்டு காய விடுங்கள். இதுபோல் இரண்டு முறை juice அப்பிடச் செய்யுங்கள். இப்போது உள்ளே சுவரில் பழக்கூழ் பூச்சுதான் உள்ளது. தேவையானபோது, இதில் சுத்தமான நீர் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையும் போட்டு இந்த இலையின் சாற்றையும் பிழிந்து வைத்து விடுங்கள். பத்து நிமிடங்களில் மாம்பழ ஜெல்லி தயார். பெயரில் உள்ளதுபோல் இலையின் சாற்றுக்கு நீரை கட்டிவைக்கக்கூடிய குணமுண்டு. சித்த வைத்தியத்தில் இலைகளைக் கொண்டு திடப் பொருளை பேதிக்கவும், நீர்த்ததை கட்டவும் முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக