சுமார் 75 வருடங்களுக்கு முன் மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமிகள் காஞ்சி மடத்தின் தலைமை பீடாதிபதியாக பொறுப்பில் இருந்த சமயம், தன்னுடைய பூர்வாஸ்ரம சித்தப்பா-சித்தி தரிசிக்க வந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று சந்திரமௌலி பூசையை கண்டனர். நித்திய பூசை முடிந்ததும், அவர்களை நலம் விசாரித்து, பிரசாதங்கள் வழங்கினார். அங்கு அவர்களுக்கு கைத்தறி வேட்டியும் புடவையும் மடத்தின் சார்ப்பாக கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினாராம்.
ஆனால் இன்று இப்படி நிகழுமா? இக்காலத்தில் எந்த மடமாக இருந்தாலும் முன்னாள் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆன்மிக சங்க பிரதிநிதிகள் என்று எல்லோருமே ஒரு துறவியை தனிமையில் விடாமல் சொந்தம் கொண்டாடி அவரை சன்னியாசியாக இருக்க விடுவதில்லை. இறுதியில் அவரை வியாபார கேந்திரத்தின் கார்பரேட் CEO வாகவே மாற்றிவிடுகிறார்கள்.
அன்று இவர் எதற்கும் பிடி கொடுக்காமல் தன் உள்ளொளி காட்டிய வழியில் நின்றார். எல்லா வற்றிலிருந்து ஒரு மாறுபட்ட துறவியாக அவர் இருந்ததால் மகாபெரியவர் என்று அழைக்கபட்டார். மும்மூர்த்திகளும் தேவியரும் அவருள்ளேயே இருந்தனர், அது ஒரு சிலர் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது என்பதால் நடமாடும் தெய்வமாக போற்றப்பட்டார். சமத்துவம் போற்றிய ஒப்பற்ற துறவி என பலபிரிவு மக்களால் கொண்டாடபட்டார். அவர் பிறந்த குலம் ஒன்றை வைத்துக்கொண்டு இன்றுவரை அவரை எப்படியெல்லாம் இகழ முடியுமோ அப்படி எல்லாம் செய்துவந்தனர். பிறப்பதற்கு பெற்றோரும், சாதி என்பதும் ஒட்டிக் கொண்டும் வருவது தவிர்க்கமுடியாது. அதன்பின் அவை சன்னியாசத்தில் தொடராது.
பலபேருடைய சந்தேகங்களுக்கு தீர்வு சொன்னவர்... கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்ற நூல் எழுதக்காரணமாக இருந்தவர், சிவாஜி கணேசன் 'திருவருட்செல்வர்' படத்தில் நடிக்க தன்னை அறியாமலே மாடலாக இருந்தவர், திருக்குரானில் சந்தேகத்தை தீர்த்தவர், பக்கத்து மசூதியில் தொழுகை நேரத்தில் இவரும் தொழுபவர், இப்படி எவ்வளவோ சொல்லலாம். அவருடைய பக்தர்களில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பௌத்தர்கள், நரிக்குறவர்கள், அரசர்கள், கொடையாளர்கள், விவசாயிகள், பரம எழைகள், என்று பலரும் இருந்தனர். அவர் பன்மொழியாளர். அவர் அருளிய திருவாய்மொழி உரைகள் தொகுத்து 'தெய்வத்தின் குரல்' என்று வெளிவந்தது. ஏழைகளுக்காக 'பிடி அரிசி' திட்டம் கொண்டு வந்தவர். அப்படிப்பட்ட காஞ்சி மாமுனிவரின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. நாமும் குருபாதம் சேவிப்போம்.
மகான் ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரரின் தீர்க்கதரிசனம்படி எதிர்காலத்தில் விஸ்வ பிராமணர்களே (கம்மாள ஆச்சாரிகள்) அத்வைத்த மடங்களின் பீடாதிபதியாக வரும் சாத்தியங்கள் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக