About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 31 டிசம்பர், 2016

பஞ்சபூதனை சரணடைந்தேன்

Image may contain: 1 person
















கனவிலும் நனவிலும் என்னை இயக்கிக் காத்தருளும் நீயின்றி எனக்குத் தனித்துவம் ஏது? பாதம் பணிந்தேன் பரம்பொருளே ! இங்கு அக்னியில் பரனும் அவர் இடது கால் கீழே பரையும் ஒருசேர காட்சி தந்துள்ளனர். நாம் எல்லோரும் அப்பரம்பரையில் வருகிறோம். 

< சிவநாதம் >
--------------------
சபைக்கோர் அரசனே அம்பலவாணனே
சிவகாமியின் சுந்தரனே நடராசனே
வெட்டவெளி சித்தாந்தத்தின் ரகசியமே
உள்ளொளியை காட்டிடுவீர் நமச்சிவாயமே!
பூசைநீரை கரிமுகம் துதியால் சொரிய
சிலந்திவலை பின்னல் கீழ் இளைப்பாறிய
அகிலாண்ட நாயகியின் உன்னத நாதனே
எந்தனுக்கோர் வழி சொல்வீர் நமச்சிவாயமே!
அடிமுடி எட்டா அருணையின் ஜோதியே
திருவடி தொழுகிறேன் நின்னருள் வேண்டியே
உண்ணாமுலை மகிழும் அருணாச்சலமே
நினைத்திடவே முக்திதாரும் நமச்சிவாயமே!
ஆரூர் மண்ணில் பிறந்தாலே நற்கதியென
பாரோர் போற்றும் கமலையின் தலைவனே
ஏனோ அங்கு பிறந்திலன் என்செய்வேன்
பேதம்பாரா கருணை தாரீர் நமச்சிவாயமே!
கண்ணப்பனும் கண்டுகளித்த காளத்தியப்பரே
காற்றிலே ஒளியாட ஒலிக்கும் நல்வேதமே
ஞானியர் போற்றும் அம்பிகையின் பிரசன்னமே
என் நாதனே பரமனே நமச்சிவாயமே !
- எஸ்.சந்திரசேகர்

சாகும் விவசாயிகள்...

வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும். குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்! இதில் ஒன்று குறைந்தாலும் செங்கோல் ஆட்சியாளர் உயர்வதில்லை என்கிறார் ஔவையார்.
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிவருவதால் அது பல விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியுள்ளது. என் மண்ணின் ‘சோறுடைத்த’ உழவர்கள் படும் துயர் மனதை வாட்டுகிறது. பார்வையை கண்ணீர் வந்து மறைக்கிறது. அவர்கள் இல்லாது தைப்பொங்கல் ஏது? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். இங்கு உயிரையே விட்டு விட்டார்கள் விவசாயிகள்.
பஞ்சபூதத்தை ஆளும் சர்வேசா, அருள்மாரி பொழிந்து இந்நிலையை மாற்றிடு. பயிர் நிலங்களை காவல் காக்கும் வனதேவதை, எல்லையம்மா, கருப்புசாமி தெய்வங்களே விவசாயிகளின் மனதை திடப்படுத்தி அவர்கள் உயிரைக் காத்திடுங்கள். வியர்வை சிந்தியவர்களை தண்டிக்காமல் வாழவை, இறைவா. 
"இறையாண்மை உடனே தலையிட்டு உதவ சித்தம் செய்."
Image may contain: one or more people, shorts, food and outdoor Image may contain: one or more people

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மொழியில் என்ன பேதம்?

"பிரபஞ்சத்தில் 'ஆஹத நாதம்' நம் செவிகளுக்கு கேளாமல் அண்டம் முழுதும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் வான்வெளியில் நம் காதுகளுக்கு எட்டாத ஓசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. பர வெளியில் ஞானிகளால் மட்டுமே கேட்ககூடிய இதை 'அனாஹத நாதம்' என்றும், பூமிக்கு அருகில் ஒலிக்கும் கேட்கக்கூடிய ஓசைகளை 'ஆஹத நாதம்' என்றும் பிரித்துச் சொல்கின்றனர். பஞ்சமுக விஸ்வகர்மர் இந்த அனாஹத பிரம்ம நாதத்தை உண்டாக்கி அதை தன் அகோர (தெற்கு) முகத்தில் ஞானசக்தி என உதிக்கவைத்தார், இந்த சக்தியை பிரம்மனின் நாவினில் சரஸ்வதியாக உருவம் தந்து வெளிப்படவைத்து, அவள் மூலம் ஆஹாத நாதமாய் மாற்றிவிட்டார்."
 Image may contain: 4 people

ஆக, மொழியை இகழ்ந்தால் ஈசனையே நிந்தித்த பாவம் வரும். தமிழ் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம் எல்லாம் எனக்கு ஒரே நிலைதான். தமிழில் எழுதினால் எனக்குப் பெருமையோ, ஆங்கிலத்தில் எழுதினால் சிறுமையோ, என ஒருபோதும் எனக்குத் தோன்றவில்லை. எல்லாமே கலைவாணியின் அம்சம்... சிவ ஸ்வரூபம் ஆகும். போன பதிவில் சமஸ்க்ருதம் தெரியாமலே என்னை பாடல் எழுத வைத்த  ஈசனின் செயல் இதற்கு ஒரு சான்று.
பஞ்சமுகம், பஞ்சபிரம்மம், பஞ்ச நதி, பஞ்சாட்சரம், பஞ்ச பூதம், பஞ்சலோகம், பஞ்சாம்ருதம், பஞ்சாங்கம், பஞ்ச லிங்கம், பஞ்சகோசம், பஞ்சபட்சி, பஞ்சகவ்யம், பஞ்ச நந்தி, பஞ்சகுமாரர், பஞ்சகிருத்தியம், பஞ்ச பிரதிஷ்டை, பஞ்சபாஷாணம், பஞ்சேந்த்ரியம், பஞ்ச நாதம், பஞ்சதீபம், பஞ்சரிஷி,பஞ்சவேதம்,... இப்படி எத்தனையோ பஞ்ச தத்துவங்கள் நம்மை பரவசப்படுத்தும்.
நேற்று முகநூலில் இந்த பஞ்ச தத்துவங்களைப் பற்றி சொல்லியிருந்தேன்.  "அதை தமிழ் மொழியில் விளக்கினால் சிறப்பாக இருக்கும்" என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். அவருக்காக ஒரு பாடல் புனைந்தேன். அதிலுள்ள ஈசனின் 'பஞ்ச' தத்துவங்களை கண்டுபிடித்து புரிந்து கொள்வார் என நினைக்கிறன்.
Image may contain: text

ஒவ்வொரு வரியிலும் இடம்பெறுபவை : பஞ்சமுகம், பஞ்சவேதம்; பஞ்சபிரம்மம், பஞ்சகிருத்தியம்; பஞ்சரிஷி, பஞ்சநதி; பஞ்சபாஷாணம், பஞ்சகவியம்; பஞ்சநாதம், பஞ்சாட்சரம்; பஞ்சலோகம், பஞ்சபூதம்; பஞ்சேந்திரியம், பஞ்சதீபம்.

வியாழன், 29 டிசம்பர், 2016

திங்கள், 26 டிசம்பர், 2016

வேதம் உயிர்நாதம்


எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது. ஆனால் கவிப்பாடல் புனைய எப்போதாவது வரும். எப்படின்னு யோசிக்கிறீங்க இல்ல? எனக்கும் தெரியலை. முகநூல் நண்பர் ஒருவர் திருவண்ணாமலை வேதபாடசாலா பற்றிய படத்தை நேற்று பதிவிட்டார். 

அதை பார்த்துக்கொண்டிருக்க திடீரென்று மனதில் தோன்றியதை புனைந்தேன். இதில் இலக்கண சுத்தம், சந்தம், மரபு, எல்லாம் உள்ளதா என்று எனக்கு சற்றும் தெரியாது. ஆங்கிலத்தில் டைப் செய்த ஸ்லோகத்தை அப்படியே online converter மூலம் தமிழ் மற்றும் சமஸ்க்ருத எழுத்துருவுக்கு (fonts) மாற்றினேன்.



புனைந்த பாடலின் பொருள், "வேதத்தை காப்பதுவே தலையாய கடமை. அதை அழியாமல் காத்தலே மனிதன் ஞானம்பெறும் வழி. தெய்வத்தின் அருள் வேண்டுமானால் கூட்டாக தர்மத்தை போற்றி பாதுகாக்கணும். தர்மநெறி தான் தெய்வம், தர்மத்தை காத்தால் அது நம்மை காக்கும்."
ஐந்து வேதங்களுள் பிரணவ வேதமே ஆதாரம். பஞ்ச பிரம்மத்தை சிருஷ்டித்தது விஸ்வகர்மரின் பேரருள் லீலை. சத்யோஜாதா வாமதேவம் தத்புருஷம் அகோரம் என முகங்கள்கொண்டும், ஈசான திக்கில் நிலைகொண்ட ஒரு முகமே தியானத்தில் இருக்கிறது.
இப் பிரபஞ்சத்தை சதாசிவரின் பிராணன் நாதமாக இருந்து காத்தருள்கிறது. அந்த பரபிரம்மத்தின் மனதோடு தன் வெளிப்பாடான அனைத்து ஜீவராசிகள் லயித்து ஒன்றி இருக்கிறது. திரிசூலம் ஏந்தி, நெற்றியில் திரிபுண்டர சாம்பல் தரித்து, மூவுலகையும் தன் மூன்று கண்கள் கொண்டு ஆளும் பரமனே அ, , ம சேர்ந்த ஓங்காரம்.... ஓம் நமசிவாய!

ஐதராபாத்தில் உள்ள என் அன்பு நண்பர் திரு.சந்தோஷ், இந்த சமஸ்க்ருத கவிதையை வாசித்து தன் கருத்தைத் தெரிவித்தார். இவர் என்னைவிட மெத்த கல்வி-கேள்வி ஞானம் படைத்தவர். ஆன்மிகம், சமயம், வேதம் சார்ந்த விஷயங்களை ஆழமாக அறிந்தவர். ஸ்ரீ வீரப்ரம்மம் பற்றிய ஒர் ஆங்கில நூல் எழுதியவர்.















- எஸ். சந்திரசேகர்

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இயேசு கிறிஸ்து - விஸ்வகர்ம ஆச்சாரி

கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்துப் பரப்பிய இயேசு கிறிஸ்து ஒரு விஸ்வகர்மா என அறிஞர் எம். எஸ். இராமசாமி ஐயர் பல ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.
அவர் 1936ம் ஆண்டு ஆனி மாதம் நடைபெற்ற ஆசிரியர்கள் கழக மகாநாட்டில் பின்வரும் தலைப்புக்களில் இதை வலியுறுத்தியுள்ளார்.
(1) Christ is not a Greek but an Indian.
(கிறிஸ்து கிரேக்கரல்ல, இந்தியனே!)
(2) Was Tamil the mother tourge of Jesus Christ?
(இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி தமிழா?)
(3) Was Jesus Christ a Viswakarma Brahmana?
(இயேசு கிறிஸ்து ஒரு விஸ்வ பிராமணனா?)
இந்த ஆய்வுக்கட்டுரைகளை அவர் அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ பல்கலைக்கழதிற்கு அனுப்பியுள்ளார். அவர் தனது ஆய்வுக்கு ஆதாரமாக புனித பைபிளில் இருந்து ஆதாரங்கள் காட்டியுள்ளார். இயேசு கிறிஸ்து, ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். அவரும் தந்தையுடன் சேர்ந்து தச்சுத்தொழில் செய்துள்ளார். அந்தவகை யில் அவர் ஒரு விஸ்வகர்மாவாகும். ஜீசஸ் அல்லது 'ஜெசுவா' என்பது 'கேசவா' என்பதன் மருவு ஆகும். "Isn’t this the carpenter, the son of Mary?" (Mark 6:3) என்று பைபிள் சொல்கிறது.
அவர் குலத்தால் விஸ்வகர்மாவாகும். விஸ்வகர்ம மக்களே ஆரம்பத்தில் மதங்களோடு மிகத் தொடர்புடையவர்களாக இருந்தவர்கள். இந்து, இஸ்லாம், பெளத்த மதங்களை ஆரம்பித்தவர்கட்கும், விஸ்வகர்ம மக்களுக்கும் தொடர்புண்டு. அவர்கள் படைப்புக் கடவுளான உலக முதல்வன் விஸ்வகர்மாவின் பரம்பரையினர் பிறப்பால் தெய்வ சம்பந்தமுடையவர்கள். உலக நாகரிகங்களை வித்திட்ட மக்கள் அனைவரும் கட்டிடக்கலையைத் தங்கள் தொழிலாகவும், சர்ப்ப, சூரிய வழி பாட்டைத் தங்கள் குலவழிபாடாகவும் கொண்டவர்கள். இன்று விஸ்வகர்மா ஆச்சாரி என்ற பெயர் கொள்ளாமல் வேறு மதங்களில் இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி தமிழ். அவருடைய தாய் மேரி என்பது மரியம் (மாரியம்மை) என்பதன் மருவுவாகும். அவரின் சகோதரியின் பெயர் (Tamfr) தமர். தாமரை என்ற சொல்லே தமர் என மருவியது. அதுபோல் பள்ளிஸ்தானம் என்பதே பாலஸ்தீனமாக மாறியுள்ளது. இயேசுவின் நிறம்"மெட்ராஸ் கலர்" என பைபிளில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்தியரே ஆவார், அவரின் குலத்தொழில் தச்சுவேலை . அகஸ்தியர், போகர் போன்ற மூத்த சித்தர்களிடம் அஷ்டசித்து பயின்று வெளிதேசம் போனார். 12-30 வயது வரையான 18 வருடங்கள் இங்கு சித்தர்களிடம் பயின்றார். அனேக சித்து வேலைகள் செய்து காட்டியும், சமாதியிலிருந்து உயிர்த்து எழணும் என்றால் அவர் சித்தராகத்தானே இருக்க முடியும்? இயேசுவை சித்தர் என்றால் கிறித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். போகர் பின் எதற்காக அன்னை  மரியாளின் பாதம் தொட்டு வணங்கவேண்டும்? இயேசு சமாதியில் இருப்பதை கண்டுவிட்டு ஜெருசலேம் நகரத்தை விட்டு மக்க தேசம் போகிறார். இவை போகர்-7000 நூலில் உள்ளது.


விஸ்வகர்ம மாயன் இனம் பரந்துபட்டு போனதால், காலப்போக்கில் உலகெங்கும் இந்த இனம் மாறிபோய் வேறு மதம் தழுவி, விஸ்வகர்மாவுக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் 'ஆச்சாரிகள் அப்போவே எப்படி அங்கு போயிருக்கமுடியும்?' என்ற எண்ணம் வரும். ஆனால், இதன் அடித்தளம் ஒன்றே. 
பிரபஞ்சம் தோன்றிட ஈசன் உருவாக்கிய ஐந்தொழிலான இவற்றை இன்று எல்லோருமே கல்வி-பணி நிமித்தமாய் செய்து வருகிறார்கள். இதன்படி பார்த்தால் அவர்கள் விஸ்வக்ர்மாவாக இருக்கணும் என்று அவசியமில்லை. சுமார் கிபி.52 முன்பு இந்தியாவுக்கு St.Thomas தச்சு வேலை செய்யவும் கிறிஸ்து பிரசாரம் செய்யவுமே மைலாபூருக்கு வந்து தங்கினார்.
இன்று விஸ்வகர்மா சமூகத்திலேயே, பாட்டன் காலத்தில் தச்சு வேலை செய்தவர் இன்று பட்டறை, நகை கடை வைத்தோ, ஸ்தபதியாகவோ; வேறு துறைக்கு போகவும்கூட நிறைய சாத்தியங்கள் உண்டு. வேறு கோத்ர சம்பந்தம், கலப்பு மணம், போன்று பல காரணங்கள் இருக்கு. ஆக, இந்தியாவில் இந்த சமூகத்திலேயே இத்தனை மாற்றங்கள் வந்துள்ளபோது, வெளிநாட்டிலும் வந்திருக்கும். அடித்தளம் தெரியாமல் பார்க்கும்போது, இது நமக்கு சந்தேகத்தைத் தரும். ஆய்வில் பல விஷயங்கள் வரும்!

Image may contain: 3 people, text

வெவ்வேறு சமயங்களாக இருப்பினும் கிருஷ்ணருக்கும் கிறிஸ்துவுக்கும் பல கதாபாத்திர ஒற்றுமையைக் காண்கிறேன். இருவருமே பல வர்ணங்களின் பணிகளைச் செய்தவர்கள். இரண்டு பெயர்களுக்கும் கிரேக மொழியில் 'ஈர்க்கும் அழகுள்ள நீலம்' என்ற பொருளுண்டு. இருவருமே ஆயுதத்தால் குத்தி இறந்தார்கள். இப்பதிவைப் பார்த்து வெகுண்டு எழுவோரும் உண்டு... சர்வம் பரபிரம்மம்!

ஆக, ஒருவருக்கு ஜாதி என்பது ஏற்று செய்யும் பணியால்தான் வருகிறது, பிறப்பால் அல்ல. காலப்போக்கில் அச்சந்ததியினர் அதை தொடர்ந்து செய்வதால், அது ஒரு குலமாகவும், அது செய்யும் வேலையையும் காட்டி நிலைத்து விடுகிறது. அப்படி என்றால் ஏசு என்ன குலத்தில் வருகிறார்?

வியாழன், 22 டிசம்பர், 2016

The mark of a successful businessman

Kumaraswami
Kumaraswamy, my cousin, is a successful businessman for over two decades and offering C&F services. He is the proprietor of M/s Ujwal International. With HO in Chennai, it has branches in Bangalore, Cochin, Mumbai and Kolkatta. 

As much as I have known, he is a commerce graduate with exceptional acumen. He is a good planner, market strategist, financial manager with business analytics, daring entrepreneur, pre-risk calculator, and a hard worker. Above all, he is a good employer to his staff members. In the beginning, I have at times seen him shuttling between branches spending sleepless nights and sorting out disputes at various container godowns and customs house. A globe-trotter and an achiever, he is an affectionate human who manages the roles of son, brother, husband and father. With no ego, he is very down to earth. I admire with a look of awe. I wish he adds many more colourful feathers on his cap.
Purushotham

As Lakshmana is to Rama, Purushotham @ Chandu is a quiet and unquestioning brother of Kumaraswami. Basically, into mechanical engineering, he is a great support to Kumar. My memories go back to the 80s when we all played together with our grandpa. Now they live together in a happy joint family at Yeshwanthpur with my uncles. It is my pleasure to stay at their house when we frequent Bangalore. I am always proud of his growth. May god bless them with good health, wealth and long life.

சனி, 10 டிசம்பர், 2016

மாயன் வம்சம் அளித்த அறிவுக் கொடை

மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். நம் குமரிகண்டதிற்கு முன்பே பிரம்மரிஷி விஸ்வகர்மா மாயன் இவற்றை நிறுவினார்.
மாயன் நாகரிகம் சுமார் கி.மு.2500 முன்பாக தொடங்கி கி.பி. 150 வாக்கில் உச்சத்தை அடைந்தது என்று ஆய்வாளர்கள் யூகித்து சொல்கிறார்கள். அதன்பின் அப்போது நிலவிய பன்னாட்டு குடிகளின் வருகை, எதிர்ப்பு, முறையற்ற கையாளுமை, சண்டைகள், போன்ற காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது. இன்றும் உலகின் பல பாகங்களில் இந்த வம்சத்தினர் இருக்ககூடும். பழங்குடி மக்களாகவும் இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளது.
எண்ணற்ற பல சித்தர்கள் மாயன் வம்சத்தினரே என்பது அவர்களுடை அறிவியல் பங்களிப்பு நுட்பத்தினை வைத்தே சொல்லி விடலாம். அவர்களுடை கணிதம் அசாத்தியம், பூஜ்யத்தை பயன்படுத்தி மிக நீளமான digits இலக்கங்கள் எழுதினர். தொல்காப்பியத்திலுள்ள கணக்கதிகாரம் பாடல்களை எடுத்து படித்தால் இது உங்களுக்கு விளங்கும்.
உலகில் எங்கெல்லாம் பிரமிட் போன்ற கோபுர விமானம் உள்ளதோ, அதெல்லாம் மாயன் சிற்ப சாஸ்திர மூலம். எகிப்து பிரமிட், தஞ்சை பெரியகோவில், கைலாசநாதர் கோயில் போன்ற நமக்குத் தெரிந்த தளங்களில் ஒரே மாதிரியான விமான அமைப்பைக் காணலாம். மாயன், வானசாசத்திர கணிதத்தில் உச்சம். மெக்சிகோ பிரேசில் போன்ற தென்னமெரிக்க நாடுகளில் பஞ்சாங்கம் நாள்காட்டி விசேஷங்களை 'போகர்' முறைபடுத்தினார் என்று மைக்காஸ் என்ற ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். யுகம் தோறும் இருந்துள்ளவர்கள்.
காலண்டர்கள், வானசாஸ்த்திர கணக்குகள், அறிவியல், பிரம்மாண்டமான கோவில்கள், நகைகள், சிற்பம், தச்சு, உலோக உருக்கு ஆக்கம் என்று எண்ணற்ற படைப்புகள் சிறந்து விளங்கியது. நாம் இப்போது கையாள்வதை விட இன்னும் நிறையவே அப்போது இருந்திருக்கு. திருப்பதி, ஆதிஸ்ரீரங்கம் போன்று இன்றுள்ள கோயில்கள் எல்லாமே பிரம்மரிஷி மயனால் வடிவாக்கம் பெற்றதே. ஆக, இவர்களின் ஐந்திறன் தொழில் உலகெங்கும் உள்ளது.
அப்போதே, தமிழ் சமஸ்க்ருதம் எல்லாமே கையாளப்பட்டு நடைமுறையில் இருந்தது என்று அறிகிறோம். சோழன் வெளியிட்ட நாணயத்தில் "ஸ்ரீ ராஜராஜ" in red என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

வியாழன், 8 டிசம்பர், 2016

Bon voyage! Peter

I have something special to tell about Mr.P.Peter who was my assistant in the HR/Administration/ Accounts during the years 1999-2004. It was when I worked for an IT based organisation. I have seen him as a very calm person with more ability to learn and grow. Petes fulfilled all assisting duties assigned by me. A loyal and dedicated person, he had a great respect for me.

With a BA degree, he had a keen interest in history, politics and technology. As a hardworking, hands clean and godfearing man, he was always ready to take up any challenging role in any industry. He is sure to shine well in his career. A fan of 'Cho', he never missed any issue of Thuglak. Later he worked with different companies in supply chain /logistics. We gradually lost touch in the later years. Now I fondly cherish the memories when I saw his picture after 12 years.

I understand he is taking up a new job in Dubai today. I am extremely happy to see him grow in his career.

Wishing good luck and bon voyage!



புதன், 7 டிசம்பர், 2016

Let's go for a better job


On FB, almost daily a post is uploaded with vivid narration on the former CM's final moments of life. It appears that our Sherlock Holmes of these thriller series are residents & non-residents of the country. 

Videos, photos and news clippings about all that happened right from the late night of Sep-22 have gone viral. Fearful fight on that night between the duo, calling the ambulance, meeting at the hospital room, the decision on bequeathing will, frequent and irregular medical bulletins, the announcement about death, refuting the death news, etc., have been more of an investigative case study analysis for netizens.

For the past one month, all of us were busy exchanging notes as a result of demonetization drill. In the melee, we had forgotten about the beloved CM. Yet, some ripples were heard here and there.

It is indeed a spine-chilling effect to read petrifying thriller stories on the net. For sure, the next generation would definitely not dare and aspire to become a leader of a political party in future. Career has to go a long way.

Let's look out for a better job that has an upward mobility and not fatality. Of course, employee engagement is the need of the hour.




ஐயே! அந்தப் பதவி நமக்கு வேண்டாம்.


ஒரு மர்மத் தொடர் படிப்பது போல், ஜெயலலிதாவின் இறுதி நேரங்களை விளக்கும் கட்டுரைகள் தினமும் முகநூலில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த துப்பறியும் நபர்கள் உள்ளூர்/உள்நாடு/வெளிநாடு என்று இருந்தபடி செய்தி சேகரித்து பத்வேற்றுகிறார்கள் போலிருக்கு.
செப்டம்பர் 22 இரவில் நடந்தது என்ன, வீட்டில் எதற்காக சண்டை நடந்தது, மருத்துவமனையில் அனுமதி, அங்கு அவசர கூட்டத்தில் அரங்கேறியது என்ன, அவசர உயில், தினம் ஒரு மருத்துவ அறிக்கை பற்றி அலசல், பிறகு மருத்துவ அறிக்கையும் நின்று போனது, மரணச்செய்தி அறிவிப்பில் முரண்பாடு, நல்லடக்கம், பற்றி பல கோணங்களில் பல கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன.

இப்படியெல்லாம் தன்னை ஆட்டிப்படைத்துக் கொள்ளவும், தன்னையே நிர்வாகிக்கும் அளவிற்கு தன் எதிர்கால வாழ்க்கையையே தோழியிடம் ஒப்படைத்துவிட்ட இந்த ஜெ. அம்மையாரை நினைத்தால் அனுதாபத்தைவிட எல்லோருக்கும் கோபம்தான் வரும். இப்படியும்கூட ஒரு முதல்வர் இருப்பாரா என்ன? முதன்முறை அவர் டிசம்பர் 1996ல் கைதானபோது, துக்ளக் இதழின் அட்டைப்படத்தில், "வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" என்று பாட்டு பாடிக்கொண்டே சசிகலா தன் உடன்பிறவா சகோதரி ஜெயலலிதாவை மலை உச்சிக்கு அழைத்துபோவதுபோல ஒரு கார்ட்டூன் வந்தது. அது இப்போது நினைவுக்கு வருகிறது. 'சோ' சார் மெய்யாலுமே ஒரு தீர்க்கதரிசி!
கடந்த ஒரு மாதமாக நாட்டில் ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் அமக்களத்தில் எல்லோரும் இருந்தனர். ஒரு கட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை எல்லோரும் மறந்து விட்டதுதான் உண்மை. ஆனால் சலசலப்புகள் என்னமோ இருந்து கொண்டுதான் இருந்தன.  தினம் ஒரு திகில் தொடர் அச்சமூட்டும் வகையில் வந்து கொண்டிருப்பதை படிக்கும் போது, அரசியல் தலைவர் ஆக வேண்டும் என்ற ஆசை இளம் தலைமுறைக்கு வரவே வராது. 
ஐயே! அந்தப் பதவி நமக்கு வேண்டாம். வேறு நல்ல வேலைக்குப் போகலாம். 
Image may contain: 1 person

செவ்வாய், 6 டிசம்பர், 2016

மனித உறவுகளைப் பேணுவோம் !

ஜெ. பிறந்து வளர்ந்தது பெரிய குடும்பத்தில் என்றாலும் சிறு வயது முதலே தனிமையிலே வளர்ந்து ஆளாகவேண்டிய நிர்பந்தம் இருந்துவிட்டது. தனக்கு பிடிக்காத சினிமா தொழிலில் நுழைய வேண்டிய கட்டாயம் எழுந்தது, பிறகு காலத்தின் பிடியில் அவர் பயணித்தார். அரசியல் வாழ்க்கை இவரை தன் சொந்தங்களுடன் நெருங்க விடாமல் செய்துது தான் கொடுமை. அவரே இந்தத் தனிமையை ஏற்றாரா / திணிக்கப்பட்டதா என்பது இன்றுவரை புதிர்தான்.
இப்படியும் ஒருவரால் தன் சொந்தங்களை ஒதுக்கி தனிமையில் இருக்க சாத்தியமா என்று நமக்கு எண்ணத் தோன்றும். இந்த வயதில் இப்படியொரு தனிமையா என்று பரிதாபப் படாதவர்களே இல்லை. இவருடைய வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம்.
தனக்கென ஒரு குடும்பம் எற்படுத்திகொள்ளவில்லை என்று அவர் சொன்னாலும், பெரியம்மா, சித்தி, சிற்றப்பா, அக்காள், அண்ணன், தங்கை மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் என்று தான் பிறந்த குடும்பத்து உறவினர்கள் எல்லோரும் இருந்தும், இன்று யாரும் அவர் உடல் அருகில் இல்லாமல் தனிமையிலே கிடக்கிறார். உடல் தகனம் செய்யப்படாமல் அடக்கம் ஆகிறார். அவர் தலை எழுத்தும் ஜாதகமும் அப்படி!

தன்னை மற்றவர்கள் ஆட்டிப்படைக்கவும், ஆளுமை செலுத்தி அடிமையாக நடத்தவும் அனுமதித்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்து தங்கிக்கொள்ளட்டும் என்று   பெருந்தன்மையாக ஒரு அறையை அந்த உடன்பிறவா குடும்பம் ஒதுக்கிக்கொடுத்ததே பெரிய விஷயம். இப்போது போயி அந்த குடும்பத்தவங்களை குறைகூற என்ன இருக்கு? இப்படியுமா ஒரு முதல்வர் இருப்பார்? என்றுதான் வியக்கத் தோன்றும். கூண்டுகிளியாய் இருக்கவே ஆசைபட்டார் என்றுதான் அவர் சரிதத்தில் களங்கமின்றி குறிப்பிடவேண்டும். ஆம், வேறு எப்படிச் சொல்ல? 
திரளான ரசிகர்களையும் தொண்டர்களையும் சம்பாதித்த தங்கத் தலைவி, மனித உறவுகளை பேணாமல் விட்டது பெரிய நெருடலே! நாம் வாழும் காலம் கொஞ்சமே! அதனால் குடும்ப உறவுகளை அனுசரிப்போம் மன்னிப்போம் நேசிப்போம்.
சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் டிவி பேட்டியில் எல்லா விஷயத்தையும் மனம் திறந்து பேசினார். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

'சில்பகுரு' வி.கணபதி ஸ்தபதி (1927 - 2011)


இவரைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க பிரகதீஸவரர் கோயில் வடிவமைத்த குஞ்சரமல்லன் @ ராஜராஜ பெருந்தச்சனின் வம்சத்தில் வந்த மிகப்பெரிய சிற்பசாஸ்திர ஸ்தபதி. என் பார்வையில் இவர் ஒரு மகா ஜீனியஸ், விஸ்வகர்மா ஆசிபெற்ற ஒரு அருளாளர் என்றால் தகும். கணபதி ஐயாவின் மூதாதையரைப் பற்றி கோவில் கல்வெட்டில், "தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்" என்று கூறுகிறது.
கணித பட்டதாரியான இவர், 27 வருடங்கள் மாமல்லபுர அரசு சிற்பக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். இவருடைய கைவண்ணத்தில் இந்தியா மற்றும் மேல் நாடுகளில் பல கோவில்களை வடித்துள்ளார். குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும் இவர் வடித்ததே. இவர் பிரம்மரிஷி மயன் அருளிய 'ஐந்திறம்' நூலை வெளி உலகிற்கு தொகுத்துக் கொடுத்தவர்.பிரணவ வேதத்தைத் தொகுத்து அச்சிட சிரத்தை எடுத்தார். இவர் சொந்தமாக 'வாஸ்த்து வேதிக் டிரஸ்ட்' ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஆலோசனைக தந்தும், ஆய்வு நூல்களும் வெளியிட்டு வந்தார். ஜனாதிபதியிடம் பத்மபூஷன் & தலைச்சிறந்த 'சில்பகுரு' என்ற பட்டத்தையும் பெற்றார்.
ஐந்தாம் வேதமான பிரணவ வேதத்தைத்தான் இவர் 'வாஸ்து வேதம்' என்கிறார். அவர் எழுதிய எண்ணற்ற நூல்களில், ஆயாதி கணனம் Ayadi Calculation, ஸ்தபதிய வேதம், சங்ககால தமிழர் வேதம், Temple of Space Science, திராவிட கட்டிடவியல், வள்ளுவர் கோட்டம், குமரிக்கண்டத்தில் மயன், வாஸ்து பிரம்ம சூத்ரம் போன்ற இன்னும் பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். இவருடை மேல்நாட்டு மாணவியரான திருமதிகள். ஒல்கா, ஜெர்சி மெர்கே போன்றோர் இவர் பெயரை உலகளவில் பறைசாற்றி வருகின்றனர்.
அடுத்த மாதம் வெளிவரும் என்னுடைய நூலில், ஐயா அவர்களின் மேற்பார்வையில் அவர் மாணவி Ms.ஜெர்சி மெர்கே எழுதிய 'பிரபஞ்ச தோற்றமும் வாஸ்து விஞ்ஞானமும்' என்ற ஆங்கில கட்டுரையை மேற்கோள் காட்டி சில பகுதிகளை நான் கையாண்டுள்ளேன்.


இராஜராஜன் வளர்த்த விஸ்வகர்மா தொழில்கள்

தஞ்சை பெரிய கோவில் (எ) இராஜ ராஜேசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜாராஜன். இவர் அரியணை அமர்ந்தது கி.பி.985. இவருடைய 29 ஆண்டுக்கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். கி.பி1014 ல் இவர் ஆட்சி முடிந்தது.
இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட, பொன்வேலை, இரும்பு உருக்கு அணுகு முறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு ஆட்சியில்தான் என்பது குறிப்பிடவேண்டும். அங்கு ஒரு இடத்தில் பொன் வேலை நடந்ததாலோ / பொன், தானியங்கள் கிடைக்கும் களஞ்சியம் என்பதாலோ அது 'கஞ்சம்' / 'கஞ்சமலை' Ganjam என்றும் அழைக்கப்பட்டது. மொத்தம் 52 கோவில்கள் கட்டப்பட்டன். 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23. தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டிகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணி கலன்கள் பூண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அக்க்லாலத்தில் நடைமுறையில் இருந்தவை.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட சிலநகைகளின் பெயர்கள் :-- ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]காறை [கழுத்து அணி ], கச்சோலம் [ இடை அணி], கலாவம் [இடை அணி], காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி], மோதிரம் [இரத்தினம் முத்து ], முத்து மாத்திரை [காது அணி], பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ] பதக்கம். என்கிறது. அதுபோக என்னென்ன நககைகள் எவ்வளவு எடையும், என்னவகை ரத்தினங்களும் இருக்கவேண்டும் என்றும் ஆணை பிரப்பிர்த்தாக கல்வெட்டுகள் சொல்கிறது.
தண்டவாணி (காலணி-சிலம்பு போல), காந்திகை ( கழுத்து அணி), மிஞ்சு (மெட்டி), கொப்பு ( காதணி),மகுடம், குதம்பை ( காதணி), பட்டம் (மகுடம்), பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்), சப்தசரி ( ஏழு சங்கிலிகள்), சிடுக்கு, சூடகம் (வளையல்), பாத சாயலம் ( கால் அணி), சூரி சுட்டி (நெற்றியில் அணிவது), வீரப்பட்டம் (தலையில் அணிவது), வாளி (காதணி), காறை கம்பி (காதணி), திருகு, மகரம் (காதணி), உருட்டு திரிசரம் ( கழுத்து அணி), தூக்கம் (காதணி), நயனம் கண்மூடி பொற்பூ, பொட்டு. பாசமாலை தோள் வளைதாலி, தாலி மணிவடம், தாழ்வடம், கடுதிரள் மணி, வடம்வளையல், வடுகவாளி, வடம்தோடு, திருவடிக்காறைகால், வடம்கால் மோதிரம், சன்ன வடம், திருகுகால், காறை மாலை என்று என்னென்னமோ இருந்துள்ளது. 
இதில் நாம் பெரும்வாரியான பெயர்களை கேள்விபட்டதுகூட இல்லை. (Antique jewellery) புராதான நகைகள் செய்யும் ஆச்சாரிகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மூச்சுகாற்றில் சுழலும் மூக்குத்திகள் அன்றே செய்தனர் என்றும் தெரிகிறது. இதில் பல நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது. ஆனால் சோழர் கால சிற்பங்களில் இவை எல்லாம் வடிக்கபட்டிருக்கும். அவற்றை நாம் பார்த்தால்தான் விளங்கும்.
அணிகலன்களை அணிவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும், மருத்துவ ரீதியிலும், மனக் கட்டுப்பாடு ஏற்படுவதற்கும், உணர்சிகளை மட்டுபடுத்தவும் தக்கபடி வடிவமைக்கப்பட்டது என்று அறிகிறோம். பிரம்மிப்புதான் போங்க! 

 பின் குறிப்பு :- தஞ்சை பெரியகோயில் கட்டிய 'குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன்' ஸ்தபதியின் வழிவந்த குலத்தோன்றல்தான் காலஞ்சென்ற 'சில்பகுரு' டாக்டர் வி.கணபதி ஸ்தபதி என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.   

வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க பாரதம்!


பண மதிப்பு ரத்தை அடுத்து தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம். இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால், விவசாய வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது:- மத்திய அரசு அறிவிப்பு.
இதெல்லாம் பழைய சட்டம்தான், திருத்தமில்லை என்கிறது மத்திய அரசு. இதை அமலாக்கம் செய்யவும், பணம் முடங்குவதை தடுக்க வருமானவரித்துறை புதுசா என்ன கபளீகரம் செய்யப்போகுதோ? வெள்ளி பஸ்பம், தங்கபஸ்பம் வித்தவங்களை /தின்னவங்களை பற்றி ஏதும் சொல்லலை.
அடுத்து உடனே வரவுள்ள அதிரடிகள் என்ன? நிலம் உச்சவரம்பு, பினாமி சொத்துகள், வீட்டு வாடகை உச்சவரம்பு சட்டம், போன்றவைகளில் கடுமையான அமலாக்க திருத்தங்கள் வரவுள்ளனவாம். வந்தாதான் சரி! வீட்டு ஓனர் தன் குடும்பம் நடத்த ஆகும் ஒரு மாத செலவை வாடகையா இல்ல இப்போல்லாம் வசூல் பண்றாங்க. 
பொற்கொல்லர்களிடம் தங்கம் கையிருப்பு, யார் யாருக்கு எத்தனை பவுன் செய்துகொடுத்தனர், PAN அத்தாட்சி நகல் பெற்றுக்கொண்டு நகை செய்து கொடுத்தார்களா என்று விபரம் கேட்டு இம்சிக்காதவரை சரி. வருமானத்திற்கு சம்பந்தமில்லாமல் இனி தங்கத்தை அதிகமாய் முடக்கிக்கொள்ள முடியாது. அப்படி தேவைபட்டால் அதிகப்படியான தங்கத்திற்கு வரி கட்டிகொள்ள வேண்டியதுதான். ஆனால் கல்யாண சீர், பூர்விக குடும்ப நகைகள், சேமிப்பில் வாங்கிய நகைகள் எல்லாம் இந்த இக்கணக்கில் வராது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தங்கம் விலை வீழ்ந்து கட்டுக்குள் வர, கோடிக்கணக்கான கீழ் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க ஏதுவாக இருக்கும். இது 3 மாதம் கழித்துதான் பலன் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பே gold bond scheme வந்தது இதன் முன்னோடி. ஒரு குடும்பத்தில் எவ்வளவு தங்கம் இருக்கலாம் என கிட்டத்தட்ட ரேஷன் முறை வருகிறது. அனைவரும் இதனால் பயன்பெறுவர். இனிதான் பொற்கொல்லர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு... படு பிஸிதான்.

இன்றைக்கு ஜனத்தொகை 125 கோடி என்பதில் குறைந்தது 90% நடுத்தரம், 5% கீழ்தட்டு, 5% மேல்தட்டு. ஆக மொத்தத்தில் ஒரு 25% சிறார்+பணக்கார்கள் என்று நீக்கிவிட்டு பார்த்தாலும், என்ஜியது 75%. ஆக, விலை வீழ்ச்சி ஆனால், சுமார் 90 கோடி பேர் ஓராண்டில் தலைக்கு குறைந்த பட்சம் 5 கிராம் வாங்கினாலே, நினைத்து பார்க்க முடியாத அளவில் பொற்கொல்லர் தொழில் வாய்ப்பு கணிசமாகும். அந்த இறைவன் அருள் புரிவார்.