About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 19 ஜூலை, 2017

உபநயன சடங்கு எதற்கு?

'நான்தான் பிரம்மன்' என்பதை இரகசிய மந்திர உபதேசம் மூலம்   உணர்த்தப்படும். யஞகோபவீதம் என்ற பவித்திர முப்பிரி நூலை அணிவிக்கும் உபநயன சடங்கில் அவன் பிரம்ச்சரியம் ஏற்க   தீட்சை வழங்கப்படுகிறது. முற்காலத்தில் எல்லா வர்ணத்தவர்களும் அணிந்தனர். இக்காலத்தில்தான் அது தேய்ந்துபோய் விஸ்வகர்மர், மற்றும் பிராமணர், ஷத்ரியர், வைஸ்யர் அளவில் நின்றுவிட்டது.  'அஹம் பிரம்மாஸ்மி' என்பதை எப்படியோ உணர்ந்தால் சரி.

பூணூலில் உள்ள முடிச்சை 'பிரம்மா முடிச்சு' என்பார்கள். அதில் மிகசிறிய (கிருஷ்ணாநிஜம்)  மான்தோல் செருகி இருப்பார்கள். அவன் இடுப்பில் மரவுரி (மௌஞ்சி) அணிவித்து கையில் தக்க மரகிளை தண்டம் தந்து பிரம்மச்சரிய கோலம் தருவார்கள். இக்காலத்தில் இது ஒரு நாள் கூத்து என்ற அளவில் மட்டுமே!

எப்போதும் அணிவது போய், ஆவணி அவிட்டம் அன்றுமட்டும் அணியும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால்தான் எந்த ஜாதியாக இருந்தாலும், மணமகனுக்கு திருமணத்தின் போது பூணூல் அணிவித்தபின்தான் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டசொல்வார்கள். கெட்ட காரியத்திற்குமட்டும் அனைத்து பிரிவினரும் வலமிருந்து இடமாக பூணூலை மாற்றி அணிந்து செய்வார்கள்.

முற்காலத்தில் சிறுவர்,சிறுமியர் என்று எல்லோருக்குமே 10 வயதுக்குள்ளாகவே இதை நடத்தினார்கள் என்கிறது புராணம் வாயிலாக தெரிகிறது.  ஒருவன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், தன்னுள் இருப்பது எது என்ற  புரிதலில் இருந்தே அந்த அனுபவத்துடன்தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.  இப்போதெல்லாம் 30-40 வயது வரை சமயம் சார்ந்த பக்திநெறி ஏதும் தேவையில்லை என்று பெற்றோர்களே தீர்மானித்து விடுகிறார்கள். 'இப்போவே அதெல்லாம் தெரிஞ்சு சாமியாராகப் போறியா?' என்று கேட்பார்கள். அப்படி ஆகவேண்டும் என்பது எல்லோருக்கும் வாய்க்காது.

'பள்ளிக்கூட படிப்பை படிக்கும்போதே இதையும் சேர்த்து கத்துக்கணும். பிறகு வேலை, குடும்பம், வயோதிகம், நோய் என்று ஆனபின் எங்கிருந்து இதை படித்து தெரிந்துகொள்ள நேரம் கிடைக்கும்? 'தோடுடைய செவியன்..' என்று பாடும் அளவுக்கு ஞானசம்பந்த பெருமானுக்கு அப்படி என்ன வயதாகி விட்டது? பால்குடித்த ஒரு மூன்று வயது குழந்தை செய்யும் வேலையா இது? 'ஆஹ்... அது ஞானக் குழந்தை, எதுவும் செய்யும்' என்று உடனே சப்பைக் கட்டு பதில். அப்போ அதை நாம் செய்யக்கூடாதா? செய்தால் தவறா?

சரி.. கலியின் காலப்போக்கில்  ஏன் சிறுமிகளுக்கு பூணூல் போடுவது நின்றுபோனது? ஏனென்றால்... அவர்கள் காயத்ரி மந்திரம் ஜெபிக்கவேண்டும்... அப்படி ஜெபித்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இது அவர்களுடைய பருவத்திற்கு உகந்தது அல்ல என்று கைவிட்டிருக்கவேண்டும். இது என் கருத்து.

அய்ய..அது எப்படி சூடு வரும்.. அப்படி என்ன அந்த மந்திரத்தில் இருக்கு?

"ஓம்: பூர் புவ  ஸுவ, தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, த்யோ யோ ந:  ப்ரசோதயாத்"   இதுதான் காயத்ரி மந்திரம். 'ஓங்காரப் பொருளாய்  மூன்று உலகங்களிலும் நிறைந்து விளங்கும் எவரோ, அறிவாற்றலைத் தூண்டி அனைத்தையும் படைகின்றாரோ, அவிறைவனை ஜோதி வடவமாய் தியானிப்போம்' இதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.

காயத்திரி மந்திரம் சொல்லி உரு ஏற்றி வரும்போது அகவொளிச் சுடர் சுயம் பிரகாசமாய் வளரும். அது புறத்தே முகத்திலும் கண்களிலும் ஒரு தேஜஸ் தரும்.   லட்சம், கோடிகள் என்று உரு ஏற்றிய முதியவர்கள் இருக்கிறார்கள். அப்போது அவர்கள் வாக்கில் அவளே வந்து அமர்ந்துவிடுகிராள். அவரே பூரண பிரம்மமாக மாறிவிடுகிறார். மனிதனிடம் இயல்பாக காணப்படும் பேராசை பொறாமை ஆத்திரம் வெறுப்பு போன்றவை இவர்களிடம் இருக்காது. அமைதியாக தனித்தே ஒட்டாமல் இருப்பார்கள்.

இன்று ஓரளவுக்கு இந்த பதிவு உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

Image may contain: 1 person, sitting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக