About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 19 ஜூலை, 2018

சீந்தில் சர்க்கரை

சித்தர் பாடல்களில் நிறைய காயகற்பங்கள் குடிநீர் சூரணம் முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் எளிதான ஒன்றான 'சீந்தில் சர்க்கரை' சொல்கிறேன். உங்கள் வீட்டு அருகாமையில் புதர்களிலும் மரங்களிலும் படர்ந்திருக்கும் கொடிதான் சீந்தில் கொடி. இதன் இலைகள் இதயம் போன்ற வடிவத்தில் இருக்கும். மஞ்சள் நிற சிறு பூக்களும், கொத்து கொத்தாக சிவப்பு நிற பழங்களை உடையது. பழங்கலை அழுத்தினால் கொழகொழவென இருக்கும்.

நீளமான இக்கொடியை இழுத்து உருவி, இதனுடைய முதிர்ந்த தண்டுகளை சுமார் 1 கிலோ அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 4 டம்பளர் நல்ல நீரை ஊற்றி கையால் பிசைந்து கிளறவும். பிறகு இன்னொரு பாத்திரத்தின் வாயில் வடிகட்டும் துணியால் மூடி அதில் இந்த கலக்கிய திரவ நீரை ஊற்றவும். இந்த பாத்திரத்தை சுமார் முக்கால் மணிநேரம் அசைக்காமல் வைத்திருந்தால், அதன் அடியில் வெண்மை மாவு போன்று தங்கியிருக்கும்.  (இஞ்சியை நீர்விட்டு அரைத்து வைத்தால் அடியில் சுண்ணாம்பு தங்குமே அதுபோல்தான்.)

இந்த வடிகட்டிய நீரை மேலோட்டமாக வடித்து மீண்டும் பழைய சக்கையுள்ள பாத்திரத்தில் ஊற்றி அதோடு சுத்தமான நீரை இரண்டு டம்பளர் ஊற்றி பிசைந்து கிளறவும். முன்பு அடியில் படிந்த மாவை தனியே ஓடு பீங்கான் கோப்பையில் ஊற்றி ஆற விடவும். மீண்டும் கலக்கிய திரவ நீரை வடிகட்டி ஊற்றி செய்யவும். இறுதியில் இந்த மாவையும் சேகரித்து அதோடு காய விடுங்கள். வெள்ளை மாவு போன்று வரும். இதுவே சீந்தில் சர்க்கரை.

இதை சுமார் அரை கிராம் எடுத்து தேனில் குழைத்து ஒருவேளை உண்டால், அசதி உடல்வலி வயிற்றுப்புண் அல்சர் பலகீனம் சுரம் போகும். இதன் தண்டு-இலை-பூ ஆகியவற்றை காயவைத்து இடித்து மெல்லிய துணியில் சலித்தால் சூரணம் தயார். இதை வெறும் வயிற்றில் தினம் அந்தி/சந்தி அரை கிராம் அளவு எடுத்து பனங்கற்கண்டு போட்ட பாலோடு குடித்தால் சகல நோய்களும் போகும். வெறும் சூரணத்தை குடிநீராக அருந்த நீரிழிவு நோய் கட்டுப்படும். உடலும் வலுப்பெறும். ஆர்வம் உள்ளோர் முயற்சி செய்யலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக