About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 19 ஜூலை, 2017

மேருமலையில் நூலகம்

நமக்குத் தெரிந்து மயன் காலத்தில் இயற்றப்பட்ட எண்ணிலடங்கா நூல்கள் எல்லா தலைப்புகளிலும் இருந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களும் அழிவுகளும் நேரும்போது அவை பாதிப்புக்குள்ளானது. தொன்மை காலத்தில் கபாடபுரம், தென்மதுரை,  ஆகிய நகரங்களில் முச்சங்கம்  நடந்து. அங்கு அறிமுகமான பல நூல்களில் சிலதைச் சொல்கிறேன்.

முதல் சங்க நூல்கள்: - அகத்தியம்-1, ஐந்திறம், பிரணவ வேதம்
இரண்டாம் சங்க நூல்கள் :- அகத்தியம்-2, தொல்காப்பியம், ரிக்/ யசுர்/சாம/அதர்வ வேதங்கள், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம்
மூன்றாம் சங்க நூல்கள் :- சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சீவக சிந்தாமணி, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் அகநானூறு, புறநானூறு,  போன்றவை.

ஆனால் தொல்காப்பியத்தில் வடமொழி பற்றிய மேற்கோள் வருகிறது. இந்த காலகட்டத்தில்தான் பல இலக்கண, அறிவியல், கலை, ஐந்திறமைகள் மற்றும் வேதங்கள் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது . முதல் சங்கத்திற்கு முன்பே எழுதப்பட்ட நூல்கள் தென்மதுரை & கபாடபுரத்தில் அரங்கேற்றம் ஆகியிருக்கும். அதன்பிற்பாடு பேரிடர்கள் வந்து எல்லாமெ கொள்ளப்பட்டது. ஒவ்வொரு முறையும் சித்தர்களின் சீடர்கள் பிரதி எடுத்தும் வீணானது என்பது தெரிகிறது.  அதனால் இதுபோன்ற நூல்கள் எல்லாமே தெற்கிலிருந்து வடக்கே கொண்டுபோய் மயன்ரிஷிகள் மற்றும்  சித்தர்கள் மேருவில் ஈசனின் காவலில் வைத்து விட்டதாக தெரிகிறது. இப்படித்தான் நடந்தது என்பதற்கு என்ன ஆதாரம்?

விஸ்வகர்மா மயன் வம்ச பொற்கொல்லரான சித்தர் போகர், தன்னுடைய 'போகர் ஏழாயிரம்' என்ற சப்தகாண்டத்தில் இது சம்பந்தமாகச் சொன்ன சில பாடல்களைக் கண்டேன். இங்கு தெற்கே இயற்றப்பட்ட  அனேக நூல்களை இமய மலையில் பாதுகாப்பாக நூலக சமாதியில் வைத்துள்ளார்கள் என்று சொல்கிறார். இவர் மேருமலையில் நான்கு திசைகளிலும் அடுக்கி வைக்கப்பட்ட நூல்களே மலைபோல் குவிந்திருக்கிறது என்கிறார். இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், குறித்து தமிழ் மற்றும் வடமொழியில் இயற்றப்பட்ட பலகோடிநூல்கள் உள்ளதாகவும், அதில் இயன்றவரை அனைத்தையும் தான் படித்ததாக கூறுகிறார். அப்படியும் முழுதும் வாசித்து ஆராய அவகாசம் இருக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். 'நான் படித்த நூல்களில் ஒரு பங்கு இந்த கலியுகத்து மாண்பர்கள் கைக்கு கிட்டினாலே அரிது' என்கிறார்.

மறைந்த நூல்கள் எப்படி கலியுகத்தில் நம் கைக்கு கிடைக்கும் என்று நேற்றைய பதிவில் பார்த்தோமே, அதற்கான விடையை போகரே தருகிறார். தக்க நேரத்தில் அது சப்தசாகரத்தில் மிதந்து வரும், ஆசிர்வதிக்கபட்டோர் கையில் அது கிடைக்கபெற, பிறகு மூலநூல், பதவுரை என்று அச்சுநூலாக படிப்பதற்கு வெளிவரும். இதுதான் சூட்சுமம்.  இப்படித்தான் மயன் இயற்றிய எல்லா நூல்களும் தக்க நேரத்தில் வெளிப்படும்.
Image may contain: text

தெய்வ நூல்களை மனிதர்கள் அழித்தார்கள்,  மாற்றிப் போட்டார்கள்,  என்றெல்லாம் இப்படி வாய்க்கு வந்தபடி பேசி பழிபாவம் ஏற்க 'தில் இருக்கும் அஞ்சா நெஞ்சங்கள்' மட்டுமே விமர்சிக்கட்டும். அப்படிப் பேசுவோரை போகர் சபித்துள்ளார்.  நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்!

அதுபோலவே தென்னகத்து சதுரகிரியில் ஒரு நூலகம் உண்டு. இது நம் கண்களுக்குப் புலப்படாது. அதன் நூலகர் (Librarian) அஸ்வினி மகரிஷி. அப்பகுதியை பிலாவடி கருப்பண்ண சாமியும், வன பத்ரகாளியும், மாருதியும் காவல் காக்கிறார்கள். இது தெரியாமல் பலபேர் அமானுஷ்யம் உணரவேண்டி சரியான இடம் தெரியாமல் சதுரகிரியிலுள்ள பல குகைக்குள் போகிறேன், ரசவாத தைல கிணறு தேடுகிறேன், சுனை நீர் குடிக்கிறேன், சித்தர்களை படம் பிடிக்கிறேன் என்று புத்திகெட்டு போகக்கூடாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக