About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 3 ஜூன், 2020

மிகையான சிகை!

ஶ்ரீருத்ரத்தில், ‘கபர்த்திக்கு நமஸ்காரம்; வ்யுப்த கேசனுக்கு நமஸ்காரம்’ என்று அடுத்தடுத்து வருகிறது. ‘கபர்த்தி’ என்றால் ‘ஜடாதாரி’ என்று அர்த்தம். சிவனை சடை முடிந்தவனாகக் காண்கிறோம். ‘வ்யுப்த’ என்றால், ‘வபனம் செய்து கொண்ட’ என்று அர்த்தம். ‘வ்யுப்த கேசன்’ என்றால் தலைமுடியை மழித்தவன் என்று ஏகதண்டியான சன்னியாசியைக் குறிக்கிறது.

ஆண்கள் பட்சத்திற்கு ஒருமுறை புதன் கிழமை காலையில் தான் சவரம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் உடல் நலத்திற்கு நல்லது. ஞாயிறு செவ்வாய் வெள்ளி அமாவாசை நாட்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது. மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் தலை முடி வெட்டுவது கூடாது. சன்னியாசிக்கு வபனம் செய்ய பௌர்ணமி ஏற்றது என்று நம் சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் தினமும் முகச்சவரம் செய்யும் பழக்கம் அந்நிய கலாச்சாரத்தை நாம் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் வந்தது என்று நினைக்கிறேன். சாதிய ஆதிக்கம்/ மூடநம்பிக்கை/ சீர்திருத்தம் போன்ற முற்போக்குக் காரணங்களால் முன்னோர் கடைபிடித்த இப்பழக்கம் போய்விட்டது.

இன்றோ எந்த நாளிலும் எந்த நேரத்திலும் சலூனுக்கும்/அழகு Spa வுக்குப் போகலாம் என்று ஆகிவிட்டது. ஊரடங்கு முடிந்து முடி திருத்தகங்கள் திறந்தபின் அங்கு சமூக இடைவெளி காத்து நீண்ட Q வரிசையும் நிற்கும். வருபவர்களுக்கு கடைக்காரர் முன்பதிவு டோக்கன் போட்டுக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை! ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முடி வெட்டியபின் கத்தரிக்கோல் சீப்பு இத்யாதிகளை வெந்நீரில் ஸ்டெர்லைஸ் செய்ய நேரம் இருக்குமா? முடித்துகள்களால் தும்மல் கட்டாயம் வரும் இடம். 😱😖




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக