"எதிர்காலத்தில் ஷண்மார்க்க மதங்கள் ஒன்றுபட்டு ஒரு பெயரோடு விளங்கும்' என்று காலக்ஞானம் நூலில் ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் சொன்னார். அது 'இந்து' மதம் என்று பிற்பாடு வந்தது.
ஆனால் இன்றைக்கு ஒரே சமய மார்க்கத்தின் கீழ்வரும் ஒவ்வொரு பிரிவுகளும் தனித்தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்வது எப்படி என்று புரியவில்லை.
கன்னட பசவண்ணர் நிறுவிய வீரசைவ லிங்காயத் பிரிவும்; சாமித்தோப்பு வைகுண்டர் அய்யா வழியும்; வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அருட்பெரும் ஜோதியும், ஷண்மதத்திற்குள் வந்து விடுகிறதே! தனி போதனைகள் பின்பற்றும் எல்லா பிரிவுகளையும் தனி மதம் என்று அறிவிப்பது எதற்கு? ஒன்றும் விளங்கவில்லை. Hinduism கீழ் வரும் அத்தனை பிரிவுகளும் பஞ்சமுக பிரம்மத்திலிருந்து வந்ததே! எல்லாமே அதனுள் அடங்கிவிடுகிறது.
ஐக்கியப்பட்ட ஷண்மார்க்கத்தில் இருந்து கொண்டு நாத்திகம் பேச விதியில்லை என்பதால் 'கடவுள் மறுப்பு' என்று பெரியார் ஈவேரா சுவாமிகள் நிறுவிய நெறியை தனிமதமாக அறிவிக்க வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.
"நான் வரும்போது மற்ற சில்லறை மதங்கள் மறைந்து போய்விடும்" என்று காலக்ஞான நூலில் அவர் சொல்லியுள்ளார். அதாவது அவை தனியாக இயங்காமல் ஆதார மதத்தினுள் மறைந்துவிடும் என்று பொருள் கொள்ளலாம்.
'சுத்த சித்த சச்சிதானந்த சன்மார்க்க சமத்துவ சத்சங்கம்' என்ற ஒரு புது இயக்கத்தை தொடங்கிடலாமா? பேர்கூட டக்கரா இருக்கு.!
'சுத்த சித்த சச்சிதானந்த சன்மார்க்க சமத்துவ சத்சங்கம்' என்ற ஒரு புது இயக்கத்தை தொடங்கிடலாமா? பேர்கூட டக்கரா இருக்கு.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக