பல மில்லியன் வருடங்களுக்கு முன் பூமித்தட்டுகள் நகர்ந்து போயுள்ளது நாம் அறிந்ததே. ஒரு பெரிய நிலப்பகுதி பிய்த்துக் கொண்டுபோய் தனி கண்டங்களாக உருவாவது இப்படித்தான்.
ஆனால், இதுபோன்றவை நீளமாக இழுத்துக் கொண்டு பிரிந்து போனாலும், தட்டுகளின் பருமன் குறைவது இயற்கையே. (பரோட்டா மாவு உருண்டையை இழுத்து இழுத்து சன்னமாக்குவது போல!). இதுபோன்ற அசைவுகள் அவ்வளவு எளிதில் பிளவு படுமா என்றால் இல்லை. ஏன்?
நம் ஆழமான இந்து மகாசமுத்திரத்தின் அடியில் ஆகர்ஷன சக்தி மிக அதிகம் என்பது ஆய்வில் தெரிந்துள்ளது. சேது பாலமே இன்னும் குலையாமல் அப்படியே இருக்கிறது என்றால், லெமுரியா (எ) குமரிக்கண்டமும் அப்படியேதானே இருக்க வேண்டும்? பாலம் முற்றிலும் கற்பாறைகளால் ஆனது என்பதால் பேரிடர்கள் ஏதும் செய்யவில்லை. ஆனால் குமரிக் கண்டம் நிலப்பகுதியில் பல கட்டுமானங்கள் நிலை குலைந்து போயிருந்தாலும், அவை அங்கேதான் இருக்க சாத்தியங்கள் உண்டு. செயற்கைக்கோள் மூலம் நிலத்திட்டுகளை கண்டு கொள்ளலாம்.
படத்திலுள்ளபடி, தென்னாடுடை பகுதியான குமரிக்கு கீழேவரை பரந்துபட்ட நிலப்பகுதி தான் குமரிகண்டம். இராமாயண காலத்திற்கு முன்னரே இதை கடல் கொண்டிருக்கும். இது தென்மேற்கே, மடகாஸ்கர் வரையிலும் தென்கிழக்கே ஆஸ்த்ரேலியா வரை போயிருக்க சாத்தியங்கள் உண்டு. சில பலவீன தட்டுகள் கீழே துருவப்பகுதி வரை நகர்ந்து போயிருக்கும்.
போகர் பாடல்களில் தக்ஷிணத்தின் (தென்னாட்டு) தென்கிழக்கே நிறைய அக்னிமலைகள் / குன்றுகள், இருந்துள்ளன என்பதை பழைய பதிவுகளில் பார்த்தோம். அதுபோக, முதல் /இரண்டாம் சங்க நூல்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அது நம் மூதாதையர் நிலம். காலத்தின் கோலத்தில் நாம்தான் புலம்பெயர்ந்துள்ளோம். ஆகவேதான், அந்த தென்னாட்டு பரம்பரையினரை 'தென்புலத்தார்' என்று பெயரிட்டு வணங்குகிறோம்.
ஆகவே, இன்று கீழடி போல் நிறைய நாகரிக ஊர்கள், மீனாட்சி பட்டணத்தை மையமாககேக்கொண்டு இருந்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படியே, தோண்டிக்கொண்டு போனால் கீழடி புறநகர் தாண்டி புது குறிச்சிகள், பட்டணங்கள் என்று கணக்கின்றி வெளிபட்டுகொண்டு வரும். இது எதை காட்டுகிறது? தமிழர் நாகரிகம் முடிவற்ற தொடக்கத்தைக் கொண்டது என்பது விளங்கும்.
ஆனால் இதில் அச்சுறுத்தலான ஒரு சிக்கலும் வரும்.. சென்னை (பல்லாவரம்) அனகாபுத்தூரை தொல்லியல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மாதிரி கீழடிசுற்றுப் பகுதிகளிலும் நடக்கும். அதுவே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இது நல்லதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக