இலந்தை, கொடுக்காய்புளி, அரைநெல்லி, நாவல்பழம், களாக்காய், தேன் மிட்டாய், குச்சிக் கிழங்கு, மாங்காய் பத்தை, நுங்கு, கடலை உருண்டை, சேமியா பால் ஐஸ், கம்மர்கட், பிண்ணாக்கு பர்பி, வறுகடலை ... இவை எல்லாம் என் பள்ளிக்கூட பிராயத்தை நினைவூட்டியது.10 பைசா முதல் அதிகபட்சம் 50 பைசா வரை விற்றது.
பள்ளிக்கூடச் சுவற்றின் சந்து வழியே மறுபக்கத்திலிருந்து மாலை மூன்று மணிக்கு விற்பனை களைகட்டத் தொடங்கும். என் வகுப்பில் சிலர் தள்ளுவண்டிக்காரரிடம் கடன் வைத்துக்கொண்டனர்.
என் பக்கத்து பெஞ்சு பஞ்சாட்சரம் எப்படியும் ரூ.5 மாதக் கடன் வைத்துருப்பான். 'டேய் பஞ்சு, நீயும் அஞ்சாங் கிளாஸ் குமாரும் தான் கடன் பாக்கி தரணும்... தரலைனா உன் ஹெட்மாஷ்டர் கிட்ட வந்து சொல்லிடுவேன்' என்று மிரட்டுவார். 'அணா.. ணா... எப்படியும் இந்தவாரம் தரேன். இப்ப ஒரு பேரிக்காய் குடுணா' என்று இவன் கெஞ்சிக்கேட்டு வாங்கியது இப்போது என் நினைவுக்கு வந்ததது.
இது போன்ற நினைவுகளின் மகிழ்ச்சி அலையில் மனம் ஆரோக்கியமாக மூழ்கித் திளைக்கும். Nostalgic!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக