முகநூலில் எதையோ அடித்துத் தேடும்போது என்னுடைய பழைய மற்றும் அண்மைப் பதிவுகள் ஏதேதோ குழுக்களில் பகிரப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அங்கே வெவ்வேறு பதிவுகளுக்கு அவ்வுறுப்பினர்கள் போட்டிருந்த கமெண்ட்ஸ் மிகுந்த சுவாரசியமாக, கிண்டலாக, நகைப்புமிக்கதாய் இருந்தன. இதோ சில சாம்பிள்கள்.
1. சித்தர்கள் எல்லோருமே வேதம்/ வடமொழிக்கு எதிரானவர்கள். அப்படி இருக்க அவர்களுடைய பாடல்களில் பீஜ மந்திரங்கள், ஓமத்தீ வளர்ப்பது, வேதங்களின் பெருமையை உரைப்பது பற்றி இருப்பது எல்லாமே கட்டுக்கதை. அகத்தியருக்கே சமஸ்கிருதம் தெரியாது. தமிழ்தான்! அப்படி இருக்க சித்தர்களை சங்கியாகச் சித்தரித்து நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.
2. வியாசர் என்பவர் சிவனின் அவதாரமா? விஷ்ணுதான் வியாசராக வருகிறார் என்று எங்கள் வைணவ இலக்கியம் சொல்கிறது. ஒவ்வொரு மகா யுகத்திலும் வியாசங்களை மாற்றித் தொகுத்துச் செப்பனிடுவது சிவன் என்பது பொய்.
3. இஸ்லாம் மதம் வந்தே சுமார் ஐநூறு வருடங்கள்தான் ஆகிறது!? அப்படி இருக்க போகர் எப்படி மெக்கா போனார், மேரியைப் பார்ப்பார்? யாரை ஏமாற்ற இப்படியான பதிவு? அவருக்கும் நபிக்கும் என்ன சம்பந்தம்?
4. மாயன் கதையே பொய். விஸ்வகர்மா என்ற இனமே இல்லை. நம் நாட்டில் கட்டுக்கதையாக அதைத் திரித்து விட்டவன் யூதன்.
5. தேவாரம் தந்த நால்வர் எல்லோருமே அந்தணர்கள். அவர்கள் எப்படி உண்மை பேசி இருப்பார்கள்?
6. திருக்குறள் ஒன்றுதான் வேதம். அதைத்தவிர நான்கு வேதங்கள் இருந்தது எல்லாமே ஆரியக் கதை.
7. தஞ்சை குடமுழுக்கில் பொதுவான தேவாரப் பாடல்கள் பாடினால் போதாதா? சமஸ்கிருத மந்திரம் எதற்கு? அப்போ தமிழுக்கு வீரியம் இல்லையா? வேள்வி /பீஜ மந்திரங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் என்ன?
8. சிவன் வேறு முருகன் வேறு. முருகனுக்கும் வேத மந்திரங்களுக்கும் தொடர்பு இல்லை. ஆர்எஸ்எஸ் போட்ட பதிவுபோல் உள்ளது.
9. கயிலாயம்/மேரு என்பதே கற்பனை. அது நம் தலையில் உள்ளது. அதெப்படி சித்தர்கள் எல்லோரும் வடக்கே போய் வணங்குவார்கள்?
இன்னும் தேடினால் பல ருசிகர விமர்சனங்கள் இருக்கும். ஆனால் மேம்போக்காக கண்ணில் பட்டதைப் படித்துக்கொண்டு போனேன். அகத்தியர்/ திருமூலரே வந்து சத்தியப் பிரமாணம் செய்தாலும், நபியே வந்து குல்லா போட்டுத் தாண்டினாலும், மேரி/இயேசு வந்து சாதித்தாலும், நம் சுப்ரதீப மக்களுக்கு இவை விளங்கப் போவதில்லை. தங்களுக்கென ஒரு கொள்கை வட்டம் அமைத்துக்கொண்டு வேறெதுவும் ஆய்ந்து அறிந்திடாமல் இருக்கும் போக்கே வெளிப்பட்டது. அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!
போகர் உரைத்த தத்துவப்படி ‘கோப்பை நிரம்பிவிட்டது இனி அதில் ஊற்ற முடியாது என்று நினைப்பது அறிவீனம். படித்தவற்றை அழித்துவிட்டு மீண்டும் புதிதாக ஏற்றிக்கோள்” என்பதே நிதர்சனம். Learn and unlearn!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக