About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 27 ஜூலை, 2017

கீழடி ஆய்வு.


சுமார் 2200 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படும் மதுரையின் சங்க காலத்தில் இது பெரிய ஊராக இருந்துள்ளது. அங்கே விஸ்வகர்மா மயன் தலைமுறையினர் இருந்து, ஊர்கட்டுமானம் முதலான அனைத்து தொழில்களையும் இக்காலத்து முன்னேறிய நாகரிக அளவுக்கு செய்தனர்.
இதற்கென்ன சான்று? அங்கு வாஸ்து அமைப்பில் சதுர வடிவ கட்டுமானங்களே கண்டெடுக்கப்பட்டும், ஊரின் அமைப்பும் ஏறக்குறைய சதுர சந்திப்பு சந்துகளை பெற்றிருந்தது என்று தெரிகிறது. திரிகோண வடிவியல், புவிகணித பண்டிதம், ஸ்தபதிய முறைகள், உலோக உருக்கு மற்றும் தொழிற்கூட உத்திகள், வைத்திய கருவி கரணங்கள், போன்றவை பயன்பட்டது.
அடுக்குமாடி கட்டிடங்கள் (G+1), புழங்கும் அறை (hall/room), சமையற் கூடம், புகைபோக்கி, குளியல்-கழிப்பறை, கழிவுநீர் வெளியேற சுடுமண் குழாய்கள், நாட்டு சொருகோடு, பத்தாயம், அடித்தளம், என்று சகலமும் இருந்துள்ளது. இத்தனையும் இருந்த அன்று மின்சார வசதியும் இருந்திருக்காதா என்ன? பல்பு இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை! (சிலப்பதிகாரம்- ஊர்காண் காதை பகுதியில் மதுரை அல்லங்காடி இரவுநேர சந்தை வீதிகளில் தீப்பந்தங்கள்தான் கம்பத்தில் இருந்தது என்று தெரிகிறது.) ஆனால் Circuit பின்னல், dielectric, glass, electroplating, welding, gases, composition, என்று சகலமும் அன்றே இருந்துள்ளது என்பது அகத்தியர்/ போகரின் பாடல்களில் உள்ளது.
சதகும்ப முறையில் அகத்தியரின் battery அங்கே நிர்மாணம் செய்யப்பட்டு எல்லா பொன், இரும்பு பட்டறை தொழில்களுக்கும் சுமார் 160 volt DC மின்சாரம் பயன்பட்டிருக்கும். நாம் சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஊர் திகழ்ந்து, வளர்ந்து, செழித்து, வேரூன்றி, புதைந்து அழிந்தது. தமிழும் வடமொழியும் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதற்கு பானையின் ஓட்டின் மீது வடிக்கப் பட்டிருக்கும் சொல்லே சான்று (படத்தைக் காண்க).

உடைந்த பானை, வளையல், ஊசிமணி, இரும்பு, வெண்கலம், சுதை பொருள்களை மட்டுமே வைத்துக்கொண்டு இதெல்லாம் routine findings தானே என்று குறைவாக மதிப்பிட வேண்டாம்.
குமரிக்கண்டம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு கீழடி, ஒரு சோறு பதம். சித்தர்களின் நூலில் இதன் சுவடு எங்கேனும் கண்ணில் படுகிறதா என்று நானும் பார்கிறேன்.

1 கருத்து: