About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

நானும் வாங்கி வெச்சிருக்கேன் !

என் நண்பர் ஒருவர் தேடிப்பிடித்து சைவ சமய நூல்கள் பலதை விருப்பமோடு வாங்குவர். அவருடைய அலமாரியில் பல நூல்கள் கண்ணாடிக்குப் பின்னே வண்ணமயமாகத் தெரியும்.
நான்: 'இதெல்லாம் எப்போ வாங்கினீங்க?'
அவர்: 'ஒவ்வொரு புத்தக கண்காட்சில தள்ளுபடில வாங்கிட்டு வந்து வெச்சேன்.'
நான்: 'வாங்கி வெச்சீங்க சரி... அதைஎல்லாம் முழுசா படிச்சிட்டு வெச்சீங்களா?'
அவர்: 'அதுக்கு எங்க நேரம்? ரெண்டு பக்கம் படிகிறதுகுள்ள தூக்கம் வருது. இப்போ ஏதும் அவசரம் இல்லை. வயசானபின்தான் பொறுமையா இதெல்லாம் படிக்கணும்'
நான்: 'இப்போவே முடியலையே.. வயசானபிறகு என்னத்தைப் படிப்பீங்க? கண்ணு கேட்ராக்ட், பீபி, சுகர், ஞாபக மறதி எல்லாம் வந்திடுமே.!'
அவர்: 'அதை நான் படிக்கணும்னு இருந்தா அவன் படிக்க வெக்கமாட்டானா?'
நான்: 'ஆமாம். நிச்சயமா.'
எனக்குத் தெரிந்து பலபேரிடம் பல சித்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டு அலங்காரமாக உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் எல்லாம் இருந்தும் படிக்க பிராப்தம் இல்லை. ஆனால் முகநூலில் நேரம் செலவழிக்க அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. வயதானபின் நோய்நொடி வந்தபின் அவசர அவசரமாக அதை எப்படியேனும் இந்த ஜென்மத்தில் ஒரு முறையேனும் புரட்டிட வேண்டும் என்ற ஒரு வேகத்தில், மனம் ஈடுபடாமல் சும்மா படிப்பவர்கள் உண்டு.
'இளமையில் கல்' 'முதுமையில் கற்பி'. பிரம்மக்ஞானம் அடைய வேண்டுமென்றால் அதை இளம்வயதில் பெற்றால்தான் உண்டு. பணியோய்வு பெற்றபின் படிக்கலாம் என்று யோசித்து செயல்படுவதற்குள் மூச்சுக்கு ஓய்வு கொடுத்து விடுவதற்கும் சாத்தியம் உண்டு.

Image may contain: 3 people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக