வியாசர், வேதத்தைக்கேட்டு தொகுத்தவர். ஆனால் அதை இயற்றிய ரிஷிகள்: சானக ரிஷி – ரிக் வேதம், சனாதன ரிஷி – யஜுர் வேதம், அஹபூனச ரிஷி – சாம வேதம், ப்ரத்னச ரிஷி – அதர்வண வேதம், ஸுபர்னச ரிஷி - ப்ரணவ வேதம். ஆனால் ப்ரணவ வேதம் என்று ஒரு வேதம் இருப்பதையே அழித்து விட்டார்கள். எவர்கள் அழித்துவிட்டார்கள் என்று இணையத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் த்விஜ பிராமணர்களைத்தான் சொல்வதாக உணரமுடிகிறது.
அதை இவர்கள் யாரும் மறைக்கவில்லை. அந்த ஈசன்தான் மறைத்தான். மறையையே மறைத்த மறையோன் அல்லவா? பிரணவவேதம் அழிக்கப்படவில்லை. ஐந்து தலைகளால் ஆணவம் பெற்ற பிரம்மனை, சிவபெருமான் பைரவரைக் கொண்டு ஐந்தாவது தலையைக் கொய்தார். அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் (Thanjavur Dt.) தலத்தில் இது நடந்தது. பிரம்மதேவனின் அகந்தை நீங்கியது. அன்றுமுதல் நான்முகன், நான்மறை என்றே நிலவியது.
அதுபோல் பிரம்மனுக்கு 'ஓம்' பிரணவத்தின் பொருள் தெரியவில்லை என்றதால் முருகன் பிரம்மனை சிறையில் இட்டான் என்கிறது புராணம். பிறகு முருகன் சிவபெருமானை கேட்க, தனக்கு விளக்கம் தெரியாதது போல் நடிக்க, சிவனை மண்டியிட்டு தன்னிடம் உபதேசம் பெறச்செய்தான் சுவாமிநாதன். இப்படி பிரம்மனோடு இவர்கள் விளையாடினார்கள்.
பல விஸ்வகர்மா இணையதளங்களில் ஐந்தாம் வேதத்தை அழித்தது சில பிரிவினர்கள் என்று ஊரார் மீது பழி போடுவது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அப்படி பிரணவ வேதம் அழிந்து போயிருந்தால் காலஞ்சென்ற சில்பகுரு கணபதி ஸ்தபதி அவர்கள் எப்படி அதை தொகுத்து பதிப்பு செய்திருக்க முடியும்? ஐந்திறம் என்ற நூலை எப்படி அவர் வெளியிட்டார்? இவ்வேதத்தின் சாரமே மற்ற நான்கிலும் உள்ளது என்கிறார். அவற்றுக்கு இதுவே மூல வேதம். இதுகாறும் மறைந்திருந்த ஒரு நூல் எப்போது யாரால் எழுதப்பட வேண்டும், பதிப்பாக வேண்டும் என்பது தெய்வ சங்கல்பம்.
ஆக, விஸ்வகர்மா குலத்தினர் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்று இத்தனை ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் இந்த துஷ்பிரச்சாரத்தின் பின்னே இருந்து இயக்கியுள்ளது தெரிகிறது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை பரிமளித்த விஸ்வப்பிராமண குலம் அப்படியே ஓடுங்கியதும் இவர்களின் சூழ்ச்சியே. இந்த அரை நூறாண்டில் மங்காத்தா ஆட்டம் ஆடிவிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக