தன் அண்டை நாடுகளின் எல்லைக்குள் அத்துமீறி நிலம் ஆக்கிரமிக்கும் சீனாவின் தாகம் தணிவதாகத் தெரியவில்லை. இந்தியா மங்கோலியா பூட்டான் என பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் நீண்டபடி போகிறது. கல்வெட்டு மற்றும் தொல்லியல் சரித்திர ஆய்வுகள்படி சீனாவின் கடலோர Fujian மாவட்டத்தின் Quanzhou பட்டணம் நமக்குத்தான் சொந்தம். எப்படி?
கிபி.6 மற்றும் 10, 12 ஆம் நூற்றாண்டுகளில் அங்குப்போய் நிரந்தரமாகக் குடியேறிய நம் வர்த்தகர்கள் அங்கே பிரம்மாண்டமான கோயில்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கைவினைச் சாலைகளை நிறுவியதாகத் தெரிகிறது. பின்னாளில் Song மற்றும் Yuan dynasty ஆளும்போது இவை எல்லாம் உரிமை சாசனத்துடன் நடந்துள்ளன.
முதலில் பல்லவனின் காலத்தில் நம் காஞ்சியின் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ளதுபோன்ற நரசிம்மர் சிலையை வடித்து அங்கே பிரதிஷ்டை செய்தனர். அதுபோக மிகப்பெரிய ஜம்புலிங்க சிவ ஆலயமாம் திருக்கதலீஸ்வரம் Kaiyuan ல் உள்ளது. அங்கே மாரியம்மனுக்குத் திருவிழாவும் எடுத்துள்ளனர். குடமுழுக்கு நடந்து அக்கோயிலுக்கு மானியமும் நிலங்களும் குப்லாய்கான் காலத்தில் தரப்பட்டன. பின்னாளில் சோழர் காலம் முடிவுக்கு வரும்வரை அவ்வூருடன் வர்த்தகம் நடந்துள்ளதும் தெரிகிறது.
பல்லவர்கள் காஞ்சியிலிருந்து வேகவதி ஆற்றின் வழியே பயணித்து மாமல்லபுரம் துறைமுகத்தை அடைந்து அங்கிருந்து சீனாவின் குவான்சு பட்டணத்தை அடைந்தனர். இப்படித்தான் அன்றைக்குப் பட்டு மற்றும் வாசனாதி பொருட்கள் நம் நகரேஷு காஞ்சியை வந்தடைந்தது. பல்லவர் ஆட்சியில் சமஸ்கிருதமும் தமிழும் நிலவியதால் சீனாவிலும் அம்மொழிகளில் கல்வெட்டுகள் உள்ளன. 2013 ஆம் ஆண்டு தி இந்து நாளேட்டில் சீனாவில் ஹிந்துக் கோயில்கள் பற்றி என் கருத்துகளை எழுதியிருந்தேன்.
ஆகவே, நியாயப்படி அவ்விடம் நமக்கு உரிமையானது என தொல்லியல் ஆதாரங்களைக்காட்டி நம் பங்கிற்கு FB/Twitter தளங்களில் பதிவுகள் போட்டு ரகளை செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக