மஹாகவி என்றாலே நம் நினைவுக்கு வருவது காளிதாசன். காஷ்மீரத்தில் பிறந்து வளர்ந்து பிற்பாடு விதியின் போக்கில் கலிங்கம் வந்து சேர்ந்தான். உஜ்ஜைன் நகரத்தில் காளிதேவி பிரத்தியட்சமாகி களிதாசனுக்குப் புலமையை பூரணமாக அருளினாள். கிமு.3 காலகட்டத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யன் அவையில் மஹாகவியாக உலா வந்து ரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், அபிக்ஞானசகுந்தலம் போன்ற தலைச்சிறந்த சம்ஸ்கிருத இலக்கியங்களைப் படைத்தான்.
சுமார் கிமு.2 ஆம் நூற்றாண்டில் காளிதாசன் கச்சி மாநகரதிற்கு விஜயம் செய்தபின் இலங்கைக்கும பயணப்பட்டதாக ஆய்வுக் கட்டுரைகளில் அறியப்படுகிறது. கச்சி (எ) காஞ்சியின் விஸ்தீரணமும், புலமைமிகு சர்வ கலாசாலையும், எங்கு காணினும் சைவம்/சாக்தம்/ வைணவம் உயிர்ப்புடன் இருந்ததையும் கண்டான். இங்கே காமாட்சியையும் வழிபட்டு, தான் தமிழிலும் கவிபாடும் வல்லமையைப் பெற வேண்டும் என்று அம்மனை வேண்டினான். தன்னுடைய இலக்கியத்தில் ‘புஷ்பேஷு ஜாதி, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி, நதீஷு கங்கா, புருஷேஷு விஷ்ணு’ என்று உயர்வான உவமைகளை வர்ணித்துள்ளான். அதாவது; பூக்களில் உயர்வான தெய்வீக வாசத்தைக் கொண்டது ஜாதிமல்லி, பெண்களில் உயர்வானவள் ரம்பை, நகரங்களில் உயர்வானது காஞ்சி, நதிகளில் புனிதமானது கங்கை, ஆண்களில் அழகானவன் விஷ்ணு என்றான். சக்தி தலமாம் காஞ்சிமீது காளிதாசனுக்குத் தீராத காதல் உண்டாகியது.
கிபி.4ல் காஞ்சி நகரில் பிறவி ஊமையாக ஓர் ஆண்குழந்தை பிறந்தது. மூக்கன் தினமும் காஞ்சி காமாட்சி சன்னதியில் ஏங்கி வேண்டும்போது ஒருநாள் அம்மனின் உதடுகள் அசைத்துப் பாடுவதைக் கண்டான். அம்மனின் அருளால் உடனே வாய்திறந்து கவிபாடும் வல்லமையைப் பெற்றான். அன்றிலிருந்து மூக்ககவி என்று அழைக்கபட்டான். அம்மனின் முன்னிலையில் நூறு பாடல்கள் வீதம் ஐந்து பிரிவுகளாக மொத்தம் 500 பாடல்களைப் பாடினான். அதுவே பின்னர் ‘மூக்க பஞ்சாசதி’ என்று பெயர் பெற்றது. அதில் முதல் பிரிவுதான் ஆர்ய சதகம்.
காளிதாசனின் ஷியாமளா தண்டகமும், மூக்க கவியின் ஆர்ய சதகமும் வர்ணனைகளில் ஒற்றுமையைக் காட்டின. இந்த மூக்க-கவி பின்னாளில் ஸ்ரீ மூக்கசங்கரா என்ற பெயருடன் காஞ்சி அத்வைத மடத்தின் பீடாதிபதியாக விளங்கினார் என்கிறது சரித்திரம். உஜ்ஜைனி காளியும், காஞ்சி காமாட்சியும் ஒருவனை இரண்டு பிறவிகளில் கவிபாடும் சக்திதாசனாகப் படைத்தது அந்த ஆன்மாவுக்குக் கிட்டிய பேறு. ஓர் ஆன்மாவுக்குப் பல மனிதப் பிறப்புகள் கிட்டினாலும் அது வடமொழியும் தமிழும் கற்றுத் துதித்தாலே அந்தச் சுற்று நிறைவடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக