தடிபள்ளி ஶ்ரீ ராகவநாராயண சாஸ்திரி (1896-1990) போன நூற்றாண்டில் வாழ்ந்த வேத விற்பன்னர். இவர் பாலாதிரிபுர சுந்தரியின் உபாசகர். சிறுவயது முதலே வாலைத் தெய்வ வழிபாட்டில் ஈர்க்கப்பட்டு, அதன்பின் அவள் அருளால் எல்லா ஞானத்தையும் பெற்றார். காஞ்சி மஹாபெரியவர் இவரை ஓதாமல் உணர்ந்த ஞானி என்று சொல்வாராம்.
ஒரு நவராத்திரி சமயத்தில் இவர் வீட்டில் சக்தி பூஜை நடந்தது. அப்போது வீட்டில் இருந்த பெண்களுக்கு வளையல்கள் தரவேண்டி வளையல்காரர் தருவிக்கப்பட்டார். தலைக்கு ஒரு டஜன் என அவர் ரூ.12 பெற்றுக்கொண்டு 72 வளையல்கள் தந்தார். 'மொத்தமே ஐந்து பெண்கள்தான் இருக்கிறோம்… நீ ஆறு பேருக்குக் கணக்கு சொல்றியே' என்று சாஸ்திரியின் மனைவி தேவம்மா கேட்டுள்ளார். 'ஆமாம்மா… அஞ்சு வயசு பாப்பாவுக்கும் தந்தேன். நீங்க அவளை மறந்துடீங்களே! வளையல் போட்டுட்டு அந்த குழந்தை உள்ளே ஓடிப்போயிடுச்சு' என்றார். நமக்குத் தெரிந்து எந்த குழந்தையும் பூஜைக்கு வரலையே என்ற குழப்பத்தில் வளையல்காரருக்கப் பணம் தந்து அனுப்பினர்.
சாஸ்திரி வந்து பூஜையில் அமர்ந்தபோது தான் அதை கவனித்தார். வாலை விக்ரகத்தின் கீழே ஐந்து வயது சிறுமியின் கை அளவுக்கு வளையல்கள் இருந்தன. வந்தது அவள்தான் எனபதைப் புரிந்து கொண்டார். அன்று நவராத்திரி சுமங்கலிப் பூஜையைப் படம்பிடிக்க புகைப்படக்காரர் வாசல் பக்கம் வந்து துளசி மாடத்தைப் படம் பிடித்தார். அப்போது அங்கே படத்தில் யாரும் இருக்கவில்லை. பிற்பாடு படச்சுருளைக் கழுவி பிரின்ட் போட்டதில் தான் எடுத்த பிரேம்மில் சிவப்பு/பச்சைப் பட்டணிந்த ஒரு சிறுமி கதவருகே நின்றுள்ளது தெரிந்தது. அவள் யாரென அவ்வீட்டாருக்கோ பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ தெரியவில்லை... வளையல் அணிந்து கதவருகே நிற்பதுதான் பாலா திரிபுர சுந்தரி! அவளுடைய வளையல்களே பூஜையில் இருந்தன. அவர் காலத்திலேயே தெனாலியில் கோயில் கட்டினார். ஓம் சக்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக