About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 18 ஜூலை, 2017

பிரணவ வேதம் அழிந்ததா?

Image may contain: 1 person

ஈசனின் ஆசிபெற்ற பாடல் சுவடிகளை/ நூல்களை யார் பதவுரை எழுதவேண்டும், தொகுக்க வேண்டும், அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பவை முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதை அண்மைப் பதிவில் பார்த்தோம். தக்கவர் கண்களுக்கே அது படும்.
இயற்றப்பட்ட எல்லா நூல்களும் எங்கோ மறைவாக இருக்கும். அது தக்க நேரம் வரும்போதுதான் வெளிப்படும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். ஆனால் பல விஸ்வகர்மா இணையதளங்களில் கண்ணைமூடிக்கொண்டு பரப்பப்படும் செய்திதான் 'சிலரால் அழிக்கப்பட்டது' என்று சொல்லப்பட்ட ஐந்தாம் வேதமான 'பிரணவ வேதம்' ஆகும். பிரம்மனின் ஐந்தாவது தலையை ஈசன் அழித்துவிட வில்லை, அதை அரூபமாக்கிவிட்டார். ஆனால் இருக்கிறது. அதற்கேற்றபடி இந்த ஐந்தாம் வேதமும் மறைவில் உள்ளது.

காலஞ்சென்ற சில்பகுரு V.கணபதி ஸ்தபதி அவர்கள் தொகுத்து vastu vedic trust அமைப்பு வெளியிட்ட 'பிரணவ வேதம்' (விலை ரூ.1000) புத்தகத்தை இங்கு காட்டுகிறேன். சுமார் ஐம்பதாயிரம் வாக்கியங்களுக்குமேல் கொண்ட மூல நூலை அவர் ஆய்ந்து தொகுக்க எப்படி சிரமப்பட்டார் என்ற விபரங்கள் நான் இட்ட பழைய பதிவில் இருக்கும். ஆங்கிலம்/ சமஸ்கிருதம் /தமிழ், மொழிகளில் மெத்த புலமை பெற்றவர். மற்ற நான்கு வேதங்களின் சாரம்தான் (சப்தம், கந்தர்வம், நாட்டியம், ஸ்தபதியம்) இந்த வேதத்தின் கிளைகளாக உள்ளது என்கிறார். இப்போது இது அச்சில் உள்ளதா என்று தெரியவில்லை. அழிந்து போனதாக கருதப்பட்ட முக்கிய நூல் இவர் கையில் எப்படி? அதுதான் சூட்சுமம்.
பல நூல்கள் பல காலகட்டங்களில் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாவது இயற்கையே. இந்த சித்தர் அந்த குலத்தைச் சேர்ந்தவர், சித்தர் பெயர் ஒன்றுதான் ஆனால் அவரும் ஐவரும் வேறு, அவர் கூறிய கருத்து இதுதான் அதுதான், அவர் வாழ்ந்த காலம் இதுவல்ல அது... என்றெல்லாம் திரித்து மறுத்துப் பேசி குழப்பங்கள் வருவதும், அவரவர் சௌகரியத்திற்கு ஏற்றபடி சாயத்தைப்பூசுவது இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஒரு தெய்வ நூலை அழிக்க சாமானிய மனிதனால் முடியாது. அது அழிந்தது போல் மறைப்பில் இருக்கும்.
இதையெல்லாம் ஏன் உங்களுக்குச் சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். திராவிட இயக்கங்களின் பிரச்சார மாயையில் விழுந்திடாமல் இருப்பதற்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக