இதன் பச்சை இலைகள் நித்தியகல்யாணி பூவின் வடிவில் இருக்கும். நீளமான ஒடிசலான தண்டில் நாலு-இலைகள் கூட்டம்தான் இருக்கும். வாய்க்கால் குளம் ஓரங்களில் இது வளரும். முன்பு எங்கள் வீட்டு கிணற்றடியில் நிறைய வளர்ந்திருந்தது. இதன் அடிப்பகுதியில் தலைமுடி நார் குப்பைகள் சுற்றி இருக்கும், பறிக்க பொறுமை தேவை. இந்த கீரையைப் பற்றி தெரியாததால் அதிகமாக யாரும் சமைத்து சாப்பிடுவதில்லை.
நம் உடலுக்கு வலுவூட்டும் எல்லா தாது சத்துகளும் இதில் உள்ளது. சும்மாவே பறித்து வாயில் போட்டு உண்ணலாம், வாய்புண் போகும். அதைவிட பருப்பு போட்ட கீரை கூட்டு பலன் தரும். தரையில் பக்கவாட்டில் கொடிபோல் வளர்ந்துகொண்டு போகும், இதன் வேர் அரை அங்குலம் ஆழம்கூட போகாது. அதனால் அடிபாகத்தில் கிள்ளி எடுத்தால் சீக்கிரமே வளரும் இயல்புடையது. மூன்று இலைகள் கொண்ட புளியாரை, ஒரே ஒரு இலை மட்டுமுள்ள வல்லாரை, இவை எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கீரைகள்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக