About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 3 ஜூன், 2020

தருமம் தலைமுறைகளைக் காக்கும்!

சாஸ்திரம் சொல்லியுள்ளபடி பெரும்பாலானோர் குறைந்தது 14 தலைமுறைகளுக்குப் புண்ணியத்தை ஈட்டியிருப்பீர்கள். அதில் எந்த குறைவும் இருக்காது. ஆனால் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்கள் தலைமுறைகளைத் தாக்கும். ஊழ்வினைப் பயனாக அவை மறுபிறப்பில் சஞ்சித/ பிராரப்த கர்மாவாக ஒட்டிக்கொண்டு வரும். முகம் தெரியாத எவனோ நம்மை வஞ்சம் தீர்ப்பதும், எவனோ வலியவந்து உதவுவதும் இதன் பயனே! இதைத்தான் 'தீதும் நன்றும் பிறர் தர வாராது' என்கிறோம்.

ஈசனின் ஆக்ஞைப்படி நாமே நம் முன்ஜென்ம பிறவிகளின் குடும்ப வம்சாவழியில் பிறந்து எஞ்சிய பாவக் கடன்களை அனுபவித்துக் கழிக்க மீண்டும் சுழற்சியில் வந்து பிறக்க நேரிடும். அதனால்தான் பூட்டன்-பாட்டன் பெயர்களை பெயரன்-கொள்ளுப் பெயரனுக்கு வைப்பது வழக்கம். பாவம் செய்தாலும் புண்ணியம் செய்தாலும் மறுபிறப்பு உண்டு. பெரிய கஷ்டம் ஒன்று வந்து வாட்டினால் அதிலிருந்து மீண்டுவர தீர்வு என்பதும் வருகிறது. முன்வினைப் பாவ-புண்ணிய விளைவுதான் இவ்விரண்டும். ஒவ்வொரு பிறவியை முடித்தபின் விதிப்படி நம் ஆன்மா திருந்தி மேன்மை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் சுழற்சியில் பிறக்கப் புதிதாய் ஆகாம்ய கர்மாவை சம்பாதித்தால் தீர்வுதான் ஏது?

Scene number, action, cut, take over, pack up, change location என்ற ரீதியில் ஆன்மா வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கிறது. Call sheet புக்கிங் ஆகாமல் அவனடியில் இருக்க வேண்டும். ஓம் நமசிவாய!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக