அது 1790. திப்பு சுல்தான் அதிரடியாக கரூர், கோயம்பத்தூர், பாலக்காடு பகுதிகளை கைப்பற்றினான். மைசூர் சமஸ்தானத்தில் பல்லாயிரக் கணக்கான இந்துக்களை வதைத்தான். அது போதாதென்று இந்தப் பக்கம் கொங்கு மண்டலத்திலும் கைவரசியைக் காட்டினான். என்னுடைய சேயோன் சோமேஸ்வரனையும் அவர் தந்தை அனந்தராமனையும் சிறையில் தள்ளினான். பின்னர் (என் பரன்) அனந்தராமனை மட்டும் விடுவித்தான். பத்து நாட்கள் ஆகியும் சோமேஸ்வரன் எந்த உணவையும் சிறையில் உட்கொள்ளவில்லை. மயங்கி விட்டார்.
திப்பு சுல்தானின் மனைவியின் கனவில் ஈசனே அசரீரியாக 'சோமேஸ்வரன் எந்த தவறும் செய்யாதவன் அவனை விடுவி' என்று உரைத்துள்ளார். அதன்பின் சிறையில் இவரை எழுப்ப சுய நினைவின்றி கிடந்தார். உடனே வைத்தியர்களை அழைத்தான். குழைத்த தயிரையும் அன்னத்தையும் மூன்று தினங்களுக்கு உடல்மேல் பூச்சு தந்து அந்த சத்து சரும துவாரங்கள் வழியே கிரகிக்கப்பட சக்தி வந்து எழுந்தார்.
அதன்பின், நடந்த தவறை மனிக்கவேண்டும் என்று காலில் விழுந்து, 'நவாப் சோமயாஜுலு' என்ற பட்டம் சூட்டி, காவேரி நதிக்கரையில் ஒரு கிராமத்தையே சாசனம் எழுதி, ஒரு மரகத லிங்கத்தையும் இனாமகாத் தந்து அனுப்பினான். இந்த லிங்கத்தை எந்த கோயிலில் சூரையாடினானோ, அந்த கடவுளுக்கே வெளிச்சம்! இன்றைக்கு அந்த கிராமமும் நிலங்களும் தங்காமல் சுவடு தெரியாமல் வந்தவழியே போனது.. மரகத லிங்கம் மட்டும் புதுவை பக்கத்தில் ஏதோவொரு பங்காளி வீட்டில் உள்ளதாம். அதற்கு பால், அன்னம் நிவேதனம் வைத்து நித்திய பூசை செய்து வருவதாக அண்மையில் கேள்விப்பட்டேன். சோமேஸ்வரனின் தர்மபத்தினி சுப்புலட்சுமிதான் வம்சத்தை காத்து வருகிறாள் என்பது அருள்வாக்குகளில் தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக