'படமும் பதிவும்' பகுதியில் ஹோமத்தீயில் ஷிர்டி சாய்பாபா பற்றி அண்மையில் பதிவிட்டேன். அதில் சிலருக்கு சந்தேகம் உள்ளது. அவர் சித்தரா, கடவுளா? ஒரு முஸ்லிம் துறவியை இந்துக்கள் வணங்குவது முறையா? இதுபோன்ற அந்நியமத மனிதரை வழிபட்டால் அடுக்காது, என்று எண்ணங்களைக் கொண்டோர் இன்னும் உள்ளனர். ஆனால் இவர்கள் secular, integrity என்று சமத்துவக் கொள்கை பேசுவார்கள்.
போகர் ஒரு சித்தர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் அவரே தன் முந்தைய அவதாரங்களில் பிரம்மன், திருமால், முருகன், இந்திரன், ராமன், கிருஷ்ணர், நபி என்று இருந்ததாக அவருடைய பாடல் மூலம் அறிந்தோம். இதிலிருந்து என்ன தெரிகிறது?
கலியுகத்தில் கடவுள் நேரடியாக பல கைகள், முகங்கள் கொண்டு அவதரிப்பதில்லை. ஏதோவொரு மதத்தில் மனிதனாகவே பிறப்பெடுத்து தெய்வீக நிலையை அடைந்து சமாதிக்கு செல்வதுதான் வழக்கமாக இருந்துள்ளது. அப்படித்தான் சித்தர் போகர் பல அவதார பிறப்புகளை எடுத்தார், எடுத்து வருகிறார்.
கலியுகத்தில் பல மகான்கள் அத்திரி மகரிஷியிடம் வளர்ந்து கல்வி பயின்று ஞானம் பெற்று உயர்நிலையை அடைந்துள்ளனர். அநேகமாக அவர்தான் care taker /guide ஆக இருந்துள்ளார் என்பது ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் வாயிலாக அறிகிறோம். போகரே எண்ணற்ற உருவங்களையும் ஜெனனங்களையும் எடுத்து கலியுகத்தில் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கிறார். உலகின் பிடிமானத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
ஷிர்டி சாய்பாபாவின் இயற்பெயர் என்ன, பெற்றோர் யார், என்ற விவரம் இதுநாள்வரை அறுதியிட்டு சொல்லும்படி இல்லை. ஒரு நூற்றாண்டாக இப்படித்தான், அப்படித்தான் என்று ஒருவாறு 'சாயி சரித்திரம்' சொல்லபட்டாலும், அது மர்மமே!
அவர்தான் மும்மூர்த்தி ஸ்வரூபமான தத்ராத்ரேயரின் அவதாரம். மும்மூர்த்தி என்றாலே அதில் போகரும் சம்பந்தப்டுகிறார், அல்லவா? பாரதம், அரேபியா, சீனா என்று எல்லா தேசங்களிலும் குரு போகரம்-சீடர் புலிப்பாணியும் அதே உறவு முறையிலேயே பல்வேறு வேடங்கள் ஏற்று வந்துள்ளனர். இதை பழைய பதிவில்கூட விளக்கமாகப் பார்த்தோம்.
ஷிர்டி மகான், குணங்குடியார் போன்றோர் முஸ்லிம் துறவி என்றால், நபியாக இருந்த போகரும் முஸ்லிம்தானே? இவரை மட்டும் பதினெட்டு சித்தர்களில் பிரசித்தமாக சொல்கிறோமே? அப்போ இதுவும் தவறுதானே?
எல்லா மதங்களிலும் இவர் ஜெனனம் எடுத்து அந்தந்த சமயத்தவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார். சிலுவைக்காரனும் போகனே என்கிறார் அகத்தியர். ஆனால் தீவிரவாதமும், மதமாற்றமும் மட்டுமே நம் கண்களுக்குப் படுவதால் நபியையும், ஏசுவையும் வெறுப்புடனே பார்க்கிறோம். கலியுக தோஷங்கள் என்பது அந்த மதத்தவர்களிடமும் உண்டு. ஆனால் முஸ்லிம் போகரையும், கிறிஸ்து போகரையும் நாம் ஏற்பதில்லை.
ஆகவே, ஷிர்டி சாய்பாபா அந்த ஹோமத்தீயில் வெளிப்பட்டு அருளினார். நாம் இதுகாறும் சிலையில், ஓவியங்களில் பார்த்த உருவத்துடன்தான் தெய்வங்கள் தீயில் வெளிப்பட்டது நம் சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே!