About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 3 ஜூன், 2020

வீதியில் வேதியர்!

அறுதொழிலோரைப் பற்றி நம் திருவள்ளுவர் அப்பர் மாணிக்கவாசகர் முதலானோர் உயர்வாய்ப் பாடியுள்ளனர். ஆனால் இந்த நாற்பதுநாள் ஊரடங்கினால் நிரந்திர தொழில் இல்லாமையால் புரோகிதம் செய்து வைப்போர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோயில்/ திருமணம்/ வைபவம் என எல்லா நிகழ்ச்சிகளும் ரத்தாகிய நிலையில் ஜீவனமே கேள்விக்குறியாக உள்ளதாம். என்னதான் அமைப்பு/ சங்கம்/சம்மேளனம் இருந்தாலும் எல்லோருக்கும் அதனால் நிதி/ பொருளுதவி செய்திட சாத்தியப் படாது. சுபநிகழ்ச்சி நடத்தி வைப்போர் சிலர் அசுப காரியம் செய்து வைப்பதில்லை என சங்கல்பம் எடுப்பதுண்டு. இது இன்னும் கஷ்ட ஜீவனம் தான்!

'வேத போஷிதம் கைவல்ய நீதி மார்க்கம்' என்பதற்கேற்ப ஈசன் எப்படியோ படியளக்கிறான். வேதத்தைப் போஷித்தாலும் ஊழ்வினைப் பயனால் சில சமயம் சோதனை வரும். வேதம் ஓதும் வாயால் தெருவில் வெட்கத்தைவிட்டு யாசிக்கும் கட்டாயம் வந்துள்ளது. ஐதராபாதில் அப்படியொரு காட்சிதான் இப்பதிவின் படம். நாத்திக முற்போக்குவாதிகள் ஆசைப்பட்டது நடந்துவிட்டது. 'வீதியில் வேதம் ஓதி யாசிக்கும் காலம் வரும்' என்று காலக்ஞானி ஶ்ரீ வீரப்பிரம்மேந்திரர் அன்றே சொன்னார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக