லாவோட்சுவின் கூற்றுப்படி, அழியக்கூடிய எல்லா ஜீவன்களும் இனப்பெருக்கம் செய்துகொள்கின்றன. அப்படி ஏதும் செய்யாமல் இருக்கும் எதுவும் அழியக்கூடியதில்லை என்கிறார். கற்பகாலம் வரை வாழ வேண்டுமானால் ‘வய்டன்’ ‘நெய்டன் எனப்படும் கற்பங்களை எடுத்துக் கொண்டால் அது கல்ப காலம்வரை தேகத்தைப் பாதுகாத்து நீடித்து வாழ வழிகாட்டும் ஆனால் அழியாமலே இருக்க ஒருவர் எண்ணக்கூடாது. குறிக்கோளுக்கு ஏற்ப அமைய வேண்டும்.
தமிழ் சித்தர்கள் செய்து உண்ட கற்பங்கள் எல்லாம் சீனாவுக்குப் போனது எப்படி என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். லாவோட்சுவின் காலத்தில் சீன மன்னர்களுக்கு வாத வைத்தியமும் கற்பங்களும் அளிக்கப்பட்டன என்று தாவோவின் வரலாற்றுச் செயல்பாடுகள் மூலம் அறியப்படுகிறது.
சாஸ்திரம்படி தக்கதொரு நாளில் தாதுக்கள், உப்புகள், உலோகங்கள் அனைத்தையும் சேகரித்துச் சுத்தி செய்து பீங்கானில் இட்டு ஸ்புடம் போட்டு அதன்மூலம் கிடைக்கும் கற்பங்களை ‘வய்டன்’ என்கிறது. அநேக சித்தர்கள் இதைப் பின்பற்றி உண்டனர். இயற்கையாக மனித தேகத்திற்குள்ளே பிரபஞ்ச சக்தி மூலம் ரசவாத கற்பத்தை உண்டாக்கிக் கொள்வதை ‘நெய்டன்’ என்கிறது. இது வள்ளலார் மற்றும் சில மகான்கள் பின்பற்றிய சூத்திரம்.
தாவோவிற்கு இவை கூற்றும் - செயல்முறையும் போன்றது. இதை குருவினடத்தில் கற்றால் அந்த தாவோ இறைவனோடும் பிரபஞ்ச ஆற்றலோடும் தொடர்பு கொள்ளவும், மெய்ஞானத்தைப் பெறவும் வழிவகுக்கும்.
(இன்னும் அச்சுக்குப் போகாத 'தாவோ அறிவோம்' என்ற என் நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக