About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 8 ஜூலை, 2017

பாலாம்பா (எ) ஷிவங்மு

நம் சித்தர்கள் எல்லோருமே சீனத்தை சிறப்படமாகக் கொண்டு பல காலங்கள் அங்கேயே ஜனனம் எடுத்து வாழ்ந்தனர். சீன பூமியைப் போற்றும் காரணங்களை நம் பழைய பதிவுகளில் தீர்க்கமாகப் பார்த்துள்ளோம். போகரின் குரு காலாங்கி சீனத்தில் மூதறிஞர் கன்பூசியஸ் என்றார் பெயரில் போர் வீரராக இருந்தார். போகர் சுமார் பன்னீராயிரம் வருடங்கள் லாவோட்சு என்ற பெயரோடு 13 முறை அங்கே ஜெனித்தார் என்பதையும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். அங்கே போகர் ஒரு சீனத்து முதியவர் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து தனக்கு 'போயாங்' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பரங்கியர் தேசத்தில் இப்படி தனக்கு பெயர் சூட்டிக்கொண்டதை சுட்டிக்காட்டி அகத்தியரே போகரை ஒருசமயம் பாராட்டிப் பாடிய பாடலை முன்பே பார்த்துள்ளோம்.

சீனாவில் இவர்கள் எல்லோருமே நம் சித்தர்களாக இருக்கும் பட்சத்தில் இங்குள்ள சிவசக்தி அம்சங்களும், வாலை தெய்வ வழிபாடும் அங்கேயும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஆம். அப்படித்தான் இருந்துள்ளது.
'ஷி வங்மு' என்ற பெண் தெய்வம்தான் வாலை தெய்வத்தின் ஒப்பீடு. தண்டுவட (பூமி) மூலத்தில் தொடங்கி கபாலத்தின் சகஸ்ராரம் (ஆகாயம்) வரை மனிதனின் ஆன்ம சக்தி பயணிக்கும் ஏணிப்படிகள் உச்சியில் அமர்ந்துள்ளாள். சகஸ்ரார இதழ்கள் அடர்ந்த மரத்திற்கு ஒப்பானது. அங்கு வாசம் செய்யும் இவளே மூப்பை தடுத்து இளமையும் ஆரோக்கியமும் தருபவள்.

'மு' என்றால் தாய், 'வங்' என்றால் ஆட்சி புரியும். ஆக, இவள்தான் சகஸ்ரார சக்கர கபால பீடத்தில் அமர்ந்து ராஜராஜேஸ்வரியாக ஞானிகளுக்கு வழி காட்டுபவள் என்பது சீனர்கள் நம்பிக்கை . அவள் சிந்தாமணி ஒளிரும் பீடத்தில், 'ஷெங்' கிரீடம் தரித்து, பிரத்யங்கரா போல காட்சி தருகிறாள். ஏறக்குறைய பல ஒற்றுமைகள் உள்ளது அல்லவா? சீனாவில் இவள் பிரதான தெய்வமாக இல்லாமல், ஞானிகளுக்கான வாலை தெய்வமாக மட்டுமே வணங்கப்படுகிறாள். 'ஷிவங்மு' என்ற பெயர் 'சிவகாமு' போல ஒலிக்கிறது.. கவனித்தீர்களா?

இவள் சிறுபெண்ணாக, யுவதியாக, தாயாக (பகவதி) மூன்று வேடங்களில் சித்தரிக்கப்படுகிறாள் என்பதை கீழ்வரும் பாடலில் காண்போம்.

'பிராதர் பாலா ச மத்யாஹ்னே யௌவனஸ்தா பவேத் புனஹ,
வ்ருத்தா சாயம் பகவதி சிந்த்யதே முனிபி சஹ'

இப்படியாக காயத்திரி மூன்று வேளைகளிலும் (த்ரிகாலம்) வேடம் ஏற்கிறாள் என்பதை நம் சுலோகங்கள் சொல்கின்றன.

திருமூலரின் சீடரான காலங்கிநாதருக்கு வாலாம்பிகை ஞானம் அளித்து 'கமலர்' என பெயர் சூட்டி, வாலை ரசத்திற்கு இணையான அமுதத்தை பொழியச் செய்து, மகாசித்தனென அழைத்து, சகல வித்தைகளையும் அறிந்திடச் செய்தாள் என்பதை காலாங்கி அருளிய 'இந்திரஜால ஞானம்' நூலில் தெளிவாக்குகிறார்.
Image may contain: text


இதுபோல் நாம் அறியாத சீன தெய்வங்கள் எவ்வளவோ இருக்கும்.. அதில் வாலாம்பிகையின் நிலைக்கு சமமாக உள்ள இந்த சிவங்மு இதுவரை நாம் கேள்விப்படாத ஒன்று. அத்தேசத்தில் சக்தி சக்கரங்களை மையப்படுத்தும் தற்காப்புக் கலை சார்ந்தும், குண்டலினி (Dragon) எழுப்பி, காயகற்பம் உண்டு இறவா நிலை நாடும் (Black belt) யோகிகளு இத்தெய்வம் அருள் புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக