தியானத்திலிருந்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் கண் திறந்து, “விருபாக்ஷா! ஜெர்மானியர் ஒருவர் என்னை சந்திக்கக் காத்துக்கொண்டிருக்கிறார். தொலைவிலிருந்து இவ்விடத்திற்குப் பிரயாசைப்பட்டு அவர் வந்து சேர்ந்தது ஆச்சரியம்தான்! போய் அவரை அழைத்துவா” என்றார்.
விருபாக்ஷர் தன்னுள் ஸ்ரீபாதர் மற்றும் நந்தீசரின் அம்சங்களைப் பெற்றிருந்தார். ஸ்ரீபாதருக்கு முன்பாகப் பரங்கி தேசத்தவர் விழுந்து வணங்கினார். உடனே ஸ்ரீபாதர், “ஜான்!” என்று அழைத்து அவருடைய புருவ மத்தியில் தன் விரலை வைத்தார். எல்லோரையும் அண்ணாந்து வானைப் பார்க்கும்படி சொன்னார். அங்கே சித்ரகுப்தரின் 170141183460469231731687303715884105727 என்ற ஞான எண் நீளமாகத் தவழ்ந்து போய்க்கொண்டிருந்தது. “இந்த எண் வருங்காலத்தில் புகழ்பெறும். மானிடர்களின் கணிதவியல் புத்திக்குத் தக்கபடி இதன் சூட்சுமம் விளங்கிக்கொள்ளப்படும்” என்றார்.
மேலே ஸ்ரீபாதர் வெளிப்படுத்திய அந்த ஞான எண் என்பது பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாரின் மெர்சென் என்ற கணிதவியலாளர் அதே இலக்க வரிசையில் ‘பகாத எண்கள்’ என்று வரையறை செய்தார். அதுதான் Mersenne Prime Number என்ற அழைக்கப்பட்டது. இது என்ன எண்? வேறெந்த எண்ணாலும் வகுபட முடியாத எண்ணாக இருக்கவேண்டும். அதாவது இரண்டின் அடுக்குப்படியாக வருவது பகாத தனி எண்ணாக இருக்கும். Mn=2n-1 என்ற சூத்திரத்தால் இதைக் கண்டறியலாம். அப்படி கணக்கிட்டுப் பார்த்தால் இன்றைய தேதியில் ஸ்ரீபாதர் வெளிப்படுத்தியதே நீளமான மெர்சென் பகாத தனி எண்ணாகும். கடந்த 25 ஆண்டுகளாக இதில் மேற்கொண்டு ஆய்வுகள் மேல்நாட்டில் நடந்துள்ளதை அறிந்துகொண்டேன். இன்னும் ஆழமாகப் போனால் நமக்குப் புரிதல் கடினம் என்பதால் இதை இப்படியே விட்டுவிடுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக