முதல் சங்க நூலான பெரும்பாணாற்றுப்படையில் பதிவாகியுள்ள தாவரங்கள், உயிரினங்கள் நமக்கு வியப்பைத் தரும். கடம்பம், இலவம், கமுகு, ஈந்து, காஞ்சி, கொன்றை, தென்னை, தேக்கு, தாழை, பலா, பனை, புன்னை, மருதம், மா, மூங்கில், வாழை, வேம்பு, வேங்கை, கறிவேப்பிலை என்று இன்னும் எத்தனையோ உள்ளது.
ஆனால், பல தாவரங்களும் மரங்களும் நம்மூரில் சர்வ சாதாரணமாக வளரும் பண்பு கொண்டது. ஆனால் அவை எல்லாம் மடகாஸ்கர் நிலப்பகுதி பயிர்வகைகள் என்று புத்தகத்திலும் Native species கீழ் போட்டிருக்கும். அதெப்படி அந்த ஊர் பெயர் உள்ளது. அப்படிபார்த்தால் அங்கிருந்து பல வகைகள் இங்கே எப்போது கொண்டுவரப்பட்டது? ஆனால் பழம் நூல்களிலும், புராணங்களிலுமே இந்த தாவரம் மற்றும் பழ வகைகளின் பெயர்கள் உள்ளதுவே. இதில் எங்கோ இடிக்கிறது என்று நினைப்பீர்கள்.
ஆம், அண்மைப் பதிவில் தென்னாட்டு நிலப்பகுதி (குமரிக்கண்டம்) பற்றி பார்த்தோமே, அந்த நிலப்பகுதியைச் சேர்ந்ததுதான் இன்றைய மடகாஸ்கர் Madagascar. உலகின் மொத்த தாவரங்களில் சுமார் 70% வகைகள் இந்த நாட்டைச் சேர்ந்தது என்று ஆங்கிலேய ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு நம் குமரிக்கண்ட தொன்மை பற்றி அன்றைய காலகட்டத்தில் தெரிந்திருக்க ஞாயமில்லை. அப்படித்தான் சுற்றுப்புறத்து தீவுகளில் உள்ள பழங்குடியினரின் மொழியில் தொன்மை தமிழ் சொற்கள் இன்றும் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக