About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 14 ஜூலை, 2017

கோவூர் தலம்

கோவூர் கிழார் என்று சொன்னால் புதிதாக இருக்கும். இவர்தான் நாம் கேள்விப்பட்ட 'பெரியபுராணம்' சேக்கிழார் பெருமான். காஞ்சிபுர மாவட்டம் கோவூர் கோட்டம் குன்றத்தூர் பகுதியில் இத்தலம் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு பல சுற்றுப்புற கிராமங்கள் உள்ளன.

அனைவரும் அறிந்த ஒன்றுதான் குன்றின்மேல் இருக்கும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இது சோழ மன்னர்களால் புனரைமைக்கபட்டது. தற்சமயம் மண்டபங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Related image

குன்றின் எதிர் சாலையின் ஓரத்தில் இரண்டு கோயில்கள் உண்டு. அவை திரு ஊரகப் பெருமாள்-பூவிருந்தவல்லித் தாயார் கோயில். இங்கு திருமலையில் உள்ள வேங்கடவன் போன்றே நின்ற கோலத்தில் உள்ளார். அதன் பக்கத்து தெருவிலேயே 'நகமுகைவல்லி சமேத கந்தழீஸ்வரர் திருகோயில்' உள்ளது. இக்கோயில் சேக்கிழார் வந்து வழிபட்டு பாடல்பெற்ற ஸ்தலமாகும். இங்கு கருவறை விமானம் கஜப்ருஷ்ட (யானையின் பின்புறம்) கட்டமைப்பில் 2ம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது.
  


  

அங்கிருந்து சுமார் 2கிமீ தொலைவில் தேரடி சமீபத்தில் ராகுத்தலமாம் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனாய ஸ்ரீ நாகேஸ்வரசுவாமி கோயில் உள்ளது. இதை சேக்கிழாரே 'வடதிருநாகேஸ்வரம்' என்று அழைத்துள்ளார். ஏன்? இங்கு மூலவரான நாகேஸ்வரரை சேக்கிழாரே லிங்கரூப பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று தல வரலாறு சொல்கிறது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் போலவே இங்கு இறைவனை எழுந்தருளச் செய்யவேண்டி இதை நிறுவினாராம். இங்கு பெரிய தெப்பகுளமும் உள்ளது. அதன் அருகிலே சேக்கிழார் பெருமானின் மணிமண்டபம் ஒன்றை அழகாகக்கட்டி நிர்மாணித்துள்ளனர்.

என் மனதில் தோன்றிய பாடல்.

"கோவூர் கோட்டம் தோரணவாயில் கடந்து
குன்றத்தூர் கந்தனை களிப்புடன் தரிசித்து
ஈசனும் கேசவனும் அருள்தர நின்றவூரில்
இம்மனம் குளிரக் காண்."

ஒரே கோட்டத்தில் இத்தனை கோயில்களையும் தரிசித்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக