About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 20 ஜூலை, 2017

எல்லோருமே பிராமணனாக வேண்டுமா?

போகர் ஜெனன சாகரம் என்ற நூலில் 'ஜகன்னாதர் உற்பவம் கூறல்' என்ற பகுதியில், 'ஆறுமுகன்' முருகன் எப்படி தன்னை  பாண்டவர்கள் + கிருஷ்ணர் என்று மாற்றிக்கொண்டார் என்பதை விவரிக்கிறார்.

வேதங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் போகர் சொல்கிறார். அகத்தியர் போகர் இருவருமே  சிருஷ்டித்த  தத்தம் புதலவர்களுக்கு என்னவெல்லாம் பாரம்பரிய கிரமப்படி செய்தார்கள் என்று விவரிக்கிறார்.

குண்டலினி சக்தியானது மூலத்திலிருந்து மேலெழும்பி  கபால தளத்தில் மேல்நோக்கிட பிரம்மோபதேசம் செய்தார் என்றும், அவனுக்கு மொட்டை அடித்து சிகை வைத்து, பூணூல் போட்டு, காயத்ரி ஜெபிக்க கற்றுத் தந்ததையும் சொல்கிறார்.

இதை எதற்குச் சொல்கிறேன்? அகத்தியரும் போகரும் பிராமணர்களா? வேளாளரும் விஸ்வகர்மாவுமான இவர்கள் இந்த உபநயனம் பற்றி சொல்கிறார்கள் என்றால், யுகங்களாக நம் தேசத்தில் பிரம்மத்தை அறியும் வழியை எல்லா வர்ணத்தவர்களுமே கடைபிடித்தனர் என்று தெரிகிறது அல்லவா?

இது optional எல்லோருமே பிரம்மத்தை உணர வேண்டும் என்ற நியதி இல்லை. பிராமணனாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அதற்கான பயிற்சி எடுக்கவேண்டும் என்று புலப்படுகிறது. ஆக இந்த கோட்பாடுபடி  ஒரே குடும்பத்தில் எல்லா வர்ணத்தினர்களும் இருக்கலாம் . அல்லவா? இப்படி எல்லாம் flexible லாக அன்று இருந்துள்ளதை நினைத்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ராணுவம் போலீஸ் போன்ற துறைகளில் சேரவேண்டும் என்றால் உடற்கட்டு விளையாட்டு என்று தகுதி இருந்தால்தானே போகமுடியும்? அப்படித்தான் வாசிக்கால் கைகூட 'இடகலை-பிங்கலை-சுழுமுனை' என்பதை சிரசில்  தக்கவைத்திட போதிய பயிற்சியே இந்த உபநயன-பிராணாயாம -வாசியோக முறையில் வருகிறது என்பதற்கு இந்த பதிவை இட்டேன்.

இன்று பூணூல் போட்டவர்கள் எல்லோருமே தன்னுள் பிரம்மத்தை உணர்ந்து யோக்கியமாக இருக்கிறார்களா? என்னிடம் பதில் இல்லை. hahahah!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக