சுபர்னச ரிஷி கோத்திரம் என்பார்கள் ஆனால் அவர்கள் சில்பியாக, பொற்கொல்லராக தொழிலில் இருப்பார்கள். சானக ரிஷி கோத்ரம் என்பார்கள், ஆனால் அவர்கள் செய்யும் தொழில் மரவேலை, உலோக வேலையாக இருக்கும். ஆக, இக்காலத்தில் தொழிலை வைத்து கோத்ரம் கண்டுபிடிப்பதோ, கோத்ரத்தை வைத்து தொழிலை யூகிப்பதோ சற்றும் சாத்தியப்படுவதில்லை. எதனால் இந்த நிலை?
* குடும்பத்து மூதாதையர்கள் பிரவரம் சொல்லாமல் போனது
* வேறு கோத்ரத்தில் ஸ்வீகாரம் போயிருக்கலாம்
* மாமனார் வீட்டின் குடும்ப தொழிலையே ஏற்றுக்கொண்டது
* வந்த வம்சாவளியே மறந்துபோயிருக்கலாம்
* வம்சமும் கோத்திரமும் தெரிந்தும் அபிவாதயே /பிரவரம் சொல்லுவதில் நாட்டமிமை
* விஸ்வகர்ம என்று வெளிக்காட்டாமல் இருந்திருக்கலாம்
எனக்குத் தெரிந்த ஒரு Tailor தையல்காரர். சானக ரிஷி கோத்திரம். அவருடைய பாட்டன் கொல்லர், தந்தை தச்சர், மகன் ராணுவத்தில் ஷத்ரியன், பெயரன் தட்டான் (Artificial Jewellery making படித்து தொழில் செய்கிறான்). இதை என்னவென்று சொல்லுவீர்கள்?
இவர்களுடைய ப்ரவரம் "பஞ்சாரிஷேய ப்ரவரான்வித சானகரிஷி கோத்ர.." என்று வரும். சானகரிஷி கீழே 5 உபகோத்ரம் வரும். அந்த பஞ்ச ரிஷிகள்தான் உபசானாக, விப்ரஜா, காஸ்யப, மனுவிஸ்வகர்மா,விஸ்வத்மகா என்று வரும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 மகன்கள் என்று வரும்.
அதாவது, மூல மயன் 5 ரிஷிகளுக்கு, 5 மகன்கள், அவர்களுக்கு 5 மகன்கள் என்று இப்படியாக மொத்தம் 125 எணிக்கை வரும். அந்தந்த மூல ரிஷிக்கு கீழே வருபவர்கள் பஞ்சரிஷிகள் குழு. இக்குழு பெயர்கள் மாறும். இதை குடும்பத்தில் பெரியவர்கள் தலைமுறையாக சொல்லிக்கொடுத்திருந்தால் தான் தெரியும். இப்போது ப்ரவரம் என்ன என்பது விளங்கியிருக்கும்.
பெரியவர்களை நமஸ்கரிக்கும்போது இந்த விபரங்கள் சொல்லி கடைசியில் உங்கள் பெயரோடு ஷர்மா என்று சேர்த்து அபிவாதயே சொல்லவேண்டும். இந்த சுய அறிமுகம் தான் 'அபிவாதயே' . இது தேவ/த்விஜ பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது.
இதை இங்கே உதாரணத்திற்காக சொன்னேன். பலபேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது என்பதால்தான் இப்பதிவு இட்டேன். இது சற்று கடினமான சுப்ஜெக்ட் போல தெரியும். இருந்தாலும் முடிந்தவரை எளிமை படுத்தியுள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக