About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 1 ஜூலை, 2020

கல்வி என்பது தவம்!

கல்வி ஒருவருக்கு வாய்க்குமா? எந்த வயதில்  எந்த நிலைவரை வாய்க்கும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. எல்லோரும் சர்வசாதாரணமாக 10/ +2/ பட்டயம்/ இளங்கலை/ முதுகலைப் பட்டம் வரை சிரமமின்றிப் படித்துத் தேர்ச்சியடைவது என்பது அவரவர்க்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு நிலைவரை கல்வி கற்றாலும் அது வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருமா? அல்லது கல்விக்குத் தொடர்பில்லாத தொழில் வாய்க்குமா என்பதும் மர்மமே!  

பலர் ஏதோவொரு காரணத்தால் பள்ளி இறுதித் தேர்வைக்கூட முடிக்க முடியாமல் அப்படியே காலங்கள் ஓடிப்போனதைப் பார்க்கிறோம். காசு கொடுத்துக் கல்வியை வாங்கினாலும் அது பெயரளவில் பயன்படுமா பயன்படாதா என்பதும் கேள்விக்குறிதான். அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு என்று இருந்த காலம்போய் இன்று ஓரளவுக்குப் படித்து முன்னுக்கு வந்து தற்சார்பாக நிற்க முடிந்துள்ளது. கள்ளிப்பால் குடித்தும் நெல்லை விழுங்கியும் எப்படியோ தெய்வாதீனமாகப் பிழைத்துச் சாதனைப் படைப்போருமுண்டு.  

சரியாக ஐந்து வருடங்களுக்குமுன் கர்நாடகாவிலுள்ள ஒரு ஆசிரியை தன்னுடைய முனைவர் ஆய்வுப் படிப்பு சம்பந்தமாக இணையத்தில் ஆதாரங்கள் கிடைக்குமா எனத் தேடியுள்ளார். ஒரு மாதமாகியும் இன்னும் ஆரம்பக்கட்ட செயலில்கூட இறங்காமல்  இருக்கிறீர்களே என்று அவருடைய வழிகாட்டி Guide கேட்டுள்ளார். மன வேதனையுடன் அவர் அன்று ஒரு கோயிலுக்குச் சென்று தன் ஆய்வுக்கான ஆதாரக் களஞ்சியம் கிடைக்க வேண்டிக்கொண்டுள்ளார். அங்கு வயதான ஒரு பெரியவர் ‘இன்று போய் தேடிப்பார். உனக்குக் கண்ணில்படும்’ என்று கன்னடத்தில் சொல்லி ஆசிர்வதித்துள்ளார்.  அன்று அவர் தீவிரமாக இணையத்தில் எதையோ தேடப்போய் என்னுடைய ஆங்கிலக் கட்டுரைகள் மற்றும் வம்சாவெளியியல் பற்றிய தகவல்கள் முதல் தேடலிலேயே கிடைத்துள்ளது. அது தொடர்பாக என்னையும் இன்னும் சில மூத்தவர்களையும் பேட்டி எடுத்து ஆவணங்கள் திரட்டி Framework methodology உருவாக்கினார். நடுநடுவே ஆய்வு தொடர்பாக பல்வேறு மாடல்கள் அடிப்படையில் எங்களிடம் followup செய்து தகவல்களை பதிவுசெய்தார்.

இந்த ஐந்து ஆண்டுகளில் தனக்கு அளிக்கப்பட்ட guide மாறியாகிவிட்டது. அதன் பிற்பாடு வேறொருவரை நியமிக்க தன் ஆய்வு தொடர்ந்தது.  தான் இதுவரை செய்ததை அப் புதியவர் படித்துப் பார்த்து அங்கீகரித்து மேற்கொண்டு வழிகாட்ட மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.  நேற்று முன்தினம் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு ‘ஜூலை 2, வியாழக் கிழமை காலை 11 மணிக்கு என் ஆய்வுத் தேர்வுக்கான இறுதி viva-voice நடக்கவுள்ளது. பல்கலைக்கழக External Examiner, Guide, SME, மற்றும் PhD துறையின் அங்கத்தினர்கள் முன்னிலையில் என்னுடைய Research work ஐ விளக்கி, அவர்களுடைய கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். அதனால் நீங்கள் என் Special Invitee யாக ஆன்லைனில் வந்திருந்து கலந்துகொள்ள வேண்டும் என்றார். என்னுடைய ஆய்வை உங்களுடைய கட்டுரைகளுடன் தொடங்கினேன். இறுதிச் சுற்றில் நீங்களும் இருக்க ஆசைப்படுகிறேன் என்றார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்!

குறித்த நேரத்திற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஆஜராகி விட்டேன்.  நான் அறிமுகம் செய்துவைக்கப் பட்டேன். வணக்கங்கள் பரிமாறிக் கொண்டபின் மொழித்துறைத் தலைவர் Now Ms.Srimathi, Ph.D. Scholar in English will defend her Ph.D. thesis titled 'An enquiry into the language proficiency of the migrated community down the geneology' என்று அறிவிக்க, அவர் தன்னுடைய presentation தந்தார். அது முடிந்ததும் ஒவ்வொருவரும் கேள்விகளையும் ஒப்பீடுகளையும் கேட்டுக் குடைந்தனர். இறுதியாக என்னைப் பேசச்சொல்லி சில கருத்துகளைக் கேட்டறிந்தனர். அத்தனை நேரம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தாவனகரே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தன் மதிப்பீட்டைத் தேர்வுக்குழுத் தலைவருக்குத் தெரிவிக்க, ‘We hereby announce that the Ph.D. Scholar has successfully defended her thesis work. The committee has approved to confer the degree on her’ என்று அறிவித்தார்.  பிற்பாடு அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தேன். சிவ சித்தம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக