கவசம், காப்பு, ரட்சை என்றால் என்னவென்றே அடிப்படையில் அறியாத ஒரு கூட்டம் தமிழில் கொச்சையாய் கலாய்க்கிறது. பக்தன் தன் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டு அந்த ஒவ்வொன்றையும் நோயணுகாமல் காக்கக் கோருகிறான். எந்த ஒரு பூசை செய்யும் முன் தன் தேகத்தின் ஆறாதார சக்கர உறுப்புகளை விரலால் தொட்டு மந்திரம் சொல்லி அங்க வந்தனம் செய்து கொள்கிறான்.
இவ்வுடல் என்னும் ஆலயத்தில் இறைவன் குடியிருக்க அவனே கவசமாக இருந்து காக்க வேண்டும் என்பதே பொருள். கோயிலில் விக்ரகத்திற்குத் தீபாராதனை காண்பிக்கும் போது பாதம், நாபி, இதயம், முகம், நெற்றி வரை சக்கரங்கள் தோறும் படிப்படியாய் மூன்று முறை சுற்றிக் காட்டுவார்கள். எதற்கு? நம் நன்மைக்காக!
ஆனால் இது எதுவும் புரியாத முற்போக்கு மூடர்கள் பிரச்சனை செய்வதற்காகவே நம் கவச தோத்திரத்தையும் பூசை முறைகளையும் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் அவமதித்தால் அவனை மன்னித்தருள்வதா? இது போன்றவர்களை IPC Section 295A கீழ் இதுவரை துணிந்து தண்டிக்காதது ஏன்?
வடமொழி/ வேதம்/ வேதியர் எதிர்ப்பு என்று ஆரம்பித்துப் படிப்படியாய் முன்னேறி கடவுள் சிலைக்குச் செருப்பு மாலை போட்டு, தமிழ் மொழியையே தங்களுக்குக் கேடயமாக்கி அவதூறு பிரச்சாரம் செய்யும் அளவுக்குத் துணிவூட்டி ஊக்கப்படுத்தியது யார்? தமிழ் நேசர்கள்தான்! தேவர் பெருமானார் இருந்திருந்தால் சவுக்கடி தந்திருப்பார். அவர் சித்த லட்சணங்கள் பொருந்தியவர் என்று என் தாத்தா சொல்லக் கேட்டுள்ளேன்.
ஆதிசங்கரர், பாலதேவராயர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் முதலான மகான்கள் இயற்றிப் பாடிய சக்திவாய்ந்த தேவி/ முருகன் கவச தோத்திர மாலைகளை இகழ விதியில்லை. உடல் முழுவதற்குமாக ஒரு வேல் காக்க என்று சொன்னால் போதாதா? சிலைக்கு ஒரு தீபம் போதாதா? என தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத சங்கதியைக் கீழ்த்தரமாக விமர்சிப்பது போக்கிரிதனம்! எல்லா நோய்களுக்கும் ஒரு பொது மருத்துவர் போதாதா? எதற்காக அங்கங்களுக்கான சிறப்பு மருத்துவர்? என்று ஏனோ கேட்கவில்லை.
அவனும் அவனை ஒழுக்கத்துடன் பேணி வளர்க்காத அவன் பெற்றோரும் ஏழேழு பிறவிக்கும் சாபம் ஏற்பார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக