About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 21 ஜூலை, 2017

சித்தர்களும் ஜாதிகளும்

விராட் விஸ்வகர்மா பஞ்சமுகத்தில் மயன் மூலம் ஐந்தொழிலைப் படைக்கும் போதே, பிரம்மனின் சத்யோஜாத முகத்திலிருந்து /தோளிலிருந்து/ தொடையிலிருந்து/ பாதத்திலிருந்து ஏனைய வர்ணங்களையும் உபதொழில் சார்ந்த பிரிவுகளையும் சிருஷ்டித்தார். அதை பழைய பதிவுகளில் நாம் பார்த்தோம். ஆனால் என்னென்ன குலங்கள் பல யுகங்களுக்கு முன்பே இருந்தது என்பதை, சப்த காண்ட பெருங்காவியத்தில் போகர் ஒவ்வொன்றாக பார்த்துச் சொல்லியுள்ளார்.

பல சித்தர்களின் பிறப்பு ரகசியம், பெற்றோர், நட்சத்திரம், கோத்ரம், ஜாதி /மரபு, பூமியில் வாழ்ந்த ஆயுள் காலம், சமாதியில் இருந்த காலம், எத்தனை தலைமுறைகள் என்று பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். தான் விஸ்வகர்மா-பொற்கொல்லர் என்கிறார். இதில் ராமதேவர் (எ) யாக்கோபு மட்டும் குலம் மாறி துலுக்கர ஆனார். சித்தர் திருவள்ளுவரின் (வள்ளுவ) ஜாதி என்ன என்பதை அவருடைய நூலே சொல்லும் என்கிறார். அவை என்னென என்பதை படத்தில் காண்க. இவ்வளவு ஜாதிகளா? இதில் சில சித்தர்களின் ஜாதி விவரம் தந்துள்ளேன். இது முழு பட்டியல் அல்ல. ஹும்ம்.. இப்போவே கண்ண கட்டுதே!

அக்காலங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வர்ணத்தவராகவும் ஆகலாம் என்ற நிலை system இருந்தது. பிராமணனாக வேண்டும் என்றால் என்ன நியம இயமங்கள் வேண்டும் என்று திருமந்திர (பா.1665) பாடலில் திருமூலரே நன்கு சொல்லியுள்ளார். நூலையும், சிகையையும் பற்றி அறியாதோர் மூடர்களாக இருக்கட்டும் என்று சாடுகிறார். ஜெனன சாகரத்தில் இக்கோட்பாடை போகரும் உறுதி செய்துள்ளனர், காயத்திரி மந்திரத்தின் மேன்மையையும் உரைத்துள்ளார். வேத வியாசர், வால்மீகி காலத்தில் மறை பின்பற்றப்பட்டது. ஆனால் இவையெல்லாமே ஆரியர் கலாசாரம் என்று இதுகாறும் திராவிடர்கள் முழங்குகிறார்கள். அப்படி என்றால் அகத்தியர் போகர் காலத்தில் இதுபோன்ற நியமங்களைக் குறிப்பிட்டு முக்கியத்துவம் தந்திருக்கக் கூடாதே!

பிராமணர் என்றாலே ஆரியர் என்று பொருத்தி விட்டோம். Aryan invasion என்பதை கலியுகத்தின் பாதிக்குப்பிறகுதான் சொல்கிறோம். ஆனால் பஞ்சபிரம்ம தத்துவம் இதை பொய்யாக்குகிறதே. நாம் நினைப்பது தவறு என்பதை விஸ்வப்பிரம்ம புராணம் காட்டுகிறது. இதை மறுப்போர் பலருண்டு.

ஆக, ஜாதிகள் எல்லாம் நாம் நினைத்தபடியோ திராவிடகட்சிகள் பிரச்சாரம் செய்வது போலவோ பிராமண சூழ்ச்சியால் வரவில்லை என்பது நன்கு விளங்குகிறதா? இதெல்லாம் அன்றே இருந்துள்ளது என்பது புலப்படுகிறது.



1 கருத்து: