About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 18 ஜூலை, 2017

இவர்களுக்கு எப்படியோ பொழுதுபோகிறது!

அண்மையில் திராவிட கழகம் அறிவித்த ஒரு வினோதமான எதிர்ப்பு போராட்டம் என்னவென்றால் வரும் மாதம் ஆவணி அவிட்டம் அன்று பன்றிக்கு பூணூல் அணிவிக்க இருக்கிறார்களாம்.
திவ்யமா அமக்களமா ஆனந்தமா அமோகமா போட்டு விடட்டுங்கிறேன்.


Image result for பன்னிக்கு பூணூல்
பூவராகவ பெருமாள் தான் பன்றி, அப்போ விஸ்வகர்மாவின் பஞ்சமுகத்தில் வாமதேவ விஷ்ணுவைப் பற்றிதான் சொல்றாங்க.. பெருமையா இருக்கு.. முப்பிரி நூல் பூண்ட பன்றியை சேவித்துக் கொள்ளுங்கள்!

பார்வதி தேவி ஒரு சமயம் சிவனிடம், ' ஸ்ரீமுஷ்ண வராஹ சுவாமியின் அவதார பெருமைகளை இன்னும் விளக்குங்கள்' என்கிறாள். 'ஓம் நமோபகவதே வராஹா ரூபாய பூஹ்பூர்வ ஸ்வ, சியாத்பதே பூபதி த்யம் தேஹயதே ததாபய சுவாஹா'. (வராஹ அவதார மூர்த்தியானவரை, ஐஸ்வர்யம் வழங்கும் அந்த த்ரிவிக்ரமனை வணங்குகிறேன்.)

Related image

சுமார் 50 வருடங்களுக்கு முன் காஞ்சி சங்கரமடம் வெளியே பெரியாரின் சிலை நிறுவப்பட்டதை பலர் கண்டித்தார்களாம். ஆனால் மகாபெரியவரோ 'அவரைப் பார்த்தா இராமாயண காலத்து நாஸ்திகம் பேசும் ஜாபாலி ரிஷியைதான் எனக்கு நினைவூட்டுகிறது. அது அங்கேயே ஓரமா இருக்கட்டுமே!' என்றாராம்.

'கடவுள் இல்லை' என்பார்கள் ஆனால் 'கோயிலில் தமிழ் அர்ச்சனைத்தான் வேண்டும்' என்று ஆர்பாட்ட கோஷம் போடுவார்கள். இரும்புப்பட்டறையில் ஈக்கு என்ன வேலை? 'மறை ஓதி திருமணம் நடத்தக் கூடாது' என்பார்கள் ஆனால் 'சீர்திருத்த திருமணத்தில் குத்துவிளக்கு (அக்னி) ஏற்றுவது தமிழர் பண்பாடு' என்பார்கள். வெந்ததைத் தின்று வேகாததை கழியும் கூட்டத்தினரே இவர்கள். வயிற்றுப் பிழைப்பிற்காக தி.க. கூட்டம் அப்படி பேசியே பழகிவிட்டது.. அதை எதற்கு மதிப்பானேன்?

அவர்கள் எந்தவித கோணத்தில் பழித்தாலும் அதிலிருந்து நாம் நன்மையை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக